

அந்தக் காலத்தில் ஒரு ஊாிலிருந்து மற்றொரு ஊருக்கு செய்தி அனுப்ப புறாக்கள் காலில் செய்தியைக் கட்டி அனுப்பும் நிலை மன்னர்கள் காலத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து காலப்போக்கில் ஒற்றர்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அதன் பிறகு தபால் தந்தி சேவைகள், தொலைபேசி, அதனை தொடர்ந்து வானொலி, பின்னர் விஞ்ஞானம் வளர வளர தொலைக்காட்சி வரத் தொடங்கியது. அது தூா்தர்ஷன் என்ற பெயரில் தொலைக்காட்சி சேவையைத் தந்தது.
அப்போது அதிக நேரம் அனைத்துத் தகவல்களும் ஹிந்தி மற்றும் தமிழ் அல்லா பிற மொழிகளில் தனது சேவையை வழங்கியது. அதன் மூலம் நாம் அனைவரும் நாட்டு நடப்புகளை தொிந்து கொள்ள உதவியது. தொலைக்காட்சி என்பது ஒரு சமூக ஊடகமாகும். பல்வேறு நாடுகளுக்கிடையே கலை, இலக்கியம், கலாசாரம், நாட்டு நடப்புகள், தொடர் நாடகங்கள் அதன் தமிழாக்கம் இப்படிப் பல்வேறு நிகழ்வுகளை தரும் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகும்.
அப்போதெல்லாம் ஒரு தெருவிற்கு ஒரே ஒரு தொலைக்காட்சி பெட்டிதான். அதிலும் தூா்தர்ஷனில் பிரதி வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் மட்டும் இரவு நேரங்களில் காட்டப்படும். அதைப் பாா்க்க தெருவே அந்த வீட்டின் முன்பாக கூட்டமாகப் பாா்த்து ரசிப்பதும் நடந்துள்ளது.
ஆக, தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் 1996ல் நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் பரிந்துரையின் போில் ஐக்கிய நாடுகள் சபையானது நவம்பர் 21ம் நாளை உலகத் தொலைக்காட்சி தினமாக (World Telivison Day) அறிவித்தது.
பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பல்வேறு வகையான சம்பவங்கள், முக்கிய நிகழ்வுகள் இவற்றைப் பொதுமக்கள் பகிா்ந்துகொள்ளும் விதமாக1977 முதல் ஒவ்வொரு ஆண்டும் உலகத் தொலைகாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு,1991வரை தொலைக்காட்சிகள் பரவலாக்கப்படும் நிலைக்கு வந்தது. அதோடு, அரசுக்கு சொந்தமான தூா்தர்ஷன் மட்டுமே இயங்கி வந்த நிலையில், 1991க்குப் பிறகு வெளிநாட்டு நிறுவனங்கள் தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில், அதன் ஆதிக்கம் மிகப்பொிய நெட் வொா்க் என்ற ரீதியில் மிகப்பொிய ஜாம்பவனாக விஸ்வரூபம் எடுத்து வருவது விஞ்ஞானத்தின் அபரிமித வளா்ச்சியாகவே பாா்க்கப்படுகிறது.
அயல் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் தொலைக்காட்சிகள் அடுத்த நொடியே ஒளிபரப்புவதும் சிறப்பான வளா்ச்சியே ஆகும். அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சியை பின்னுக்குத் தள்ளும், நிலையில் செல்போன்கள் ஆதிக்கம் அதை முந்தி வருவதும் பொிய விஷயமாகும்.
ஆக, தொலைக்காட்சிகள் பெருமளவில் பொருளாதாரம், அண்டை நாடுகள், மாநிலங்களின் தகவல்கள், கேளிக்கைகள், பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தருவது பெருமையாக இருந்தாலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மெகா தொடர்களில் வன்முறை, கலாசார சீரழிவிற்கான பொழுதுபோக்கு அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நிலையில் தணிக்கை செய்ய வேண்டியது அவசியமாகிறதே!