
உலக இதய சுகாதார கூட்டமைப்பினால் செப்டம்பர் 29ம் நாள் உலக இதய நாளாகக் கொண்டாடப்படுகிறது. மாரடைப்பு நோயினால் ஏற்படும் திடீர் மரணத்தையும் மற்ற இதய நோய்களைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு, புகையிலை, மது அருந்துவதைத் தவிர்ப்பது ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதவை. கடந்த ஆண்டு பாரிசில் உலக இதய கூட்டமைப்பு மாநாட்டில் இருநூறுக்கும் மேலான இதய நோய் சங்கங்களின் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளும் நவீன மருத்துவ சக்தி முறைகளின் பரிசோதனைகள் பற்றிய கலந்தாய்வுகளும் நடைபெற்றன.
இதய செயலிழப்பை தடுக்க ஏ.ஆர்.என்.ஐ. எனப்படும் 'ஆர்னி' ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க 'இன்கிளிசிரான்' என்ற மருந்தும் கிடைக்கிறது. வருடத்திற்கு இரண்டு முறை ஊசி மூலம் இது எடுத்துக்கொள்ளப்படுகிறது. ‘ஸ்டேடின்’ என்ற கொலஸ்ட்ராலை குறைக்கும் மருந்தினால் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பக்கவிளைவுகள் ஏற்படும்போது பெம்பே டோயிக் அமிலம் என்ற வாய்வழி மாற்று மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
இதயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஷாக் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இப்போது மகா தமனி வால்வு சுருக்க நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மற்ற இதய வால்வுகளான ட்ரெகஸ்பிட் மற்றும் மிட்ரல் சுருக்கம் உள்ள நோயாளிகளுக்கும் பயன்படுகிறது. மிட்ரல் வால்வு கசிவுக்கு மிட்ரா வால்வு கிளிப் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதயத்தில் இருக்கிற வால்வுகளான ஈறிதழ் வால்வு என்ற மித்ரா வால்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூவிதழ் என்ற ட்ரைகஸ்பிட் வால்வும் ஒரு பிரத்யேக முறையில் புதுப்பிக்கப்படுகிறது.
இதய ஊடுருவல் சிகிச்சையில் வெறும் கரோனரி இரத்தக்குழாய் அடைப்பை நீக்க ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையும் மேற்கொள்ளலாம். எந்த இதய சிசிச்சைக்கும் ஊடுருவல் பரிசோதனை முறை மிகச் சிறந்தது. இதனால் பிரச்னையை துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை செய்யலாம்.
வளர்ந்து வரும் மற்ற இதய சிகிச்சைகள் மரபணு கண்டறிந்து இங்கி மிக் ஸ்டெம் செல் சிகிச்சை, இங்கி மிக் கார்டியோ மாயோபதி என்ற இதய வீக்கம் மருந்தினால் குணமாகாத நிலையில் ரிப்ராக்டரி ஆஞ்சியோவிற்கான நீண்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில் எம்.ஆர்.என்.ஏ. என்ற இந்த மரபணு சிகிச்சைகள் ஆய்வில் உள்ளன.
இதய நோய் சிகிச்சைக்கு தற்போது ஏராளமான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அனைத்துமே வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும் வழிமுறைகள். எனவே, ரத்தப் பரிசோதனை உட்பட உடல் நலத்திற்குத் தேவையான அனைத்து பரிசோதனைகளையும் சீரான இடைவெளியில் மேற்கொண்டால் இதய பிரச்னைகளில் இருந்து முற்றிலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
முறையான உடற்பயிற்சி, உணவுகள் எடுத்துக்கொண்டு உடல் நிலையை கவனமாகப் பார்த்து கொண்டால் இதய நோயிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற முடியும்.