அழிந்து வரும் மொழிகள்! உங்கள் தாய்மொழியின் நிலைமை?

பிப்ரவரி 21: சர்வதேச தாய்மொழி தினம்!
International Mother Language Day
International Mother Language Day
Published on

உலக அளவில் பல மொழிகள் அழிந்துவரும் நிலையில் உள்ளன.

ஏறக்குறைய ஐம்பதுசதவிகித நபர்கள் தமக்கு தொிந்த மொழியில் கல்வி கற்பது சவாலாகவே உள்ளது.

மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக பிப்ரவரி 21ம் நாள் சர்வதேச தாய்மெழி தினமாக கொண்டாடப்படுகிறது (International Mother Language Day).

இது மொழி மற்றும் பண்பாடு, கலாச்சாரம், உலகின் பல மொழிகளை மேம்படுத்துதல், போன்ற செயல்பாடுகளுக்காக கொண்டாடப்படுகிறது.

1952ல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோாி நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரங்களின் போது உயிா்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்தநாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பான நினைவுகளை கூறும் விதமாக இந்த நாள் சிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் 21.02.1999ல் பொது மன்ற 30வது அமர்வில் இந்த நாள் அனைத்துலக தாய்மொழிநாளாக அறிவித்ததாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.

அதோடு பண்பாட்டு தீா்மானம் 56/262 வழியாக மேற்படி மன்றத்தால் முறையாக 2002ல் ஏற்கப்பட்டது. பன்ணாட்டு தனித்தன்மையை பேணுவதுடன் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கமே இதன் தனித்துவமாகும்.

தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், அழிந்து வரும் மொழிகளை காத்தல் மற்றும் பன்மொழிகளை கற்றல், அதனை ஊக்குவித்தல் இதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
மொழிபெயர்ப்பாளர்களின் முக்கியத்துவம் - தெரியாத பல உண்மைகள்!
International Mother Language Day

ஒவ்வொரு நபரின் அடையாளமாகவும் சிந்தனையை சீா் செய்யவும் தாய்மொழியானது விளங்குகிறது. தாய்மொழி என்பது வெறும் தொடர் பாடல் மட்டுமல்ல, அது ஒரு இனத்தின் பண்பாடாகும். அதோடு அறிவு மற்றும் அடையாளமாகவும் விளங்கும். ஆக மொழி என்பது நமது உயிா்மூச்சு. எனவே நாம் ஒவ்வொருவரும் அதனைக்காக்க உறுதி மொழி ஏற்க வேண்டும்.

'என் தாய்மொழி எனது மிக முக்கியமான அடையாளம். எனது பண்பாட்டின் வோ், எனது அறிவின் வெளிப்பாடு. எனது தாய் மொழியை நேசிப்பேன்! அதை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்வேன்'

என இந்த நாளில் உறுதி மொழியை எடுத்துக்கொள்வோம்.

வாழ்க நமது தாய்மொழி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com