ஐசிசியின் அதிரடி மாற்றம்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 'சூப்பர் 7', 'சூப்பர் 10' புதிய விதிகள்!

2027 ஒருநாள் மற்றும் 2028 டி20 உலகக்கோப்பை தொடர்களில் வரவிருக்கும் முக்கிய திருத்தங்கள்.
ஐசிசி விதிகள் - ICC World Cup Rules
ஐசிசி விதிகள் - ICC World Cup RulesAI Image
Updated on

டி20 உலகக் கோப்பையில் ‘சூப்பர் 8’க்கு பதிலாக 2028 முதல் ‘சூப்பர் 10’ அறிமுகமாகிறது. 20 அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிந்து விளையாட, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 10க்கு முன்னேறும். அங்கு இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று, முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு செல்வதுடன், 2, 3வது இட அணிகள் எலிமினேட்டர் நாக்அவுட் மூலம் மீதமுள்ள அரையிறுதி இடங்களைப் பெறும்.

கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் மிகப்பெரிய தொடர்களாக சர்வதேச அளவில் உலகக்கோப்பை, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. இந்த தொடர்களை இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) நடத்துகிறது.

தொடரில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் விறுவிறுப்பாக கடைசி கட்டம் வரை கொண்டு செல்லவும் , ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றதாக மாற்றும் நோக்கில் ஐசிசி சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

டி20 தொடரை மாற்றியமைக்கும் புதிய ஐசிசி விதிகள்:

ஐசிசி கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிகளின் மூலம் அர்த்தமில்லாத போட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வகையில் புதிய வடிவம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு 2027 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் போது அதில் 14 அணிகள் பங்கேற்கும்.

இதில் லீக் சுற்றுகள் முடிந்து 12-வது இடத்திலும், 13 வது இடத்திலும், 14வது இடத்திலும் இருக்கும் 3 அணிகள் மட்டும் தனியாக ஒரு தகுதி சுற்றில் முதலில் விளையாடும். 12,13,14 இடதில் இருக்கும் மூன்று அணிகளில் வெற்றி பெறுகின்ற 'ஒரே ஒரு அணி 'மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வகையில் புதிய திருத்தத்தை ஐசிசி கொண்டு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகக்கோப்பை தோல்வி: ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நீடிப்பாரா? பிசிசிஐ அதிரடி முடிவு!
ஐசிசி விதிகள் - ICC World Cup Rules

அதன் பிறகு இருக்கும் 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். உதாரணமாக ஏ, பி என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருந்தால் அதில் ஏ பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளும், பி பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளும், ஏ, பி என இரண்டு பிரிவுகளிலும் அடுத்த சிறந்த அணியையும் சேர்த்து மொத்தம்' 7'அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்று 'சூப்பர் 7' சுற்று என அழைக்கப்படும்.

டி20 உலகக் கோப்பையிலும் முக்கிய மாற்றம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலக கோப்பையில் நீண்ட நாட்களாக பார்த்து வந்த வடிவத்தை ஐசிசி மாற்றி உள்ளது. இதுவரை டி20 உலகக் கோப்பை தொடர்களில் 'சூப்பர் 8 'சுற்று நடைபெற்று வந்தது. தற்போது ஐசிசி அறிவித்துள்ள புதிய வடிவத்தின்படி 'சூப்பர் 8 'சுற்று க்கு பதிலாக 2028 உலகக் கோப்பை முதல் 'சூப்பர் 10' சுற்றுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

ஐசிசி விதிகள் - ICC World Cup Rules
ஐசிசி விதிகள் - ICC World Cup Rules

அதன்படி 20 அணிகள் ஐந்து பிரிவுகளாக முதல் சுற்றில் பிரிக்கப்பட்டு விளையாடும். இந்த ஐந்து பிரிவுகளிலும் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மொத்தம் 10 அணிகள் சேர்ந்து' சூப்பர் 10' சுற்றுக்கு முன்னேறும்.

அதிலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி தற்போதைய விதிகளின்படி நேரடியாக அரை இறுதிக்கு சென்று விடும். இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியும் மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணியும் 'எலிமினேட்டர்', ' நாக் அவுட் 'போட்டிகளில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி மீதமுள்ள இரண்டு அரை இறுதி இடங்களை கைப்பற்றும்.

இந்த புதிய வடிவம் டி20 உலகக்கோப்பை தொடர், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் அதிக அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் 2028 டி20 உலக கோப்பைக்கான தகுதி சுற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இணை உறுப்பு (Associate) நாடுகளுக்கு சிறப்பு வாய்ந்த உலக கோப்பையில் இடம்பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என ஐசிசி நம்புகிறது.

இதையும் படியுங்கள்:
128 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: இந்திய அணிக்குக் காத்திருக்கும் வரலாற்று வாய்ப்பு!
ஐசிசி விதிகள் - ICC World Cup Rules

மாற்றங்கள் மூலம் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரும் ,டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரும் விறுவிறுப்பாக நடைபெறும் எனவும், உறுப்பு நாடுகள் பங்கேற்கும் வகையில் வடிவம் மாற்றியமைக்கப் பட்டுள்ளதால் கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்து வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற ஐசிசி யின் அறிவிப்பை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உலகக்கோப்பைத் தொடரின் புதிய வடிவங்கள் மற்றும் சுற்றுகள் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவதன் மூலம், வரவிருக்கும் சர்வதேச போட்டிகளின் நாக்-அவுட் வாய்ப்புகளையும் அணிகளின் தகுதிபெறும் சூழலையும் மிகத் துல்லியமாகக் கணித்து மகிழலாம்.

logo
Kalki Online
kalkionline.com