

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 16ம் தேதி ஐக்கிய நாடுகளின் சர்வ தேச சகிப்புத் தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே சகிப்புத் தன்மை இன்மையால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் சமூகத்தில் சகிப்புத்தன்மை வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது.
1945ல் உருவாக்கப்பட்ட யுனெஸ்கோவினுடைய ஐம்பதாவது ஆண்டு நிறைவை குறிக்கும்வண்ணம், 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1996ம் ஆண்டிலிருந்து சர்வதேச உலக சகிப்புத்தன்மை தினம் நவம்பர் 16ல் கொண்டாடப்படுகிறது.
1995ல் சகிப்புத் தன்மைக்கான ஐ.நா.வின் ஆண்டு மற்றும் மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாள் ஆண்டை குறிக்கும் விதமாக யுனெஸ்கோ அமைப்பானது, அமைதி மற்றும் சகிப்புத் தன்மையின் மேம்பாட்டிற்கான விருதை தோற்றுவித்தது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் 16ல் சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தன்று அமைதி மற்றும் சகிப்புத்தன்மை மேம்பாட்டிருக்கான யுனெஸ்கோ மதன் ஜீத் சிங் பரிசு வழங்கப்படுகிறது. அமைதி மற்றும் சகிப்பு தன்மைக்காக சிறந்த முறையில், குறிப்பாக மெச்சத்தகு வண்ணம் பங்களிப்பு வழங்கிய அமைப்புகள், நபர்கள், நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
1996ல் உலக சகிப்புத்தன்மை நாள் கல்வி, அறிவியல், கலாசாரத்தை வளர்க்க ஐ.நா.வின் ஒரு அங்கமாக யுனெஸ்கோ நிறுவனம் 1945ல் உருவாக்கப்பட்டது இந்நிறுவனத்தின் ஐம்பதாவது ஆண்டை சிறப்பிக்கும் வழிகளில் வருங்கால தலைமுறையினரைக் கருதி அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் 1995ல் ஐ.நா பொது சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 1996 முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உலக சகிப்புத்தன்மை நாளை பல நாடுகள் கடைபிடிக்கின்றனர்.
நவம்பர் 16 சர்வதேச சகிப்புத்தன்மை தினமான அன்று பலவகை மனித நடத்தைகள் பல நாடுகளின் கலாசாரங்கள், அடிப்படை சுதந்திரம் ஆகியவை இந்த உலகத்தை மிகவும் அழகாக மாற்றுகின்றன என்பதை புரிந்து கொண்டு, தற்போதைய காலகட்டத்தில் உலக சமூகங்களில் அதிகரித்து வரும் வன்முறைகள் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எனவே, சகிப்புத்தன்மை தார்மீக கடமையாக மட்டுமல்லாமல், இன்றைய காலகட்டத்தின் தேவையாகவும் இருக்கிறது.
சகிப்புத்தன்மை குறிப்புகள்:
குறைந்த சகிப்புத்தன்மை பலருக்கு ஒரு பெரிய பிரச்னை. குறிப்பாக, பணியிடத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. ஆனால், இது ஒரு மரபு பிரச்னை அல்ல. ஒரு வியாதியும் இல்லை.
இது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னை. மனித உடலில் சகிப்புத்தன்மையின் அளவை பாதிக்கும் பல உடல், உளவியல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் உள்ளன. எனவே, இந்தக் காரணங்களில் கவனம் செலுத்துவது வேலையை சுலபமாக செய்யக்கூடும். இதில் ஊட்டச்சத்து முக்கியமானது, சமச்சீர் உணவு, ஆரோக்கியமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சிகள் மற்றும் தினசரி உடல் செயல்பாடுகள் ஆகியவை சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்.