முருகப்பெருமான் புகழை உலகறியச் செய்த ஞானப்பழம் வாரியார் சுவாமிகளின் அரிய பக்தி!

நவம்பர் 7, கிருபானந்த வாாியாா் சுவாமிகள் நினைவு தினம்
Kirupananda Warrier Swamigal Memorial Day
Lord Murugan with Variyar Swamigal
Published on

லரும் பலவிதமான ஆன்மிக நெறிமுறைகளைக் கடைபிடித்து இறை பக்தியை மக்களிடம் ஆா்ப்பாட்டமில்லாமல் கொண்டு சென்றவர்கள் மத்தியில், தலைசிறந்த ஆன்மிகவாதியாகவும், முருகப்பெருமானின் பெருமைகளை தனக்கே உாிய பாணியில் நகைச்சுவை கலந்து அற நெறியாக போதித்தவர் திருமுருக கிருபானந்த வாாியாா் சுவாமிகள். தீவிர முருக பக்திக்கு அவர் ஒருவரே சொந்தம் எனலாம். அசையாத இசை ஞானம் கொண்டவர். தனது பேச்சுத் திறனால் நகைச்சுவையுடன் கலந்து கதாகாலட்சேபம் செய்தவர் வாரியார் சுவாமிகள்.

இவர் ஒரு பழுத்த ஆன்மிகவாதி, சிறந்த சிந்தனையாளர், தேவாரம், திருவாசகம்,  திருப்புகழ் போன்றவற்றை கரைத்துக் குடித்த சொல்லின் செல்வர், பக்தி நெறியாளர், ஆன்மிகமே தனது முழுமூச்சு என வாழ்ந்தவர். திருமுருக கிருபானந்த வாாியாா் சுவாமிகள் 25.8.1906ல் திருவண்ணாமலை மாவட்டம், காங்கேயநல்லூாில் பிறந்தாா்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் கடைத்தேற குருநானக் காட்டும் எளிய வழிகள்!
Kirupananda Warrier Swamigal Memorial Day

சமயம், இலக்கியம், ஆன்மிகம், பாடல்கள் பாடும் வல்லமைத் திறன், பேச்சுத்திறன் போன்றவற்றால் பக்தி நெறியை மக்கள் மனதில் எளிமையாக, அனைவருக்கும் புாியும் வகையில், நகைச்சுவை இழையோட கதாகலாட்சேபம் செய்தவர். அவரது பக்தி உரையை அவருக்கே உாிய வகையில் கம்பீரக் குரலில் சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினால் அத்தனை பேரும் நேரம் போவது தொியாமல் அமர்ந்து கேட்பாா்கள்.

வாரியார் சுவாமிகள் அனைவரிடமும் எளிமையாகப் பழகும் குணம் படைத்தவர். மூன்று வயதில் வீட்டிலேயே கல்வி, ஐந்து வயதில் பள்ளிப்படிப்பு, அதன் பின்னா் திருவண்ணாமலையில் பாணிபத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்படவர். திருப்புகழ் அமுதம், சொல்லின் செல்வர் போன்ற  பட்டங்களைப் பெற்றவர். இவர் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். அவற்றில் சிவனருட் செல்வர், கந்தவேல் கருனை போன்ற பல நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருப்புகழ்  அமுதம் என்ற தமிழ் மாத இதழை முப்பத்தி ஏழு ஆண்டுகள் நடத்தினாா்.

இதையும் படியுங்கள்:
மிட்டாயின் இந்த ஆச்சரியமூட்டும் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
Kirupananda Warrier Swamigal Memorial Day

தனது வாழ்நாள் முழுவதும் முருகன் புகழையே பாடியும், சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர். அவர் ‘முருகா’ என ஸ்பெஷ்டமாய் சொல்லும்போது அவ்வளவு சிறப்பாக இருக்கும். தனது பத்தொன்பதாவது வயதில் இவரது திருமணம் நடைபெற்றது. குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் புத்தகம் எழுதினாா். பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினாா். ‘தேவர் பிலிம்ஸ்’ தயாாித்த  ‘திருவருள்’ போன்ற புராணப் படங்களில் நடித்துள்ளார்.

யாரையும் எளிதில் கவரும் சொல்நயமிக்க மகான். அனைவராலும் ‘ஞானப்பழம்’ என்றே அன்பாய் அழைக்கப்பட்டவர். ஆஜானுபாகுவான தோற்றம், நல்ல குரல் வளம் மிக்க மனிதர். உடல் நலம் சரியில்லாமல் லண்டன் மாநகரில் சிகிச்சை பெற்று பின்னர் ஊா் திரும்பும் நிலையில் விமானத்திலேயே 7.11.1993ல் இறைவனடி சோ்ந்தாா். காலத்தால் அழியாத  இறை பக்தி கொண்ட முருகன் அடிமை திருமுருக கிருபானந்த வாாியாா் சுவாமிகளின் நினைவு நாளான இன்று அவர் தம்  நினைவுகளோடு அவருக்கு மரியாதை செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com