(நோய்கள்) 'வருமுன் காப்பவர்' நம் குடும்ப மருத்துவர்!

மே மாதம் 19ம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம்! (World Family Doctor Day)
Building Mental Resilience in a Changing World...
World Family Doctor Day
Published on

டந்த 15 வருடங்களாக, மே மாதம் 19ம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. (World Family Doctor Day)

மாறிவரும் நவீன உலகத்திற்கு ஏற்ப, எதையும் எதிர் கொள்ள மனதை தயார்படுத்துதல் (Building Mental Resilience in a Changing World) என்பது இந்த ஆண்டிற்கான உலக குடும்ப மருத்துவர் தினத்தின் இலக்கு.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில், யாராவது நோய் வாய்ப்பட்டால், குடும்ப மருத்துவருக்கு போன் செய்யப்படும். உடனே ஒரு சிறு மெடிகல் கிட் எடுத்துக் கொண்டு அவரும் வந்து சோதனைகள் செய்வார்.

திரைப்படம் மட்டுமல்ல, பல வீடுகளிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்ப மருத்துவர் இருப்பார்.

இப்போதும் இருக்கலாம்.

ஆனால் ஸ்பெஷாலிடி மருத்துவமனை, ஒவ்வொரு உறுப்புக்கும் தனிப்பட்ட மருத்துவ நிபுணர் என்று நவீன மயமாகிவிட்ட இந்தக் காலத்தில் குடும்ப மருத்துவர் என்ற விதத்தில் மருத்துவர்கள் இயங்குகிறார்களா?

டாக்டர் பார்த்தசாரதி
டாக்டர் பார்த்தசாரதி

உலக குடும்ப மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர் பார்த்தசாரதி General Physician அவர்களிடம் பேசினோம்...

அவர் தந்த விளக்கங்கள் இதோ:

ஒரு மருத்துவர், குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சை தருகிறார்.

ஆனால் குடும்ப மருத்துவரோ, நோய் பாதித்த அந்த நோயாளிக்கு எல்லா விதத்திலும் முழுமையான, (Comprehensive) தனி கவனம் செலுத்தும் விதமாக சிகிச்சை தருகிறார்.

குடும்பத்தில் அனைவர் பற்றியும் அறிந்திருப்பார்.

அவரே தேவைப்பட்டால் ஒரு ஸ்பெஷல் மருத்துவரிடம் சிபாரிசு செய்வார். அப்போது அந்த நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதை தெளிவாக எழுதித்தான் அனுப்புவார்.

அந்த ஸ்பெஷலிஸ்டே, “உங்கள் குடும்ப டாக்டர் யார்” என்று கேட்பார்கள்.

நோயில்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியம் அல்ல.

ஆரோக்கியம் (Health) என்பது பல 'நலம்'களை உள்ளடக்கியது.

முதலில் உடல் நலம்.

நோய் என்று இல்லாவிட்டாலும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்தல். (Infirmity).

பொதுவாக இதற்கு சில 'S' களைக் குறிப்பிடலாம்.

(Good) Sleep,

Smile,

Stop junk food,

(Having less) Salt and Sugar ,

Socialising,

(avoid) Sedemetary life style

இதையும் படியுங்கள்:
இந்தப் பழக்கங்களுக்கு நீங்கள் ஆளாகியிருந்தால், இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்
Building Mental Resilience in a Changing World...

அடுத்து மன நலம் (Mental health)

உடல் ரீதியாக, மனரீதியாக, சமூக ரீதியாக ஏற்படும் மன அழுத்தம் டென்ஷன் இவற்றால் மன நிலையில் பாதிப்பு ஏற்படுவது.

இதற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

உணர்வுகளின் நலம் (Emotional Health)

கோபம் ஆத்திரம் போன்ற உணர்ச்சிகள் தொடர்பான நலம். இதில் உணர்ச்சிகளை சமநிலையில் வைத்திருப்பது Balanced Emotions.

சமூக நலம் (Social Health)

இதில், மற்றவர்களோடு பழகுவது மட்டுமல்ல, அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது, அறிவைப் பகிர்ந்துகொள்வது போன்றவை அடங்கும்.

பணிச் சூழல் நலம் ( Ergnomical Health)

இதில் நாம் வேலை செய்யும் சூழல், உதாரணமாக உட்கார்ந்து வேலை செய்யும் சேர் போன்றவை உடலுக்கு உகந்ததாக இருக்கிறதா போன்றவை.

குடும்ப மருத்துவர், நோய்களுக்கு சிகிச்சை தருவதோடு, இத்தகைய ஹெல்த்களிலும் கவனம் செலுத்துகிறார்.

முழுமையான, தொடர்ச்சியான சிகிச்சைகள் தருகிறார்.

மிக முக்கியமாக நோய் வரும் முன் காப்பவர் குடும்ப மருத்துவர்.

நோய் வந்த பின் மருத்துவமனைகளையும் ஸ்பெஷலிஸ்ட்களையும் தேடி ஓடுகிறோம்.

ஆனால் குடும்ப மருத்துவருக்கு, குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் என்ன உடல் நிலை என்பது தெரியுமாதலால், பல நோய்களிலிருந்தும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
நடைப்பயிற்சி மேற்கொள்ள சரியான நேரம் எது தெரியுமா?
Building Mental Resilience in a Changing World...

குடும்பத்தில் ஒருவர் நீண்ட நாளாக நோய்வாய்ப் பட்டிருந்தால், (Chronic illness) குறிப்பிட்ட ஸ்பெஷலிஸ்ட் களிடம் அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்.

நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் துணையாயிருந்து அவருக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தருபவர் குடும்ப மருத்துவர்.

அவ்வப்போது மாறும் அவரது உடல் நிலைக்கு ஏற்ப, சிகிச்சைகளும் தரப்படும்.

மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே ஏற்படும் இந்த பிணைப்பு, பல சிக்கல்களைத் தடுப்பதால், தொடர்ச்சியான கவனிப்பும் கருத்தான சிகிச்சையும் நோயாளிக்குக் கிடைக்கிறது.

நோய்க்கு சிகிச்சை அளிப்பது தவிர, குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை, உடற்பயிற்சியின் அவசியம் போன்ற உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பல ஆலோசனைகளையும் அளிக்கிறார்.

இதனால்தான் வருமுன் காப்பவர் ஆகிறார் குடும்ப மருத்துவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com