

ஹைபோ தைராய்டிசம் அல்லது செயல்படாத தைராய்டு என்பது தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோன்ங்களை உற்பத்தி செய்யாத ஒரு கோளாறு ஆகும்.
இந்த ஹார்மோன்கள் வளர் சிதை மாற்றம், ஆற்றல், அளவுகள் மற்றும் பல முக்கியமான உடலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. ஹைப்போ தைராய்டிசத்திற்கு சிகிச்சை அளிப்பதில் மருந்து ஒரு பெரிய பகுதியாக இருந்தாலும் தைராய்டு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு உணவு முறையும் மிகவும் முக்கியமானது.
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவு என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
தைராய்டு என்பது பட்டாம்பூச்சி போல தோற்றம் அளிக்கும் ஒரு சிறிய சுரப்பியாகும். இது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. இது தைராக்ஸின் (T4) மற்றும் T3 போன்ற ஹார்மோன்களை உருவாக்குகிறது. அவை உடலின் வெப்பநிலை, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவை கட்டுப்படுத்துகின்றன.
ஒருவருக்கு ஹைபோ தைராய்டு டிசைன் இருக்கும்போது அவர்களின் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாது. மேலும் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. இதற்குள்ள அறிகுறிகள்.
சோர்வு, எடை அதிகரித்தல், சோகம், குளிரை தாங்க முடியாமல் இருப்பது, கழிப்பறைக்கு செல்ல முடியாமல் இருப்பது, மெலிந்து கொண்டிருக்கும் முடி, உலர்ந்த சருமம். போதுமான அயோடின் கிடைக்காதது.
சில மருந்துகள் அல்லது தைராய்டு அகற்ற அறுவை சிகிச்சை ஆகியவை தைராய்டிசத்திற்கு பொதுவான காரணம் ஆகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உணவை கவனமாக சாப்பிட வேண்டும்.
சோயா பொருட்கள்:
சோயாவில் உள்ள ஐசோஃபிளேவோன்கள் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து உறிஞ்சுவதை உடல் கடினமாக்கும். சோயாபால், டோஃபு, சோயா புரதத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது.
பசையம் உள்ளவை:
கோதுமை, பார்லி, கம்பு தைராய்டு உள்ள சிலருக்கு எதிரி வினைகளை ஏற்படுத்தக்கூடும். சில சூழ்நிலைகளில் பசையம் இல்லாத உணவு வீக்கத்தை குறைக்க உதவும்.
பச்சை காய்கறிகள்:
ப்ரோக்கோலி, காலிபிளவர், முட்டை கோஸ், முளை கட்டியவற்றை பச்சையாக சாப்பிட்டால் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை உணவுகள், வறுத்த உணவுகள், காஃபின், செயற்கை இனிப்புகள், அதிகப்படியான நார்ச்சத்து உள்ள உணவுகள், மது, சில குறிப்பிட்ட பழங்கள் - பீச், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, இதனை அதிகமாக சாப்பிடுவதால் தைராய்டு சரியாக வேலை செய்வதை நிறுத்தி விடும். அவற்றில் கோயிட் ரோஜன்கள் உள்ளன.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
அயோடின் அதிகம் உள்ள உணவுகள், கடற்பாசி ஆகியவை அடங்கும்.
செலினியம் அதிகம் உள்ள உணவுகள், பூசணி விதைகள், சிப்பிகள், பருப்பு வகைகள், புரத உணவுகள், சமைத்த காய்கறிகள், கேரட், பெர்ரி இதனை எல்லாம் தெரிந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் கார்த்தி சொன்ன ஆலோசனைகள்.