
உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், பால் துறையை கொண்டாடவும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2001 ஆம் ஆண்டு உலக பால் தினத்தை அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.
இது அவர்களின் அன்றாட உணவில் பாலின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்கு கற்பிக்க செய்யப்படுகிறது. உலகம் நிறுவப்பட்டதிலிருந்து உலக பால் தினத்தை கடைப்பிடித்து வருகிறது. இந்த சிறப்பு நாளின் பின்னணியில் உள்ள நோக்கம், பாலின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதும், அதை முன்னணியில் இருக்க வேண்டிய உலகளாவிய உணவாக அங்கீகரிப்பதும், பால் தொழில் மற்றும் பால் பண்ணையை மேம்படுத்துவதும் ஆகும்.
பால் தினம் - கொண்டாடுவதின் நோக்கம்.
பால் மதிப்பு மிக்க முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருப்பதாலும், பல்வேறு வகையான சுகாதார நன்மைகளை வழங்குவதால் உலக பால் தினம் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தையும், தரத்தையும் அங்கீகரிக்கிறது. இந்த நிகழ்வு மக்களுக்கு உணவு அளிப்பதில் பால் துறையின் உற்சாகமான நற்பணிப்பை கௌரவிக்கிறது. அதனால் தான் நாம் பால் தினத்தை கொண்டாடுகிறோம்.
பாலின் முக்கியத்துவம்.
நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குவது பால். நாம் உண்ணும் உணவுக்குழல் மிகவும் இன்றியமையாததும், பால் தான் தினசரி காலையில் டீ, காபியில் தொடங்குவது மதிய உணவில் தயிர், வெப்பத்தை தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் என பல வகைகளில் நமக்கு பால் பயன்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஒட்டுமொத்த ஊட்டச்சத்தும் கிடைக்கும் உணவாக பால் உள்ளது .
பசும்பாலில் உள்ள சத்துக்கள்.
பிறந்த குழந்தை தாய்ப்பால் கிடைக்காமல் இருக்கும் போதும் அதற்கு இணையாக தருவது பசும்பால் தான். குழந்தையின் உயிர் காப்பானாக தாய்ப்பாலுக்கு மாற்றாக இருக்கும். பாலில் புரதம் , லாக்டோஸ், தாது உப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
பசும்பாலில் அனைத்து வித அமினோ அமிலங்களும் உள்ளன. 5 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் 400 மில்லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயது உள்ளவர்கள் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், பச்சை பால் அருந்துவது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே அவசியம் பச்சை பாலை குடிப்பது தவிர்க்க வேண்டும். நன்றாக காய்ச்சிய பாலை குடிக்க வேண்டும்.
பச்சை பாலில் பாக்டீரியாக்கள் உடலில் நுழைய நாமே ஒரு வழியை உருவாக்கக் கூடாது. பச்சை பால் இயற்கையானது. நுண்ணுயிர் எதிர்ப்புகள் நிறைந்தவை. எனினும், அவற்றில் தீங்கு விளைக்கும் பாக்டீரியாக்களும் அதிக அளவில் உள்ளன. இது உடலில் கடுமையான தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும்.
பசும்பால் மட்டுமல்லாமல் ஆட்டுப்பால், எருமைப்பால், கழுதை பால், குதிரை பால், ஒட்டகப்பால் வரை விலங்குகளின் பாலை பயன்படுத்திவருகிறார்கள். தாய்ப்பாலுக்கு மாற்றாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை கழுதை பால் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக எளிதில் செரிமானமாகக் கூடிய அருமருந்தாக மருத்துவ உலகம் சொல்வது பசும் பாலை தான்.
பாலில் உள்ள சத்துக்கள்.
ஒரு கப் பாலில் 120 மில்லி கிராம் அளவு கால்சியம் 4.1 கிராம் அளவுக்கு கொழுப்பு 4.4 கிராம் அளவு கார்போஹைட்ரேட் 3.2 கிராம் அளவு பரதம் 67 கலோரி அளவு இருக்கிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்டது பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் 'உலக உணவு' என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 1 ஆம் தேதி 'உலகப் பால்தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.