தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில், 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் புது சாதனைப் படைத்திருக்கிறார் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா அரங்கத்தில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். இப்போட்டியில் வேதாந்த் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். அவர் இந்த போட்டியில் 1500 மீ தூரத்தை ப்ரீஸ்டைல் பிரிவில் 16:01.73 விநாடிகளில் கடந்து வேதாந்த் தங்கம் வென்றார்.
நடிகர் மாதவன் கடந்த ஜூலை 1-ம் தேதி தனது இயக்கத்தில் உருவான 'ராக்கெட்ரி' படத்தை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் அசத்தலாக நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார்
-இதுகுறித்து மாதவன் தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:
எனது மகன் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவு போட்டியில் பங்கேற்று வேதாந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 16 நிமிடங்களில் 780 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் சாதனை படைத்த அத்வைத்தின் சாதனையை வேதாந்த் முறியடித்துள்ளார்.
-இவ்வாறு நடிகர் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.