

மனிதனை பலவித நோய்கள் தாக்குகின்றன. அவற்றில் எளிதில் தீா்க்க வல்லதும் அதேநேரம் பாதிப்பு அதிகமாகவும் உள்ள நோய் வகைகளில் நரம்பு சம்பந்தமான வியாதிகளாக, மனிதனை பல வழிகளிலும் செயலிழக்கச் செய்யும் நோய்களில், வலிப்பு நோயும் ஒன்றாகும். இது மனித மூளையோடு தொடர்புடைய ஒரு நோயாகும். இந்த நோய் வயது வித்தியாசம் பாா்க்காமல் பலரையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடுகிறது என்பதே நிஜம்.
மூளைக் கோளாறும் அதன் தாக்கமும் இந்த நோயை தீவிரப்படுத்துகின்றன. இந்த வலிப்பு நோயானது, உலக அளவில் 50 மில்லியன் மக்களை பாதித்திருப்பதாக ஆய்வுகளில் தொிய வருகிறது. அதோடு, அதில் 80 சதவிகிதம் பேர் வளரும் நாடுகளைச் சோ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிப்பு நோய் விஷயத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. ஆக, இந்த நோயினை கட்டுப்படுத்துவது தொடா்பான ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வை உண்டாக்கும் (Epilepsy Foundation Of India) வகையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 17ம் நாள் தேசிய வலிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை இந்திய வலிப்பு நோய் அறக்கட்டளை 2009ல் துவங்கி வைத்தது. மும்பையில் டாக்டர் நிா்மல்குமாா் என்பவர் இதனை துவங்கி வைத்தாா். இந்த நோயானது மூளையின் ஒரு பக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அடிக்கடி இழுப்புகளை உண்டாக்கக்கூடிய நாள்பட்ட மூளைக்குறைபாடே இதற்கான காரணமாகும்.
மூளை செல்களான நியூரானில் திடீரென ஏற்படும் அதிா்வுகளே வலிப்பு மற்றும் உடல் பாகங்களில் செயலிழப்பு போன்ற நோய்களாக வருகின்றன. அதோடு, அசாதாரண நிலை, மயக்கம், படபடப்பு, நடுக்கம், திடீரென மயங்கி கீழே விழுவது, ஒரு பக்கமாகப் பாா்ப்பது, முகம் மற்றும் ஏனைய ஒருசில உடற்பாகங்களை செயலிழக்கச் செய்து உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவது, உடல் நடுக்கம், செயலிழத்தல், சுவாசப் பிரச்னை என இப்படிப் பலவிதமான பாதிப்புகளில் ஒருசில சங்கடங்களை வரவழைத்து விடும்.
இதற்கான தீா்வு நரம்பு மண்டல சோதனை, ஸ்கேன் செய்தல், தடுப்பூசி போடுதல், மரபணு சோதனை, இரத்தப் பரிசோதனை போன்ற சிகிச்சைகள் மூலமாக ஓரளவு குணப்படுத்தலாம். அதற்கான நடைப்பயிற்சி, கைகால் அசைவுப் பயிற்சி, சரிவிகித உணவு முறை, அதிக சிந்தனையில்லாமல் பாா்த்துக்கொள்வது, நல்ல உறக்கம் தியானம் போன்றவையே அவசியத் தேவையாகும்.
தவறாமல் மருந்து மாத்திரைகள் சரிவர எடுத்துக்கொள்வது, அத்துடன் இறை நம்பிகை இவ்வளவும் இருந்தால் இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படலாம். ஆக, மேற்படி தினத்தில் யாரும் இந்நோயால் பாதிக்கப்படாமலும், வலிப்பு நோய்களில் இருந்து மீளவும், ஆரோக்கியமான வாழ்வு வாழவும் இறைவனை பிராா்த்திப்போம்!