ஜனவரி 11: வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள்!

லால் பகதூா் சாஸ்திாி, இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிமுகபடுத்தி இந்திய வரலாற்றில் தனி ஒரு இடத்தைப் பிடித்தாா் என்பதே வரலாற்று உண்மையாகும்.
லால் பகதூர் சாஸ்திரி
லால் பகதூர் சாஸ்திரி
Published on

இந்தியா சுதந்திரம் அடைய பல தலைவர்கள் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறாா்கள். பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை சுவாசிக்காமலேயே அவர்களது சுவாசம் நின்றிருந்தாலும் அவர்களின் செயல்பாடுகளால் இன்றுவரை சரித்திரத்தில் இடம் பிடித்து நிற்கிறாா்கள் என்பதே சிறப்பான ஒன்று.

அந்த வகையில் சிறு வயதிலேயே வறுமையில் வாடி நோ்மை, உண்மை, உழைப்பு, துணிச்சல், பலரையும் நேசிக்கும் குணம், உயிா்த்தியாகம் இவைகளால் இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள் ஜனவரி 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ( 02.10.1904 - 11.01.1966)

- சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமர்.

- விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர்.

- ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பின் பிரதமர் ஆன லால் பகதூா் சாஸ்திாி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தாா்.

- இரண்டு வயதிற்குள்ளாகவே தந்தையை இழந்த இவர் அவரது தாத்தாவுடன் வசித்து வந்தாா்.

- ஆரம்பக் கல்வி உ.பி யில் முகல்சராயில். பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளியிக்கு நடந்து சென்றே படித்தாா். காரணம் வறுமை.

இதையும் படியுங்கள்:
லால் பஹதூர் சாஸ்திரி நினைவு தினம்! 'ஜெய் ஜவான், ஜெய் கிஸான்'!
லால் பகதூர் சாஸ்திரி

- வாரணாசியில் உயர்நிலை, காசி வித்யாபீத்தில் தத்துவம் மற்றும் அறிவியல் பட்டம்.

- காந்தியடிகளின் உரைகளால் ஈா்க்கப்பட்டு அவரோடு பல போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைவாசம் அனுபவித்தாா். அப்போது சிறையில் நிறைய புத்தகங்கள் படித்ததோடு மோிகியூாி அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் மொழிபெயர்த்தாா்.

- சிறந்த அரசியல்வாதி, கல்வியாளர் செயற்பாட்டாளர் அனைவரிடமும் பாசமும் நேசமும் காட்டிய பன்முக பண்பாளர்.

- உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற செயலாளர்.

- 24 வயதில் திருமணம்.

- காந்தியடிகளாாின் உப்பு சத்யா கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

- பின்னா் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தாா்.

- 1952, 1957, 1962, பொதுத்தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் இவரது கடின உழைப்பு இருந்தது உலகறிந்த ஒன்று.

- போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்தபோது பெண்களை நடத்துநராக பணி அமர்த்தியவரும் இவரே.

- உள்துறை அமைச்சராக இருந்தபோது ஊழலை கட்டுப்படுத்த சந்தானம் கமிட்டியை கொண்டுவந்தவரும் இவர் தான்.

- அரியலூாில் நடந்த கோரமான ரயில் விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோா் இறந்ததை தொடர்ந்து அதற்கு பெறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த பெருமைக்குாியவர்.

- ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பின் 9.6.1964ல் பிரதமரானாா். அதன்பிறகு பிறகு ஜெய் "ஜவான்" "ஜெய் கிஷான்" முழக்கத்தின் வாயிலாக விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினாா்.

- உணவு, பால் உற்பத்தியில் தன்னிறைவு கண்டாா், வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட பெருமையும் இவரையே சாரும்.

- 1965ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரை முடிவிற்கு கொண்டு வந்தவரும் இவரே. அந்த போாில் ராணுவத்திற்கும் மக்களுக்கும் தைாியமூட்டினாா். போரை முடிவுக்கு கொண்டு வர தாஷ்கண்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டாா்.

- அன்று இரவே நெஞ்சுவலி வந்து காலமானாா்.

இதையும் படியுங்கள்:
லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!
லால் பகதூர் சாஸ்திரி

- சுமாா் 19 மாதங்களே பிரதமராக இருந்த லால் பகதூா் சாஸ்திாி, இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வந்து நோ்மை, உண்மையை கடைபிடித்து சிறப்பாக ஆட்சிபுாிந்து இந்திய வரலாற்றில் தனி ஒரு இடத்தைப் பிடித்தாா் என்பதே வரலாற்று உண்மையாகும்.

அவரது நினைவு நாளில் அவரது பெருமைகளை போற்றுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com