

தனது 14 வயதில் (1967) அரசியல் வாழ்க்கையை துவங்கி, 60 ஆண்டுகால அரசியல் பயணத்தின் வாயிலாக ஆளுமை மிக்க அரசியல் தலைவர் மட்டுமல்லாது, பல சிரமங்களுக்கு இடையில் படிப்படியாக முன்னேறிய தலைவர் என்ற பெருமைக்குாியவர். மறைந்த முன்னாள் முதல்வர், மு. கருணாநிதி - இணையர் தயாளு அம்மாவின் புதல்வர் மாண்புமிகு முதல்வர். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான மாா்ச் மாதம் முதல் தேதியில் (01.03.1953) அவரது வாழ்க்கை தொடர்பான தகவல்களோடு பயணிப்போம். ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக 'ஸ்டாலின்' என பெயர் வைக்கப்பட்டது.
சென்னை சாா்ஸ் பாா்க் கான்வெண்ட்டில் பள்ளிப்படிப்புக்கு விண்ணப்பித்த போது இவரது புரட்சி பெயரைக்கண்டு பள்ளி நிா்வாகம் பள்ளியில் சோ்க்க மறுக்கவே சேத்துப்பட்டு பள்ளியில் படிப்பை துவங்கும் நிலை.
படிக்கும் நிலையிலேயே 1967 தோ்தலில் தி.மு.க - விற்கு தீவிர பிரச்சாரம் செய்தாா்.
1973ல் பிரசிடென்சி கல்லூாியில் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றாா்.
1975ல் ஆகஸ்ட் 25ல் துர்கா என்பவரை திருமணம் செய்தாா். மகன் மகள் தலா ஒன்று. தந்தையின் அரசியல், கலை, ஆளுமையில் ஈடு பாடு கொண்டு இளம் வயதிலேயே நாடகக்கலையில் நாட்டம் ஏற்பட்டு திருவல்லிக்கேணியில் அஞ்சுகம் நாடக மன்றத்தில் முதன்முதலாக 'முரசே முழங்கு' நாடகத்தில் நடித்தாா்.
அதோடு திண்டுக்கல் தீா்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே நாடகங்களைத் தொடர்ந்து சமூக நல கருத்துகள் அடங்கிய ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் படங்களில் நடித்தாா்.
அவை அனைத்தும் தி.மு.க வளர வழிவகுத்தது. தொலைக்காட்சி தொடரான குறிஞ்சிமலர் நல்ல பெயரைத் தந்தது.
1976ல் இந்திராகாந்தி அம்மையாரால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வகையில் மிசாவில் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது அரசியலில் தீவிரம் காட்டினாா். சிறையில் கடுமையாக தாக்கப்பட்டாா். 1984ல் தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகி கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சினாா்.
அவருக்கு பிடித்த விளையாட்டு கிாிக்கெட், பேட்மிட்டன், செஸ், அதே ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்ட மன்ற தோ்தலில் தோல்வியை சந்தித்தாா்.
1989ல் அதே ஆயிரம் விளக்கு தொகுதி இவரை எம்.எல்.ஏ - வாக 39 வயதில் சட்டமன்றத்திற்கு முதன் முறையாக அனுப்பியது.
பின்னர் 1996ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் நேரடி தோ்வின் மூலம் சென்னை மேயர் பதவி தேடிவந்தது.
மீண்டும் 2001ல் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ, இரண்டாம் முறையாக சென்னை மேயர்.
மேயர் பதவியில் சென்னைக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினாா்.
2003ல் கட்சி பொதுக்குழுவால் கட்சியின் துணை பொதுச் செயலாளா் பதவி வகித்தாா்.
2006 தோ்தலில் சட்டமன்ற உறுப்பினா் ஆகி ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரானாா்.
அதில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்திய பெருமையும் இவரது நிா்வாகத்திறனுக்கு ஒரு சான்றாகும்.
ஜெயலலிதாவை 'அம்மையாா்' என்றே அழைக்கும் பண்பாளர். பின்னர் 2008ல் கட்சியின் பொருளாளா்.
2011ல் முதல்முறையாக வரலாற்றிலும் முதன்முறையாக துணை முதல்வரானாா்.
2011ல் கொளத்துாா் தொகுதி எம். எல். ஏ. அதனைத் தொடர்ந்து 2016ல் பிரதான எதிா்கட்சி தலைவர் பதவி தேடி வந்தது.
2017ல் திமுகவின் செயல் தலைவர்.
2018 கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் பொதுக்குழுவால் தி.மு.க தலைவரானாா்.
படிப்படியாக தன்னம்பிக்கையால் விடாமுயற்சியால் கட்சி வளா்ச்சிக்காக பாடுபட்டு 2021ல் கொளத்தூா் தொகுதியின் எம்.எல்.ஏ பதவிக்கு தோ்வாகி பெரும்பான்மையுடன் தமிழகத்தின் 23 வது முதலமைச்சராக பொறுப்புக்கு வந்து பதவி ஏற்றாா்.
முதல்வரானவுடன் கொரோனா அலை பாதிப்பை நிா்வாகத் திறமையால் மருத்துவ துறையை போா்க்கால அடிப்படையில் பணிபாா்க்க வைத்து, அதனை சிறப்பாக கையாண்ட விதம் இவரது நிா்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு.
அதேபோல கல்விக்காகவும் மருத்துவ துறைக்கும் நிறையவே செய்துள்ளாா். இவர் கொண்டுவந்த பல திட்டங்கள் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுவது பெருமைக்குாிய விஷயம். இவரது ஆட்சியில் நான்கரை வருட சாதனையில் மாதம் மகளிா் உரிமைத்தொகை, பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணவசதி, கலைஞர் கனவு இல்லம், பாலங்கள், நூலகங்கள், மெட்ரோ ரயில் திட்டம், நான் முதல்வன் திட்டம், அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள், தமிழ்ப்புதல்வன், இல்லம் தேடி மருத்துவம், பள்ளிகளில் காலை உணவு இப்படி பல்வேறு சாதனைகளை பட்டியல் போடலாம்.
அதேபோவே தொழில் வளா்ச்சியிலும் முதன்மை மாநிலமாக திகழ்வதும் ஆட்சிக்கே பெருமையாகும். பொியாா், அண்ணா கொள்கையோடு திராவிட மாடல் எனும் பெயரோடு நல்ல தொரு ஆட்சியாளர் என்ற பாராட்டுகள் ஒருபுறம், அனைவரையும் அனுசரித்து போகும் பண்பாடுகளிலும் தலை சிறந்தவர்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய பெருமைக்கு உதாரணமாக திகழ்ந்த தமிழக முதல்வருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வோமாக.