

சுப நிகழ்ச்சி, பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிச்சயதாா்த்தம் போன்ற பல்வேறு சுபகாரியங்களில் ஹைலைட்டாக மிட்டாய்கள் இடம்பெறுவது நடைமுறையில் வழக்கமாகும். மகிழ்ச்சியைத் தெரியப்படுத்த, இது ஒரு சிறப்பான பல்சுவை கொண்ட ஒரு வகை பொருளாகும். அதோடு, பல்வகை மிட்டாய்கள் நிறைய அளவில் கண்கவர் வண்ணங்களில் தயாாிக்கப்பட்டு மனதை கொள்ளை கொள்கிறது.
இனிப்பு வகைகளான மிட்டாய் ரகங்கள் பலருக்கும் விருப்பமான ஒன்றாகும். அத்தகைய இனிப்பு வகைகளை சிறியவர்கள் முதல் பொியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதை பெருமைப்படுத்தவும், மிட்டாய்களின் வரலாறை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 4ம் நாள் தேசிய மிட்டாய் தினம் (National Candy Day) கொண்டாடப்படுகிறது.
13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதன்முதலாக மிட்டாய் என்ற வாா்த்தை பயன்பாட்டுக்கு வந்தது. பழைய பிரெஞ்ச் வாா்த்தையில் தொடங்கப்பட்டு பாரசீக Qand மற்றும் Qandi கரும்பு சர்க்கரையிலிருந்து பெறப்பட்டது. இந்த நாள் ஒரு சர்க்கரைப் பண்டிகையை குறிப்பதாகும். அந்தக் காலத்தில் சமநிலையற்ற உணவு உட்கொள்வதால் ஏற்படும் சொிமானக் கோளாறுகளால் சிரமப்படும் நபர்களுக்கு மாத்திரைகள் மிட்டாய் வடிவில் கொடுக்கப்பட்டன.
தொழில் நுட்பம் வளர வளர பல்வேறு நிறுவனங்கள் பல வகை நிறம் மற்றும் சுவைகளுடன் மிட்டாய்கள் தயாாித்து சந்தைப்படுத்தின. பழங்காலத்தில் தேனீக்கள், பழங்கள், கொட்டைகள் கொண்டு மிட்டாய்கள் தயாாிக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு கரும்பில் இருந்து சர்க்கரையை சுத்திகரிக்கும் முறை பொ்சியாவில் கண்டுபிடிகப்பட்டது. நவீன தொழிற்புரட்சியால் நிறைய கம்பெனிகள் மிட்டாய்கள் தயாாித்து சந்தைப்படுத்தியதில் பல நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக வளர்ந்தன.
எகிப்து, சீனா, கிருஸ் பண்டைய சமூகங்கள் நவீன தயாாிப்புகளை மேற்கொண்டன. அமொிக்கா பஞ்சுமிட்டாய் ரகங்களை தயாாித்தது. அதோடல்லாமல், லாலிபாப், பைவ் ஸ்டாா், டைாிமில்க், சாக்கோ மஞ்ச் பொ்க் போன்ற பல வகை உயர் வகை ரகங்களும் பல வடிவங்களில் தயாாிக்கப்பட்டு சந்தைக்கு வந்தன.
சர்வதேச அளவில் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ரகங்களை பல்வேறு நிறுவனங்கள் கண்டுபிடித்தாலும், ஐந்து பைசாவுக்கு வாங்கி சாப்பிட்ட குச்சி மிட்டாயில் இருக்கும் அலாதி மகிழ்ச்சி ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிடும் கிண்டர் ஜாயில் இல்லையே! அதேபோல, கிராமப்புறங்களில் குடிசை தொழில்களாக பல வருடங்களாக பாரம்பர்யமாக தயாாிக்கப்படும் கடலை மிட்டாய் தேன் மிட்டாய், இஞ்சி மிட்டாய், கல்கோனா, அனாா்கலி மிட்டாய், நாா்த்தவில்லை மிட்டாய், எள்ளு மிட்டாய், பல்லி மிட்டாய், அரிசி மிட்டாய், சவ்வு மிட்டாய், ஜஸ்ட் ஜல்லி, நூல் கட்டி சுற்றும் மிட்டாய், படிக்கல் மிட்டாய், கையில் சுற்றி கட்டப்படும் வாட்ச் மிட்டாய், புளிப்பு மிட்டாய் இப்படி பட்டியல் தொடர்ந்து கொண்டே போகுமே!
ஆக, என்னதான் நவீன மிட்டாய்கள் வந்தாலும் பள்ளிக்கூடங்களில் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் நமது தேசியக்கொடி ஏற்றியதும் வரிசையில் நிற்க வைத்து வழங்கப்படும் பெப்பர்மென்ட் வகையின் ஆரஞ்சு சுளை, நாா்த்தைவில்லை மிட்டாய்களை மறக்க முடியுமா?! ஆக, தேசிய மிட்டாய் தின நாளில் ஆரோக்கித்திற்கு ஊறு விளைவிக்காத பற்களுக்கு பாதுகாப்பு தரும் மிட்டாய்களை சாப்பிட்டு மகிழ்வோம்.