

ஆண்டின் பதினொன்றாவது மாதமான நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பல சர்வதேச முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் நவம்பர் 1-ம்தேதி முதல் 30ம் தேதி வரை வரும் சர்வதேச முக்கிய தினங்கள் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
நவம்பர் 1 - உலக வேகன் தினம்(World Vegan Day), அனைத்து புனிதர்கள் தினம்.
நவம்பர் 2 - அனைத்து ஆன்மாக்களின் தினம், உலக ஜெல்லிமீன் தினம்.
நவம்பர் 3 - உலக சாண்ட்விச் தினம்.
நவம்பர் 5 - உலக சுனாமி விழிப்புணர்வு தினம்.
நவம்பர் 6 - போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம், தேசிய நாச்சோஸ் தினம்.
நவம்பர் 7 - குழந்தை பாதுகாப்பு தினம், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.
நவம்பர் 8 - சர்வதேச கதிரியக்க தினம், உலக நகர்ப்புற தினம்.
நவம்பர் 9 - தேசிய சட்ட சேவைகள் தினம், உலக சுதந்திர தினம்.
நவம்பர் 10 - அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம், உலக பொது போக்குவரத்து தினம், உலக நோய்த்தடுப்பு தினம்.
நவம்பர் 11 – போர் நிறுத்த நாள், தேசிய கல்வி தினம்.
நவம்பர் 12 - உலக நிமோனியா தினம்.
நவம்பர் 13 - உலக கருணை தினம், உலக பயன்பாட்டு தினம் (நவம்பர் மாதத்தில் 2வது வியாழக்கிழமை).
நவம்பர் 14 - குழந்தைகள் தினம் (இந்தியா), உலக நீரிழிவு தினம்.
நவம்பர் 16 - சர்வதேச சகிப்புத்தன்மை தினம், தேசிய பத்திரிகை தினம், சாலைப் போக்குவரத்து விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் (நவம்பர் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை).
நவம்பர் 17 - சர்வதேச மாணவர் தினம், தேசிய வலிப்பு நோய் தினம்.
நவம்பர் 18 - தேசிய இயற்கை மருத்துவ தினம்.
நவம்பர் 19 - உலக கழிப்பறை தினம், சர்வதேச ஆண்கள் தினம், உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் அல்லது உலக COPD தினம் (நவம்பர் 3வது புதன்கிழமை), சர்வதேச பத்திரிகையாளர் தினம், தேசிய ஒருங்கிணைப்பு தினம் (இந்தியா).
நவம்பர் 20 - உலகளாவிய குழந்தைகள் தினம், திருநங்கைகள் நினைவு தினம், உலக தத்துவ தினம்(நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை).
நவம்பர் 21 - உலக தொலைக்காட்சி தினம், உலக வணக்கம் தினம், தேசிய தத்துவ தினம், உலக மீன்பிடி தினம்.
நவம்பர் 23 - தேசிய முந்திரி தினம்.
நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம்.
நவம்பர் 26 - தேசிய பால் தினம் (இந்தியா), இந்திய அரசியலமைப்பு தினம்.
நவம்பர் 27 - நன்றி தெரிவிக்கும் நாள் (நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழன்).
நவம்பர் 28 - ரெட் பிளானட் தினம்.
நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம்.
நவம்பர் 30 - புனித ஆண்ட்ரூ தினம்.
