இந்திய அரசியலமைப்பு தினம் 2025: வரலாற்றுச் சிறப்பும் முக்கியத்துவமும்!

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினம் - 2025!
Historical importance!
Indian Constitution Day - 2025
Published on

க்கள் தொகையின் அடிப்படையில் இந்தியா உலகின் முதலிடத்தில் உள்ளது. பரப்பளவின் அடிப்படையில் உலகின் ஏழாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா மூன்று பக்கங்களில் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. இந்தியா பல பழமையான கலாச்சாரங்களுக்கு தாயகமாக உள்ளது. வரலாற்று ரீதியாக, இது "பாரத்" மற்றும் "இந்துஸ்தான்" என்றும் அழைக்கப்பட்டது. இந்தியா பல தேசிய சின்னங்களை கொண்டுள்ளது, இதில் தேசியப் பாரம்பரிய விலங்காக யானை மற்றும் புனிதமான தேசிய நதியான கங்கை ஆகியவை அடங்கும். இந்தியா மிகப்பெரிய கண்டமான ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆசிய யானைகளில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவிலேயே காணப்படுகின்றன. நமது தேசியச் சின்னம் சாரநாத்திலுள்ள அசோகர் ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரமாகும். அதில் இருப்பவை நான்கு சிங்கங்கள் ஆகும்.

இந்தியாவின் ஆபரணம் என்று அழைக்கப்படுபவர் நேரு. இந்தியாவின் கிளி என்று அழைக்கப்படுபவர் அமிர்குஸ்ரு. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் சரோஜினி நாயுடு. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் மகாகவி காளிதாசர் ஆவார்.

கணக்குப் பாடத்தில் மிகவும் தேவைப்படும் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது நாம்தான். இதைக் கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, மாணவர்கள் இங்கு வந்து படித்தாக கூறப்படுகிறது.

உலகிலேயே அதிகமான மொழிகளையும், அதிகமான மதங்களையும், கொண்ட நாடு இந்தியாவாகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. இரண்டு சர்வதேச எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக சர் சிரில் ராட்க்ளிஃப் தலைமையில் 1947, ஆகஸ்ட் 17 அன்று எல்லை ஆணையம் நிறுவப்பட்டது. அவர்தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டை நிர்ணயித்தவர்.

இதையும் படியுங்கள்:
உலகின் வேகமாக மூழ்கும் நகரம்: 2100-ல் உலக வரைபடத்தில் இருந்து மறையப்போகும் அபாய நகரங்கள்!
Historical importance!

ஒரு காலத்தில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளின் உதவியை நாடி வந்த இந்தியா, தற்போது ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயங்களில் உலக நாடுகளால் இந்தியாவை வெல்ல முடியவில்லை. இந்தியாவிற்கு வரும் பல வெளிநாட்டினர் இங்குள்ள கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பலவற்றை பாராட்டி வருகிறார்கள்.

1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, இன்று இந்திய அரசியலமைப்பு தினம் 2025 நினைவு தினம் கொண்டாடப் படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தினம், அல்லது சம்விதான் திவஸ் என்று அழைக்கப்படும் இந்த நாள், இந்தியக் குடிமக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும். இது 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது.இதைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும் இது இந்தியா இறையாண்மை மிக்கதாகவும் மக்களாட்சி குடியரசு நாடாகவும் தன்னை நிலைநாட்டி உள்ளது. நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பில் பொதிந்துள்ள விழுமியங்களை கௌரவிக்கும் விதமாக, இந்த நாள் அமைகிறது.

இந்திய அரசியலமைப்பின் "தலைமைச் சிற்பி" என்று அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஒருமுறை, “அரசியலமைப்பு ஒரு வெறுமனே வழக்கறிஞரின் ஆவணம் அல்ல; அது ஒரு வாழ்வின் வாகனம், அதன் உணர்வு எப்போதும் காலத்தின் உணர்வாகவே இருக்கும்,” என்று உறுதிபடக் கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் இந்த நாள் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. சம்விதான் திவஸ் ஆண்டுதோறும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு, அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அசாத்திய உழைப்பு!
Historical importance!

2015 ஆம் ஆண்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையிலும், அம்பேத்கரின் 125வது பிறந்தநாளுடன் ஒத்துப்போகும் வகையிலும், நவம்பர் 26 ஐ அரசியலமைப்புச் சட்டம் தினமாக அரசாங்கம் அறிவித்தது. இதற்கு முன்னர்வரை, இந்த நாள் சட்ட நாளாக கொண்டாடப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தினம், அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.

இந்தியாவின் மாற்றத்திற்கான பயணத்தை பிரதிபலிக்கும் இந்த நாள், இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற மற்றும் மக்களாட்சிக் குடியரசின் அடித்தளத்தை அமைத்த அரசியலமைப்புச் சபையின் தொலைநோக்குப் பார்வையையும் முயற்சிகளையும் கௌரவிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் தினம் சுறுசுறுப்பான குடிமைப் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது, அத்துடன் ஒரு முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவிற்கு நினைவூட்டுகிறது.

நாம் அனைவரும் இந்த நாளில் நம் நாட்டின் இறையாண்மையை மதித்து நமது அரசியலமைப்பு சட்டங்களை மதித்து நடக்க மீண்டும் இந்த நாளில் உறுதி ஏற்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com