
நடைப்பயிற்சியால் நமக்குப் பல நன்மைகள் உண்டு. அது கலோரிகளை எரிக்கிறது, கால்களுக்கு வலு அளிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை சீராக்குகிறது. மேலும் இது உடல் கொழுப்புக்களை நீக்குகிறது. ஆனால், இந்த நடைப் பயிற்சியை நீங்கள் எப்போது மேற்கொள்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.
1. வெறும் வயிற்றில் காலை நடைப்பயிற்சி
காலையில் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது மிக நல்லது. தூக்கத்திற்குப் பிறகு உங்கள் இன்சுலின் அளவு குறைவாக இருக்கும். ஆராய்ச்சியின் படி வெறும் வயிற்றில் காலை நடைப் பயிற்சி மேற்கொண்டால் 70 சதவீதம் கொழுப்புக்கள் நீங்குவதாக அறியப்படுகிறது. மாலையில் அவ்வளவு நீக்கப் படுவதில்லை. காலை நேர பயிற்சி உங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உங்கள் உடலின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை எரிக்கிறது.
2. சாப்பிட்டப் பிறகு நடைப்பயிற்சி
நீங்கள் உணவு உண்ணும் போது இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடனடியாக இன்சுலின் சுரக்கப்பட்டு சக்தியை சேமிக்கிறது. சாப்பிட்டப் பிறகு நடப்பதால் உங்கள் தசைநார்கள் சர்க்கரையிலிருந்து சக்தி பெறுகிறது. இதனால் ரத்தச் சர்க்கரை அளவு ஏறாது. ஆராய்ச்சியின் படி சாப்பிட்ட பிறகு 15 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இரத்தச் சர்க்கரையின் அளவு 22 சதவீதம் குறைவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்தக் கொழுப்பான ட்ரைக்ளிசரைடுகளின் அளவும் குறைக்கப் படுவதாக அறியப்படுகிறது.
3. செரிமானம்
சாப்பிடுவதற்கு முன்னால் மேற்கொள்ளப்படும் நடைப் பயிற்சியால் செரிமான enzymes ஊக்குவிக்கப்பட்டு செரிமானத்தை சீராக்குகிறது. சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளும் நடைப்பயிற்சி உப்புசத்தைத் தடுக்கிறது. சாப்பிட்டவுடன் பத்து நிமிட நடைப்பயிறசி உடலை லேசாக வைக்கும்.
காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது கெரியின் என்ற பசியைத் தூண்டக் கூடிய ஹார்மோனின் அளவைக் குறைக்கும். மேலும் செரிமான ஜுஸ்களை தூண்டி உணவை நன்கு செரிமானிக்க உதவும். சாப்பிட்ட பிறகு உங்கள் உடல் செரிமானத்தை ஆரம்பிக்கும்முன் பத்து நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலை லேசாக வைக்கும்.
காலை நடைப்பயிற்சி மூலம் நீங்கள் இயற்கை வெளிச்சத்தில் நடப்பதால் உங்களுக்கு நல்ல தூக்கம் இரவில் ஏற்படும். மேலும் காலை வெறும் வயிற்று நடைப் பயிற்சி உங்கள் இதய ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. இதனால் இரத்த அழுத்தமும் குறைகிறது. மாலை சாப்பிட்ட பிறகு நடப்பதால், இரத்தச் சர்க்கரை அளவு குறைகிறது. ஆனால், மிதமான நடைப்பயிற்சியையே மாலை மேற்கொள்ள வேண்டும்.