ஒரே ஒரு 'பை'... ஆனால் பல 'பை' நாட்கள்! அப்படி என்ன இருக்கு கொண்டாட?

Pi day
Pi day
Published on

ஜூலை 22: பை நாள் கொண்டாட்டம்

பை எனும் அளவு π எனும் கிரேக்க எழுத்து மூலம் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் நன்கு அறியப்பட்ட கணித மாறிலிகளில் ஒன்றாகும். இது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கு அதன் விட்டத்தின் விகிதமாகும். எந்த வட்டத்திற்கும், விளிம்பைச் சுற்றியுள்ள தூரம் குறுக்கே உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

ஒரு கால்குலேட்டரில் π ஐத் தட்டச்சு செய்து ENTER ஐ அழுத்தினால் 3.141592654 என்ற முடிவு கிடைக்கும். இந்த மதிப்பு துல்லியமானது அல்ல. ஆனால், ஒரு கால்குலேட்டரின் காட்சி பெரும்பாலும் 10 இலக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும் என்பதால், பை என்பது உண்மையில் ஒரு பகுத்தறிய முடியாத எண் (முடிவு இல்லாத தசமம் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் முறை). இது பெரும்பாலும் 3.14 எனும் தசம எண்னில் அல்லது 22/7 எனும் பின்னத்துடன் தோராயமாக மதிப்பிடப்படுகிறது.

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ் பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். பை அண்ணளவு நாளைப் பல்வேறு நாட்களில் கொண்டாடுகின்றனர்.   

அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஆம் நாளைக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π ஐயும் குறிக்கும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14 ஆம் நாள் பை நாளாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக, கால்குலேட்டரில் π ஐத் தட்டச்சு செய்து ENTER ஐ அழுத்தினால் கிடைக்கும் 3.141592654 என்ற எண்ணுக்கேற்ப, மார்ச் 14 ஆம் நாளில், 1:59:26 என்கிற குறிப்பிட்ட நேரத்தில் கொண்டாடப்படுகிறது. 

π என்பதன் பரவலாக அறிந்த அண்ணளவு 22/7 எனும் பின்னமாகவும் கொள்ளப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை மாதம் 22 ஆம் நாளிலும் பை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஜூலை 20: அனைத்துலகச் சதுரங்க நாள் - (International Chess Day) செங்களம் விளையாடத் தெரியுமா?
Pi day

இந்த இரு நாட்களைத் தவிர, கிரிகோரியன் நாட்காட்டியின்படி, ஆண்டு தொடக்க நாளில் இருந்து, பூமி தனது சுற்றில் 1 ரேடியன் அளவு சுற்றி வரும் நாள் எனும் கணக்கில் பெப்ரவரி 27 ஆம் நாளிலும், ஒரு ஆண்டின் 314 வது நாள் எனும் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் நாளில், நெட்டாண்டாக இருப்பின் நவம்பர் 9 ஆம் நாளிலும் பை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே போன்று பையின் சீன அண்ணளவான 355/113 எனும் அடிப்படையில் சீனாவில் ஆண்டின் 355 ஆம் நாளான டிசம்பர் 21 அன்று பிற்பகல் 1.13 மணிக்கு பை நாள் கொண்டாடப்படுகிறது.  

வெளிநாடுகளில், பை கொண்டாட்ட நாளில், பை நாளில் கேக்குகளில் π எனும் குறியீட்டை இட்டு சிறு குழந்தைகளுக்குத் தந்து π குறித்து விளக்கமளிக்கின்றனர் . 'Pi'neapple, 'Pi'nenuts, 'Pi'e என்று பை என்று தொடங்கும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, π குறித்து நினைவூட்டுகின்றனர். இதே போன்று, விளையாட்டில் ஆர்வமுடைய குழந்தைகளுக்கு 3.14 கிலோ மீட்டர் தூரம் ஓட செய்து, அவர்களுக்கு π மதிப்பை நினைவூட்டுகின்றனர். 

இந்தியாவிலும் இது போன்று, பை நாளில், பள்ளிகளில் π ன் மதிப்பை நினைவூட்டும் விதமாகப் புதிதாக ஏதாவது செய்யலாம்… பை நாளைக் கொண்டாடலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com