விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பெருமை கல்பனா சாவ்லா!

பிப்ரவரி 1, கல்பனா சாவ்லா நினைவு தினம்
Kalpana Chawla, India's pride in space exploration!
Kalpana Chawla, India's pride in space exploration!
Published on

ல்பனா சாவ்லா ஒரு முன்னோடி இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை மற்றும் விண்வெளிப் பொறியாளர். விண்வெளியில் பறந்த முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ள கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

இந்தியாவில் ஹரியானாவில், 1962ல் பிறந்த கல்பனா, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தபோது அவருடைய வகுப்பில் இருந்த ஒரே பெண் மாணவி கல்பனா மட்டும்தான். அமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். நாசாவில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்து, 1997ல் அவரது முதல் விண்வெளிப் பயணம் 16 நாட்கள் நீடித்தது.

கல்பனா சாவ்லா தனது விண்வெளி பயணத்தின்போது மேற்கொண்ட முக்கியமான பரிசோதனைகள்:

கல்பனா சாவ்லா கொலம்பியா, STS-87 மற்றும் STS-107 ஆகிய இரண்டு விண்வெளிப் பயணங்களின்போது பல்வேறு குறிப்பிடத்தக்க சோதனைகளை மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
அர்த்தமுள்ள மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் 8 விஷயங்கள்!
Kalpana Chawla, India's pride in space exploration!

Robot Arm Operations: சூரியனின் வெளிப்புற அடுக்கை ஆய்வு செய்த SPARTAN-201 என்ற செயற்கைக்கோளை வரிசைப்படுத்தவும் மீட்டெடுக்கவும் சாவ்லா, விண்கலத்தின் ரோபோடிக் கையை இயக்கினார்.

கலவை திரவங்கள் (Colloidal Liquids): எதிர்கால கணினி சில்லுகளுக்கு உலோக கலவைகளை உருவாக்க, கலப்பில்லாத திரவங்களை எவ்வாறு திறம்படக் கலப்பது என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேம்பட்ட தானியங்கு திசை திடப்படுத்தல் உலை (Advanced Robotic Directional Solidification Furnace): நுண் புவியீர்ப்பு விசையில் பொருட்கள் எவ்வாறு திடப்படுத்தப்படுகின்றன என்று ஆய்வு செய்யப்பட்டது.

ஷட்டில் ஓசோன் லிம்ப் சவுண்டிங் எக்ஸ்பெரிமென்ட் (SOLSE): வளிமண்டல மாற்றங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்த ஒரு சிறப்பு கருவியைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் ஓசோன் பரவலை அளவிடுவதை பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

நுண் புவியீர்ப்பு சோதனைகள் (Microgravity Experiments:): குழுவினரோடு, பல்வேறு துறைகளில் 80க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகளை நடத்தினார். மேலும், மைக்ரோ கிராவிட்டியில் படிகங்கள் எவ்வாறு உருவாகின்றன, விண்வெளியில் தீப்பிழம்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவை எதிர்கால விண்வெளி பயணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முக்கியமானவை.

புரோஸ்டேட் புற்றுநோய் ஆராய்ச்சி: மைக்ரோ கிராவிட்டி நிலைமைகளில் புற்றுநோய் உயிரணு வளர்ச்சி தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

உயிரியல் மற்றும் சுகாதார அறிவியல்: சோதனைகளில் தாவர இனப்பெருக்கம், விண்வெளிப் பயணங்களில் பூச்சிகள் மற்றும் மீன்கள் எவ்வாறு ரியாக்ட் செய்கின்றன போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:
நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதலமைச்சர்!
Kalpana Chawla, India's pride in space exploration!

லூப் ஹீட் பைப் டெஸ்ட்: எதிர்கால விண்கலப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட வெப்ப மேலாண்மை தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப மேம்பாடு: ரோபோட்டிக் சிஸ்டம்களை மிகவும் திறம்பட இயக்க விண்வெளி வீரர்களுக்கு உதவும் ரோபோட்டிக் சூழ்நிலை விழிப்புணர்வு காட்சி போன்ற கருவிகளை உருவாக்க சாவ்லா பங்களித்தார்.

குழு பாதுகாப்பு மற்றும் நடைமுறைகள்: துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரி 1, 2003ல், கொலம்பியா பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் சிதைந்ததன் விளைவாக சாவ்லா உட்பட ஏழு குழு உறுப்பினர்களும் இறந்தனர். கொலம்பியா பேரழிவைத் தொடர்ந்து, பணி பற்றிய விசாரணைகள், சிறந்த பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு நெறிமுறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டின. சாவ்லாவின் அனுபவம், பயணங்களின்போது பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மாற்றங்களைத் தெரிவிக்க உதவியது.

உத்வேகம் மற்றும் பிரதிநிதித்துவம்: விண்வெளியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணியாக, உலகளவில் ஆர்வமுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு, குறிப்பாக STEM துறைகளில் உள்ள பெண்களுக்கு, சாவ்லா ஒரு முன்மாதிரியாக விளங்கினார். கல்பனா சாவ்லாவின் பங்களிப்புகள் விண்வெளி ஆய்வுக்கான நாசாவின் அணுகுமுறையில் நீடித்த முத்திரையை பதித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com