பாஜக முக்கிய நிர்வாகி சுட்டுக் கொலை; டெல்லியில் பெரும் பரபரப்பு!

பாஜக முக்கிய நிர்வாகி சுட்டுக் கொலை; டெல்லியில் பெரும் பரபரப்பு!
Updated on

டெல்லி பாஜகவில் முக்கிய நிர்வாகியான ஜீத்து செளத்ரி (40) அங்கு மயூர் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பிக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸார் தெரிவித்ததாவது;

ஜீத்து செளத்ரி நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஜீத்துவை உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஜீத்து செளத்ரி தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது அரசியல் காரணமாக என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-இவ்வாறு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com