இதுவரை இருந்த இந்திய பிரதமர்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

Indian Prime Ministers
Indian Prime Ministershttps://wordzz.com

ந்தியாவின் முதல் பிரதமராகி தொடர்ந்து, 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரின் மேஜை மீது அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் இறுக மூடிய வலக்கை சிற்பம் இருக்குமாம். நேருவுக்கு அந்த கையை பார்க்கும் போதெல்லாம், அரசியல் முடிவெடுக்க உறுதி பிறக்குமாம்.

இந்திய பிரதமர்களில் தனது அரசியல் எதிரிகள் உட்பட, போற்றிய ஒரே பிரதமர், லால்பகதுார் சாஸ்திரி. இந்தியாவின் இரண்டாவது பிரதமரான அவர், தனது 38 வயது வரை தேநீர் அருந்தவில்லை; வெளிநாட்டில் இறந்த ஒரே பிரதமர். அவரது உடலை சுமந்து வந்து, விமானத்தில் ஏற்றியது அன்றைய பாகிஸ்தான் பிரதமரும், ரஷ்யாவின் அன்றைய அதிபரும். தனது மறைவுக்குப் பிறகு முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்றவர்.

இந்தியாவின் 3வது பிரதமரானவர் இந்திரா காந்தி. இவர் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர். துணிச்சல் மிக்கவர். இவர் அக்டோபர் 31, 1984ல், மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்தினம் ஒடிசாவில், 'இன்று நான் இருக்கிறேன், நாளை இல்லாமல் போகலாம். ஆனால், என் இறுதி மூச்சும், கடைசி சொட்டு ரத்தமும் இந்தியாவின் நலனுக்கானவை...' என்று முழங்கினார்.

காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர் மற்றும் இந்தியாவின் 4வது பிரதமர், மிக அதிக வயதுக்கு பின் தனது 81 வயதில் பிரதமரானவர் மொரார்ஜி தேசாய். தனது ஆட்சி காலத்தில், தானே பட்ஜெட்களை தயாரித்தவர். 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை புரிந்தவர். இவற்றில் ஐந்து முழு பட்ஜெட்; மற்றவை ஐந்து இடைக்கால பட்ஜெட். தன் பிறந்த நாளில் இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

இந்தியாவின் 5வது பிரதமராக பதவி வகித்தவர் சரன்சிங் இவர் 1979 ஜூலை 26 முதல் 1980 ஜனவரி 14 வரை பதவியில் இருந்தார். ஆனால் இவரது பதவி காலத்தில் ஒரு நாள் கூட பார்லிமெண்ட் கூட்டம் நடக்கவில்லை. இதன் காரணமாக இந்திய பிரதமர்கள் வரலாற்றில், பார்லிமென்ட்டை சந்திக்காத ஒரே பிரதமர் என்ற பெயர் பெற்றார். இவர் துணை பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், உத்தர பிரதேச முதல்வர் என பல பதவிகளை வகித்தவர். இந்திய வறுமை, ஜமீன்தார் முறை நீக்கம் போன்றவற்றைக் குறித்து புத்தகம் ஒன்றை எழுதினார் சரண் சிங். அதன் தலைப்பு ‘கண்ணில் படாத புத்தகங்கள்’ என்பதுதான்.

மிக இளைய வயதில் இந்தியாவின் 6வது பிரதமராக பதவியேற்றவர் ராஜீவ் காந்தி. அவர் தனது 40வது வயதில் பிரதமரானார். இந்திய தலைவர்களுக்காக வெளியிடப்பட்ட இந்திய தபால் தலைகளிலேயே இவருக்கு வெளியிடப்பட்டதுதான் மிகவும் பெரியது. 6.1 செ.மீ. நீளமும், 4.5 செ.மீ. அகலமும் கொண்டது. இது 1991ம் ஆண்டு வெளிவந்தது. லண்டனில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து பைலட்டாக பணியாற்றிவர். ஆனால், இவருக்கு தேர்வுகளுக்காக மனப்பாடம் செய்வது சுத்தமாக பிடிக்காதாம்.

பத்தாண்டுகளுக்குள் உத்தரபிரதேச முதலமைச்சர், மத்தியில் வர்த்தகத்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரதமர் என பல்வேறு பதவிகளில் இருந்தவர் வி.பி. சிங். அனைத்து பொறுப்புகளிலும் சில ஆண்டுகளே இருந்தாலும் அனைத்திலும் தனது பெயரை நிலை நிறுத்திவிட்டு சென்றவர் வி.பி.சிங். இவர் 1989ல் இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றார். உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு அதிக நேரம் பேட்டியளித்து உலக சாதனை படைத்த ஒரே பிரதமர். பதவியேற்ற பிறகு டெல்லி ஏர்போர்ட்டில் 800 பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து 2 மணி நேரம் பேட்டியளித்தார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மக்களவை உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தவர். குறுகிய காலமே பிரதமர் பதவியை வகித்தவர். எந்த அரசுப் பதவியையும் வகிக்காமல் நேரடியாக 8வது பிரதமராக1990ல் பதவியை ஏற்றவர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று கின்னஸ் சாதனை படைத்தவர். பி. வி.நரசிம்ம ராவ். காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைச் சாராத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை இந்தியாவின் 9வது பிரதமராக பதவி வகித்த நரசிம்ம ராவுக்கு உண்டு. 10 மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்த ஒரே இந்திய பிரதமர் இவர் மட்டுமே.

காங்கிரஸ் கட்சியை சாராதவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த முதல் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய். இவர் மூன்று ஆண்டுகளில் மூன்று முறை பிரதமர் பதவி ஏற்றவர். வாஜ்பாய் வீட்டில் அவருடன் பிரதமர் நரசிம்ம ராவ் இருந்த புகைப்படத்தை பார்த்து ஒருவர், 'இவர்தான் உங்களை பற்றி வெளியே கடுமையாக விமர்சித்து வருகிறாரே, அவருடைய புகைப்படத்தை எடுத்து விட வேண்டியதுதானே...' என்றார். அதற்கு, 'அரசியல் ஆதாயங்களுக்காக நான், என் நண்பர்களை மாற்றுவதில்லை...' என்றார் வாஜ்பாய்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் சருமம் காக்கும் கஸ்தூரி மஞ்சள் மகிமை!
Indian Prime Ministers

கர்நாடக மாநில முதல்வர் பதவியை கடந்த 1996ம் ஆண்டு மே 30ம் தேதி ராஜினாமா செய்த எச்.டி.தேவே கவுடா இந்தியாவின் 11வது பிரதமராக 1996ம் ஆண்டு பதவி ஏற்றார்.

இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் 12வது பிரதமராக கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பதவி ஏற்றார். சர்வதேச விவகாரங்கள் மற்றும் நாடகக்கலை குறித்து எழுதுவது மற்றும் கருத்து தெரிவிக்கும் திறமை கொண்டவர் குஜ்ரால். நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவியேற்ற போது முதல் அயல்நாட்டு பிரதமராக அங்கு சென்று உலகின் கவனத்தை ஈர்த்தவர் ஐ.கே.குஜ்ரால்.

லோக்சபா மூலம் தேர்ந்தெடுக்கப்படாது, தொடர்ந்து, 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ஒரே பிரதமர், இந்து சமயத்தை சாராத சீக்கிய மதத்தை சேர்ந்த முதல் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் 13வது பிரதமராக 2004ம் ஆண்டு பதவியேற்ற இவர், இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து பின்னர் இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி வகித்து, பின்னர் இந்திய பிரதமராக இருந்தார் இந்தப் பெருமை மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே உள்ளது.

முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆகி, குஜராத் மாநில முதல்வராக ஆனவரும், முதல் முறையாக எம்.பி ஆகி பாரத பிரதமராக ஆனவரும் ஒருவர் மட்டுமே. அவர்தான் இந்தியாவின் 14வது பிரதமரான நரேந்திர மோடி. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்து பிரதமரான முதல் தலைவர். ஜனாதிபதி மாளிகை முன் திறந்தவெளி அரங்கில் பதவியேற்ற முதல் பிரதமர். நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் நரேந்திர மோடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com