ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதி சுட்டுக் கொலை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஜம்முகாஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவன் தீடீரென ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதனையடுத்து, ராணுவ வீரர்களால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுகுறித்து காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் கூறியதாவது:

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் கொல்லப்பட்ட பயங்கரவாதி குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் அஹ் வானி என்று தெரியவந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வான்போவில் பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களைக் கொலை செய்த குல்ஜாருக்கு உதவியவர். மேலும், வானி பாரமுல்லாவில் ஒரு கடைக்கார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com