
தாலிபான்களால் தலையில் சுடப்பட்ட பிறகு பெண் கல்விக்கான போராட்டத்தின் சர்வதேச அடையாளமாக மாறிய மலாலாவின் பிறந்தநாளான ஜூலை 12ஆம் தேதியை, இந்த தனித்துவமான நாளை, மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
பெண்கள் கல்விக்காக
பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதைத் தடை செய்யும் தாலிபானின் கட்டளையை மலாலா மீறிய போது அவரது போராட்டம் தொடங்கியது .
அக்டோபர் 9 ,2012 அன்று உலக அளவில் முதன் முதலில் அவர் அங்கீகரிக்கப்பட்டபோது, பெண் கல்விக்கான போராட்டத்தின் முகமாக இவர் உருவெடுத்தார்.
நோபல் பரிசு பெற்றது
மலாலா யூசுப் சாய் ஒரு பாகிஸ்தானிய ஆர்வலர். மற்றும் நோபல் பரிசு பெற்றவர். ஜூலை 12 1997 அன்று பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் மாவட்டத்தில் பிறந்த அவர், ஒரு பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண் கல்விக்காக தனது 17 வயதில் 2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
மலாலா தின வரலாறு
சர்வதேச மலாலா தினம் முதன்முதலில் ஜூலை 12 /2013 அன்று கொண்டாடப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை உறுதி செய்ய உலகத் தலைவர்களை இந்த நாள் அழைக்கிறது, கல்வி என்பது ஒரு சலுகை அல்ல ! மாறாக அனைவருக்கும் ஒரு அடிப்படை உரிமை என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உரிமை இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டங்கள், திட்டங்களை ஆதரிப்பதற்காக சர்வதேச மலாலா தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. மலாலா தினம் கொண்டாடுவதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் கல்வி கிடைப்பதற்காக போராடுவதற்கான இந்த நாள் வலியுறுத்துகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தரமான கல்வி மறுக்கப்படுவதால் இதனை நிறைவேற்றவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மலாலாவின் 10 மேற்கோள்கள்.
நாம் அமைதியாக இருக்கும்போது தான் நமது குரல்களின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்!
இப்போது நாம் எதிர்காலத்தை உருவாக்குவோம். நாளைய நம் கனவுகளை நிஜமாக்குவோம் !
நான் என் குரலை உயர்த்துகிறேன் - கத்துவதற்காக அல்ல, ஆனால் குரல் இல்லாதவர்கள் கூட கேட்க வேண்டும் என்பதற்காக!
உலகமே அமைதியாக இருக்கும் போது ஒரு குரல் கூட சக்தி வாய்ந்ததாக மாறும்.
ஒரு குழந்தை ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகையே மாற்றும்.
மக்கள் பேசும் மொழிகள் நிறம் அல்லது மதம் ஆகியவற்றிற்கு எதிராக எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது !
சுடப்பட்ட பெண்ணாக நான் நினைவு கூறப்படுவதை விரும்பவில்லை. எழுந்து நின்ற பெண்ணாக நான் நினைவு கூறப்படுவதை விரும்புகிறேன்!
ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்றால், ஒரு பெண்ணால் ஏன் அதை மாற்ற முடியாது?
யாராவது உங்கள் பேனாக்களை எடுத்துச் செல்லும்போது கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்!
நான் என் கதையைச் சொல்கிறேன்... அது தனித்துவமானது என்பதற்காக அல்ல, மாறாக அது தனித்துவமானது அல்ல; இது பல பெண்களின் கதை!