

“வயது, அந்தஸ்து, தரம், பதவி- என்று எந்த வித்தியாசமுமின்றி, பொதுமக்களோடு ஐக்கியமாகி உள்ள விஷயங்களில் மிக முக்கியமானது காதல்."
காதல் என்கிற வார்த்தையை உதட்டளவில் சொல்லுகிற 'தேங்க்ஸ்', 'ஸாரி' என்ற வார்த்தைகளைப் போல், ‘சும்மா’ ஒப்புக்கு எதற்கெடுத்தாலும் மலிவாக பயன்படுத்தக்கூடாது.
ஒப்புவமை இல்லாத உணர்வு அது! மனித உணர்வுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் உணர்வு காதல் உணர்வு.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ,"எனக்கு நீ, உனக்கு நான்!" என்று ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைக்கு காதல்தான் ஆதாரம்.
வெவ்வேறு மனித உறவுகள் பரிமளிப்பதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் உணர்வால் தான்.
‘காதல் - உணர்வு பூர்வமான உன்னத விஷயம்’.
‘வாழ்க்கை - யதார்த்த பூர்வமான கரடுமுரடான விஷயம்’.
எது காதல்? காதல் சாஸ்வதமான விஷயமா? சரியான மாற்று சந்தர்ப்பங்களில் அமைந்தால் காதல் அசைக்கப்பட்டு விடுமா?...
இன்னும் இதைப் போல் 100 கேள்விகள் மனதில் எழுகிறதா?? இதற்கெல்லாம் பதில்... உங்கள் கைகளில்!
நீங்கள் காதலிக்கிறீர்களா...?
* உங்களை ஈர்க்கும் அத்தனை பேரும் உங்களோட பெட்டர் சாய்ஸா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. உங்ககிட்ட தன் காதலை சொல்றவங்கள.. உங்களுக்கும் பிடிக்குதுன்னு (னே) வெச்சுக்கோங்க! அவங்கள நம்ம அப்பா, அம்மாவுக்கு பிடிக்குமா? உடன்பிறந்தவர்களுக்கு பிடிக்குமா? அவங்க மேல நாம வச்சிருக்கிற நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நடந்துபாங்களா? நம்முடைய குணத்துக்கும் அவங்க குணத்துக்கும் செட்டாகுமான்னு கொஞ்சம் 'திங்' பண்ணி பார்க்கிறது ரொம்ப முக்கியம்.
* உங்க லவ்வரை சந்தேகப்படாதீர்கள். நம்பிக்கையும், அன்பும் தான் ஒரு உறவை காலத்துக்கும் நிலைத்து நிற்க செய்யும். அப்படி சந்தேகமாக இருந்தால் நேரடியாக பேசி சரி செய்யுங்கள். அவர்களுக்கு தெரியாமல் போனை நோண்டுவது, பேஸ்புக்கை நோட்டம் விடுவது பர்ஸை பார்ப்பது இதெல்லாம் செய்யாதீர்கள்.
* காதலில் பொசசிவ்னஸ்(Possessiveness) இருப்பது சகஜம் தான். அதுக்காக எப்பவும் நம்ம கூட மட்டும் தான் பேசணும், வேற ஒரு பொண்ணு /பையன் கிட்ட பேச கூடாதுன்னு சொல்றது.. வேலை நேரத்துல போன் அட்டென்ட் பண்ணலன்னா சண்டை போடறதுன்னு... சின்ன விஷயத்தை தயவுசெய்து பெரிசாக்கிடாதீங்க.
* காதலன்/காதலி பார்க்கணும் என்பதற்காக பேஸ்புக்ல போட்டோ அப்லோட் பண்றத தயவு செய்து நிறுத்துங்க. யாராவது மிஸ் யூஸ் பண்ணுவதற்கு சான்ஸ் இருக்கு.. தவிர அதுவே உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் பிரச்னை வரவும் காரணமாக அமையலாம் .
* காதலிக்க ஆரம்பித்த உடனேயே அலுவலகத்தை அல்லது கல்லூரியை கட் அடிக்கிறது.. காபி ஷாப்ல /பீச்ல மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுவது ...24 மணி நேரமும் போனிலேயே கடலை போடறதுன்னு உங்க வாழ்க்கையக் கெடுத்துக்காதீங்க.. இதெல்லாம் கொஞ்சம் இருக்கலாம் .. தப்பில்ல. ஆனா, உங்க காதல் சக்ஸஸ் ஆகணும்னா முதல்ல லைஃப்ல செட்டில் ஆகணும். நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் இருந்தாதான் உங்களுடைய துணையோடு வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருக்க முடியும். நேரத்தை வேஸ்ட் பண்ணாம அதுக்கு என்ன பண்ணணும்னு அடுத்த கட்டத்தை நோக்கி யோசியுங்க. அது ரொம்ப முக்கியம்.
* உங்க லவ்வருக்கு வாழ்க்கையில நிறைய விருப்பங்கள்...சாதிக்க நிறைய ஆசைகள் இருக்கும். அது விளையாட்டோ, இசையோ, நடனமோ, போட்டோகிராஃபிக் கோ.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவங்க அதுல ஈடுபடுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுங்க. இதனால் உங்க காதலன்/ காதலி உங்களை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பாங்க.
* உங்க விருப்பத்தை தயவுசெய்து அவங்க மேல திணிக்காதீங்க. அது ரொம்ப முக்கியம். நீங்க முதல்ல அவங்களுக்காக விட்டுக் கொடுக்கணும். அதுதான் ஒரு காதலை நிலைச்சு வாழவைக்கும்.
* காதலிக்கும் போதே'லிவிங் டுகெதர்'.. தயவுசெய்து ஒத்துக்கவே ஒத்துக்காதீங்க.. இது பெரும்பாலும் பெண்களுக்கு பிரச்னையை உருவாக்கும். சமூகத்தில் உங்களின் தனிப்பட்ட மதிப்பைக் குறைத்து விடும். உங்கள் பெற்றோர் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை முறிக்கும். திடீரென ஒருநாள் உடல்ரீதியிலான அட்ராக்ஷன் குறைந்து ஆண் வெளியேற நினைத்தால்....பிறகு உங்களின் நிலை என்ன? யோசியுங்கள்!?
* நீங்க வெவ்வேறு ஜாதி, மதம் சேர்ந்தவங்கன்னா உங்க பெற்றோர்கள் இதை எப்படி எடுத்துப்பாங்க? எப்படி சமாளிக்கிறதுன்னு தயவுசெய்து முன்கூட்டியே யோசியுங்கள்.
* காதலுக்கு தைரியம் வேண்டும்தான்... ஆனால் அது அசட்டுத் தைரியமாக இருக்கக் கூடாது. எதைப்பற்றியும் யோசிக்காமல் எது வந்தாலும் சமாளிக்கலாம்ன்னு தயவுசெய்து நினைக்காதீங்க. அது சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும். யாரை எப்படி சமாளிப்பது, பிரச்சினையை எப்படி கையாள்வது என்று யோசித்து செய்யுங்கள்.
* காதலில் ஜெயிக்க மெண்டல் மெச்சூரிட்டி ரொம்ப முக்கியம். 30 வயசுல கூட இன்ஃபாச்சுவேஷன்ல காதலிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க ... காதலுக்கு மெண்டல் மெச்சூரிட்டி அவசியம்.
* பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் அப்படின்னு நம்மள சுத்தி எல்லாரும் லவ் பண்றாங்க. நாம லவ் பண்ணா என்னன்னு.. நெனச்சி அந்த நேரத்துல பக்கத்துல யார் வராங்கன்னு கூட பார்க்காமல் (அவங்க மேல) காதலில் தயவுசெய்து சிக்கிடாதீங்க.! பிடிச்சு, புரிஞ்சு வர்றது தான் நல்ல காதல்.
* கடைசியா உங்களோட காதல் உங்கள் வாழ்க்கையை அழகாக்கணுமே தவிர, உங்க இயல்பையே மாத்தி உங்களை கஷ்டப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
லவ் பண்றீங்களா... நிறைய புரிதல் + விட்டுக்கொடுத்தலோட இருங்க! அதற்காக உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள்.