உலகமே கொண்டாடும் சாண்ட்விச் தினத்தின் பின்னணி என்ன?

நவம்பர் 3, உலக சாண்ட்விச் தினம்
World Sandwich Day
Sandwich
Published on

பொதுவாக, மனித வாழ்க்கையின் தினசரி தேவை, உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம், வாழ பணம், நோய் நொடியில்லா ஆரோக்கியம், நல்ல தூக்கம், அபரிமிதமான சந்தோஷம், நல்ல குடும்பம் அமைந்தாலே சிறப்புதான். அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது உணவு. அது பசிக்குக் கிடைக்கலாம், அதே நேரம் ருசிக்காகவும் தேடலாம். அந்த நிலையில், உணவு தயாாிப்பது என்பது ஒரு கலை. அதில் சுவைகள் பலகூட்டி பண்டிகைகளுக்கென பல்வேறு வகைகளிலும், பல்வேறு சுவைகளிலும் தயாா் செய்யப்படுவதும் வாடிக்கை.

சிலருக்கு சில உணவுகள் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. இதில் அசைவமும், சைவமும் அடங்கும்! அந்த வகையில் பல்வேறு வயது மற்றும் ஏனைய  தரப்பினா்களிடையே எளிதில் சாப்பிட உகந்த உணவுகளில் முக்கிய இடம் பிடித்து முன்னிலை வகிப்பது சாண்ட்விச் எனும் உணவாகும். பல்துறை உணவான சாண்ட்விச்சின் சுவை மற்றும் அதன் அருமை, பெருமைகளை அனைவரும் விரும்பும் வகையில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும் தருணத்தில்,  பிரதி வருடம் நவம்பர் மாதம் 3ம் நாள் உலக சாண்ட்விச் தினமாகக் (National Sandwich Day) கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கல்லறை திருவிழா: அன்புக்குரியவர் ஆன்மா சொர்க்கம் செல்ல செய்யும் வழிபாடு!
World Sandwich Day

இது உலகெங்கிலும் பல்வேறு சுவைகளில் மற்றும் ஏனைய கலாசாரங்களில் ருசித்து, ரசித்து உண்பதின் பெருமையை உலகமே அறியும் வகையில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அதுவே இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமாகிறது. இதன் சுவை பலவிதங்களில் பல்வேறு இடங்களில் எளிதில் தயாாிக்கப்படுவதுடன், ஆர்டர் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் நமது இல்லம் தேடி வருகிது. இதனில் பலருக்கு இதன் வடிவத்தைப் பாா்த்தால் சைவமா? அசைவமா? என்ற சந்தேகம் எழலாம். அது அவரவர் தேவைக்கேற்ப விருப்பங்களின் அடிப்படையில் தயாாிக்கப்படும் உணவாகும். இது சிறியவர் முதல் பொியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவாகவே பலராலும் நேசிக்கப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் ‘சாண்ட் விச்’ என அழைக்கப்படும், நான்காவது ஏர்ல் ஜான் மாண்டேகு என்பவரின் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த துாித உணவானது உலக அளவில் பலராலும் விரும்பப்படுவதே இதன் சிறப்பாகும். இந்த உணவு பல்துறை உணவின் பன்முகத்தன்மையை பல நிலைகளில்  வெளிப்படுத்துகிறது எனலாம்.

இதையும் படியுங்கள்:
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கையின் இரு கண்களாகக் கருதுவோம்!
World Sandwich Day

மாண்டேகு என்பவர் ஒரு சூதாட்டக்காரர். அவர் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்பது பழக்கமாம். அந்த வகையில் இறைச்சியை ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவராம். அதை நினைவு கூறும் விதமாகவே சாண்ட் விச் தினம் பிரபலமானதாகக் கூறப்படுவதோடு, கொண்டாடப்படுகிறது. சாண்ட்விச்சானது சமையல் அனுபவத்தையும் பயணத்தின் மகிழ்வையும் தருகிறதாம். உலகெங்கிலும் உணவுப் பிாியர்கள் ஒன்றுகூடி பல்வேறு கலவைகளில் சாண்ட் விச் தயாார் செய்து சாப்பிடுவாா்களாம். இது பிரம்மாண்டமானதாகவும், எளிய முறையிலும் தயாாிக்கப்படுகிறது.

அண்டை நாடுகளான அமொிக்கா, பிரான்ஸ், வியட்நாம், அர்ஜண்டினா மற்றும் நமது  இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு சுவைகளில் ஏகப்பட்ட கலவைகளில் விதவிதமாக சாண்ட விச் தயாா் செய்யப்படுகிறது. இது நகரத்திற்கு நகரம் பல்வேறு பெயர்களில் தயாாிக்கப்படுகிறது. வடை பாவ், தந்துாி, பனீா் சாண்ட் விச், டபேலி போன்ற பெயர்களிலும் சுவையுடன் உலா வருகிறது. இதனை சுவையுடன் செய்யத் தொியாதவர்கள் வெளியில் ஆா்டர் கொடுத்து சாப்பிடுவதும் தொடா்கதையே! அனைத்து வயதினர்களுக்கும் பிடித்தமான உணவான இந்த சாண்ட் விச் தினத்தில்அதை  உண்டு மகிழலாமே! ருசி என்பதால் ஆரோக்கியத்திற்கு பங்கம் வராமல் சாண்ட் விச் எனும் உணவை உண்டு சந்தோஷமடையலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com