இடது கை பழக்கம் உடையவர்கள் ஏன் வித்தியாசமா இருப்பாங்க? அறிவியல் சொல்லும் காரணம் இதுதான்!

ஆகஸ்ட் 13: உலக இடது கை பழக்கம் உடையோர் தினம்!
International Lefthanders Day
International Lefthanders Day
Published on

இடதுகை பழக்கம் உடையவர்களுக்கான சர்வதேச நாள் ஆகஸ்ட் 13, இடது கை பழக்கம் உடையவர்களை குறிக்கும் மருத்துவ சொல்லான சினிஸ்ட்ராலிட்டி என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இடது கை பழக்கம் உடையவர்களை எபிஜெனிடிக் என ஆராய்ச்சியாளர்கள் குறிக்கிறார்கள். இதனை ஜெனிடிக், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் கலவை என்கிறார்கள். இடது கை பழக்கம் உடையவர்கள் உலகம் முழுவதிலும் மொத்தம் 10 முதல் 12 சதவீதத்தினர் உள்ளார்கள்.

கடந்த 1990 ஆம் ஆண்டு இடதுகை பழக்கம் உள்ளவர்கள் ஒன்று கூடி இடதுகை பழக்கம் உடையவர்கள் கிளப் என்னும் பெயரில் ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தினர் இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக இடது கை பழக்கம் உடையோர் தினமாக 1992 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கின்றனர்.

அது முதல் அவர்களின் தனித்துவத்தை உணர்த்தும் விதமாக போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். விளையாட்டுத்துறை, விஞ்ஞானம் ,பட்டிமன்றம் என அவர்கள் சில துறைகளில் நுட்பமாக செயல்பட்டு வெற்றிவாகை சூடுவார்கள். மேலும் இடது கைபழக்கம் உள்ளவர்கள் பல பொருட்களை கையாளும் போது சங்கடமாக உணர்வார்கள்.

இடது கை பிரபலங்கள்:

உலக அளவில் பல்வேறு பிரபலங்கள் இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் சற்று ஆச்சரியம் அளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு மாற்றினால்? வேண்டாம் அப்படி பண்ணாதீங்க!
International Lefthanders Day

நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இந்தியாவில், தேசத்தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, ரத்தன் டாட்டா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ,பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், பாலிவுட் இயக்குநர் சன்னி லியோன், மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ், ஆப்பிள் போன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஆகியோர் இடது கையால் எழுதும் அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள்.

இன்னும் ஏராளமான உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள் எல்லாம் இடது கை பழக்கம் உடையவர்கள் இருக்கின்றனர்.

மருத்துவ காரணம்

இடது கை பழக்கம் பிறவியிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. பெருமூளை, சிறுமூளை மற்றும் மெடுல்லா ஆப்லங்கட்டா என மூன்று பகுதிகளை மனித மூளை கொண்டு உள்ளது. இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனிச்சிறப்புகள் தெரியுமா?
International Lefthanders Day

பெரும்பாலானோருக்கு இடது பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கி இருப்பதால் அவர்களுக்கு வலது பக்கம் உறுப்புகள் சிறப்பாக செயல்படும். சிலருக்கு வலது பக்கம் மேலோங்கி இருப்பதால் இடது பக்க பழக்கம் ஏற்படுகிறது. இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com