பொதுவாக பாலூட்டி வகை இனத்தில் இளையவர்கள் தங்களது தாயைக் காட்டிலும் தந்தையை அதிகம் நேசிக்கிறார்களாம். அதுவே மனித குலத்திலும் தொடர்கிறது. குழந்தைகள் தங்களது தாயை விட தங்கள் தந்தையை, அதிகம் நேசிப்பது வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு தந்தையின் மரபணுக்கள் தான் அதிகம் குழந்தைகளிடம் உள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.
ஒரு குழந்தை பிறந்த பிறகு உச்சரிக்கும் முதல் வார்த்தை தாதா. இந்த தாதா என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா என்று பொருள்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு ஆழமானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. இது அவர்களின் அன்றாட அனுபவங்களை மட்டுமல்ல, அவர்களின் நீண்டகால வளர்ச்சி மற்றும் அடையாள உணர்வையும் வடிவமைக்கிறது. ஒரு தந்தையின் வளர்ப்பு குழந்தைகளின் அடையாளத்தை பல்வேறு வழிகளில் வடிவமைப்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தாய், தந்தை இருவரில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தந்தையின் அரவணைப்பில் தான் என்கிறார்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியல் துறை ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் தாயை விட தந்தை தங்களது குழந்தைகளிடம் விளையாடும் போதும், பேசும் போதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அப்பாக்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்கள். குழந்தைகள் எப்போதுமே தங்கள் தந்தையின் எண்ணங்கள் மற்றும் அறிவுரைகளை முக்கியமாக கருதுகிறார்கள்.
தந்தை என்றாலே ரொம்பவே ஜாலியான மற்றும் அன்பான குணம் கொண்டவர். இந்த காரணத்திற்காக தான் மகள்கள் தங்கள் தந்தையிடம் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள். ஒவ்வொரு தந்தையும் தனது மகள்களின் சிறிய தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்வார்கள். இதனால் மகள்கள் தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களை தன் தந்தையிடம் மனம் திறந்து பேசுகிறார்கள்.
தந்தைகள் தங்கள் குழந்தைகளுக்கு, குறிப்பாக மகன்களுக்கு முன்மாதிரியாக செயல்படுகிறார்கள். பொறுப்பு, இரக்கம் மற்றும் கடின உழைப்பு போன்ற நேர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்தும் ஒரு தந்தை, இந்த பண்புகளை தனது குழந்தைகளில் விதைக்க முடியும்.
பெண் குழந்தையின் முதல் வழிகாட்டி அவர்களது தந்தையே. பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் அல்ல என்றும், தங்களை நிரூபிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்றும், அவர்கள் தங்களது மகள்களுக்கு கற்பிக்கிறார்கள். இதனால்தான் மகள்கள் தங்கள் தந்தையுடன் அதிகமாக இணைகிறார்கள்.
ஒவ்வொரு தந்தையும் தனது மகளின் கனவுகளை தனது சொந்த கனவாக கருதுகிறார். இதனால் அவர் தனது மகளின் கனவுகளை நிறைவேற்றுவதில் வியர்வையை ரத்தமாக சிந்தி, அதை முடிவில் நிறைவேற்றுகிறார். இந்த காரணத்திற்காக தான் ஒவ்வொரு மகள்களும் தங்கள் தந்தையே 'சூப்பர் ஹீரோ' என்று சொல்லுகிறார்கள்.
ஓபன் மையின்ட் ஒழுக்க சிந்தனை, குழந்தைகளை தவறு செய்ய அனுமதித்து பின் அவர்களை திருத்துவது, அவர்களை சவால்களை சந்திக்க அனுமதிப்பது, குழந்தைகளிடம் தினமும் தவறாமல் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது, பிரதிபலன் பாராது அவர்களிடம் அன்பு பாராட்டுவது ஒரு நல்ல தந்தையின் இலக்கணம் என்கிறார்கள்.