இந்தப் பழக்கங்களுக்கு நீங்கள் ஆளாகியிருந்தால், இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்

உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமான இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தால், இன்றே அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
hypertensive patient
hypertensive patient
Published on

உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான ஆரோக்கிய கோளாறாக உள்ளது. இதை ஆரம்ப நிலையில் கண்டறியாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். சர்க்கரை நோயை போல இதுவும் ஒரு அமைதியான கொலையாளிதான். பல நேரங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு துணை நோயாக இது இருக்கும் அல்லது உயர் இரத்த நோய் கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் துணை நோயாக வந்து விடுகிறது. உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மரபியல், வயது மற்றும் சில மருத்துவ நிலைமைகள் உட்பட பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், இவை அனைத்தையும் தவிர, உயர் இரத்த அழுத்த அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும் சில பழக்கவழக்கங்களும் காரணமாக இருக்கிறது. சரியான வாழ்க்கை முறையைக் பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் உயர்இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமான இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தால், இன்றே அதை மாற்றிக் கொள்ள தொடங்குங்கள்.

உடல் செயல்பாடு இல்லாமை:

மாறி வரும் வாழ்க்கை சூழலில் பெரும்பாலும் ஒருவர் அதிக நேரம் உட்கார்ந்தவாரே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. நீண்ட வேலை நேரங்களில் பலர் மணிக்கணக்கில் நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 14 உணவுகள்!
hypertensive patient

இதனால் உடல் உழைப்பு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. உடல் செயல்பாடு இல்லாததால் தேவையற்ற கொழுப்பு உடலில் சேரும், அதனால் எடை அதிகரிப்பு, தசைகள் பலவீனமடைதல் போன்ற காரணங்களினால் இதயம் வேலை செய்ய கடினமாகும். உடல் எடை அதிகரிப்பு காரணமாக இரத்த அழுத்தம் உடலில் அதிகரிக்க தொடங்கும்.

சரிவிகித உணவு:

நமது உணவு உடல் ஆரோக்கியத்தில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் உயர் இரத்த அழுத்தத்தின் மிகப்பெரிய எதிரி. உப்பு நிறைந்த சிற்றுண்டிகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது மற்றும் இறைச்சிகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதும் எடையை அதிகரித்து இரத்த அழுத்தத்தை கொண்டு வரும்.

இதையும் படியுங்கள்:
தூக்கமின்மை பிரச்னையை போக்கும் பாதஹ‌ஸ்தாசன‌ம்
hypertensive patient

உறக்கமின்மை:

இன்றைய வாழ்க்கைமுறையில் தூக்கமின்மை தான் பல நோய்களின் திறவு கோலாக உள்ளது. நாம் தூங்கும்போது, ​​நம் உடல் மன அழுத்த ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. தூக்கமின்மை இந்த செயல்முறைகளை சீர்குலைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு போதுமான தூக்கம் வராமல் இருப்பது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கிறது.

மன அழுத்தம்:

மன அழுத்தமே உயர் இரத்த அழுத்த நோய்க்கு மூல காரணமாக இருக்கிறது. மற்ற விஷயங்களை நாம் சரியாக கடைப்பிடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் கூட, மனஅழுத்தம் இருந்தால் அது அனைத்தையும் சீர்குலைத்து விடும். மன அழுத்தத்தின் கீழ், உடல் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது, இது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தம் தொடர்ந்தால், அது படிப்படியாக உயர் இரத்த அழுத்தத்திற்கான நிரந்தர காரணமாக மாறக்கூடும்.

நமது அன்றாட வாழ்வில் மேற்கூறிய பழக்கங்களை மாற்றுவது அவசியம். அலுவலகங்களில் இடைவேளையில் நடப்பது, மாடிப்படி ஏறி இறங்குவது , கை கால்களுக்கு சிறு பயிற்சி கொடுப்பது போன்றவைகளை செய்து உடல் உறுப்புகளை சீரான செயல்பாட்டில் வைக்கலாம். உடற்பயிற்சி, யோகா போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மேலும் தினசரி 8 மணி நேரம் தூங்குவதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை வெல்வது எப்படி? சில பயனுள்ள ஆலோசனைகள்...
hypertensive patient

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com