June 30 - சமூக ஊடக தினம் - சோஷியல் உலகம் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்!

Social Media Day
Social Media Day
Published on

அறிவியல் முன்னேற்றம் தந்த பெரும் வரங்களில் ஒன்று தான் சோஷியல் மீடியா எனப்படும் சமூக ஊடகங்கள். உலகம் முழுவதும் சமத்துவம் ஆக்கப்பட்ட ஊடகமாக நாடு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து மனிதர்களை இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது சமூக ஊடகங்கள் என்றால் அது மிகையல்ல. சமூக ஊடக தினமான இன்று அது குறித்த சில தகவல்கள் இதோ..

சமூக ஊடக தினம் (Social Media Day) ஆண்டுதோறும் ஜூன் 30 கொண்டாடப்படுகிறது. இது உலக மக்களிடையே சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு நாளாகக் கருதப்படுகிறது.

2010 ஆம் ஆண்டில், 2005 ஆம் ஆண்டு United Kingdom சேர்ந்த பீட் காஷ்மோர்(Pete Cashmore) என்பவரால் நிறுவப்பட்ட உலகளாவிய நிறுவனமான Mashable மூலம் இந்த நாள் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

Mashable என்பது தனித்துவமான செய்தி வலைத்தளம் மற்றும் விரிவான தொழில்நுட்பம், டிஜிட்டல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பெயர் பெற்ற ஒரு உலகளாவிய, பல-தள ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் 2002 இல் Friendster மற்றும் 2003 இல் MySpace தொடங்கப்பட்டதன் மூலம், சமூக ஊடகங்கள் முக்கியமான ஒன்றாக மாறியது. 2004 சமூக ஊடகங்களின் ராஜா எனக் கருதப்படும் முகநூல் ( Facebook ) நிறுவப்பட்டது. அடுத்து ட்விட்டர் ( Twitter) குறைவான எழுத்துக்களில் சுருக்கமாக அவரவர் எண்ணங்களை பதிவிட்டு எளிதில் அனைவரின் கவனத்தையும் பெறுகிறது.

அதேபோல் Instagram தற்போது வெகு பிரபலமாக உள்ளது. இவற்றில் படங்கள் மூலம் இன்னும் சிறப்பாக கருத்துகளை வெளிப்படுத்த முடிகிறது. ​​TikTok மற்றும் YouTube Reels ஆகியவை நமது தோற்றம் மற்றும் உரையுடன் கூடிய நேரலை வீடியோக்களால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது.

உணவு குறித்த தேடல்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது Pinterest, Tumblr, YouTube, TikTok மற்றும் WordPress போன்ற தளங்கள். வேலை வாய்ப்புகளுக்கான தொழில்ரீதியான சோசியல் தளமாக Linkedin 2003ல் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

தற்போது AI தொழில்நுட்பம் மேலும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. எந்த தகவல் வேண்டும் என்றாலும் உடனடியாகப் பெறும் வகையில் இன்றைய சமூக ஊடகங்கள் நமது அன்றாடப் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. இணையதளம் எனும் கடலில் இங்கு குறிப்பிட்டவை அதிகம் நம்மால் பயன்படுத்தப்படும் சில துளிகள் மட்டுமே.

சமூக ஊடகங்கள் வாயிலாக உலகெங்கும் எளிதில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ளவும், நட்பு கொள்ளவும், உதவிகள் பெறவும் முடிகிறது. இது பலவகையில் நன்மை என்றாலும், சோசியல் மீடியாவில் சில ஆபத்துகளும் உள்ளன. அதனை உணர்ந்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதினால் மட்டுமே அதனால் கிடைக்கும் பலன்களை அடையலாம். இது குறித்தான விழிப்புணர்வை காவல்துறை இணையதள சமூக ஆர்வலர்கள், சைபர் க்ரைம் மற்றும் பல்வேறு இணைய நிறுவனங்கள் இணைந்து ஏற்படுத்தி வருவதை அறிவோம்.

இருப்பினும் சமூக ஊடகங்கள் மூலம் பண மோசடி, பாலியல் புகார்கள், விதவிதமான ஏமாற்றுதல் என அடிக்கடி செய்திகளை கண்டு வருகிறோம். ஆகவே, நம்மை நாமே பரிசோதித்து கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
மனதை குழப்பும் தேவையில்லாத எண்ணங்கள் தேவையா?
Social Media Day

ஒரு நாளைக்கு எத்தனை முறை நம் அலைபேசியை எடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் அல்லது ட்விட்டரைத் திறந்து ஸ்க்ரோல் செய்யத் தொடங்குகிறோம்? எந்த விஷயங்களில் அதிகம் கவனம் கொள்கிறோம்? அது உண்மையில் நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுமா? என்பது போன்ற கேள்விகளை முன்னிறுத்தி சுயபரிசோதனை செய்வது அவசியம்.

சமூக ஊடகங்கள் எவ்வாறு மக்களை இணைக்கிறது, தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவுகிறது, மற்றும் உலகளாவிய அளவில் தொடர்புகளை ஏற்படுத்துகிறது என்பதை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ள இந்த நாளில் சமூக ஊடகங்கள் மீதான எச்சரிக்கைகளையும் நாம் அறிந்து கொள்வோம். அத்துடன் சோஷியல் உலகம் குறித்து நன்மை தீமைகளை நமது பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதும் மிக முக்கியமானது.

தினசரி நமது நேரங்களை களவாடும் சோஷியல் உலகம் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து நன்மைகள் பெறுவோம்.

இதையும் படியுங்கள்:
இதையெல்லாம் டெலிவரி சமயத்தில் செய்யாதீர்கள்!
Social Media Day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com