

ஆதி சங்கரர் அத்வைத வேதாந்த தத்துவத்தை நிலை நிறுத்திய மாபெரும் இந்திய தத்துவ ஞானி.
கேரளாவில் காலடி எனும் ஊரில் பிறந்தவர்.
இவர் பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதியவர். இவர் ஷன்மத ஸ்தாபனாச்சாரியர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்து மதத்தை ஒருங்கிணைக்க சிருங்கேரி, துவாரகா, பூரி, ஜோஷிமத் ஆகிய இடங்களில் 4 மடங்களை நிறுவினார்.
இவர் விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட பல்வேறு ஸ்தோத்திரம், பாடல்களை எழுதியுள்ளார்.
சந்நியாசியாக தீட்சை பெற்றது.
ஸ்ரீ சங்கரர் சன்னியாசியாக முறைப்படி தீட்சை பெறுவதற்காக ஒரு குருவைத் தேடி சென்றார்.
நர்மதை நதிக்கரையில் அந்த நதிபெருக்கெடுத்து ஓடுவதை கண்டார்.
உடனே தனது சக்திகளை பயன்படுத்தி அவர் அந்த நதியை தனது கமண்டலத்திற்குள்அடக்கி நதிக்கரையில் விடுவித்தார். இதைக் கண்ட ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர் என்ற துறவி ஸ்ரீ சங்கரரைக்கண்டு வியந்து அவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டார்.
ஸ்ரீ சங்கரருக்கு பல்வேறு வேதங்களை கற்பித்தார். ஸ்ரீசங்கரர் உலகிற்குச் சென்று அத்வைதக் கோட்பாடுகளை பரப்ப வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஆதி சங்கரரின் புகழ்பெற்ற கவிதை படைப்புகளில் ஒன்றுதான் 'பஜ கோவிந்தம்' ஆகும்.
காஷ்மீரில் நடந்தது.
காஷ்மீரில் அன்னை சாரதா தேவியின் ஆலயத்தில் சர்வக்ஞ பீடம் உள்ளது.
அப்பீடத்தில் அனைத்தும் அறிந்த ஞானி மட்டுமே அமர முடியும். அந்த ஆலயத்தை சுற்றிலும் 4 திசைகளிலும் நான்கு வாசல்கள் இருக்கும். அதில் சங்கரர் தெற்கு திசையில் இருக்கும் கதவின் வழியாக உள்ளே சென்று சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார்.
அன்று முதல் அவர் ஜகத்குரு என்று போற்றப்பட்டார்.
அதன் பிறகு நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.
இதில் பூரி ஜெகந்நாத்தில் ரிக் வேதத்தை பிரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதற்கு பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார்.
தெற்கே சிருங்கேரியில் யஜூர் வேதத்தை பிரதானமாக கொண்டு அதற்கு சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாகக் கொண்டு துவாராகாவில் ஒரு மடத்தை நிறுவினார்.
வடக்கே அதர்வண வேதத்தை பிரதானமாகக் கொண்டு பத்ரிநாத்தில் ஒரு மடத்தை நிறுவினார். அதற்கு தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.
சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னகர்ப கணபதி விக்ரகத்தை சுரேச்வரிடம் தந்து அதை தினமும் பூஜித்து வருமாறு அவரிடமும் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்த பூஜை இன்றும் சிருங்கேரி சென்றால் இவற்றைக் காணலாம்.
இவ்வாறு சங்கரர் இந்தியாவில் 4 மூலைகளிலும் மடங்களை நிறுவிய பின்னர் தான் தொடர்ந்து தீர்த்த யாத்திரை சென்றார்.
அங்கு இவருடன் இருந்த சீடர்களுக்காக வெந்நீர் ஊற்று ஒன்றை தோன்றச் செய்தார்.
இன்றும் சங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட வெந்நீர் ஊற்று அங்கு உள்ளது.
தான் பூமிக்கு அவதாரம் எடுத்து வந்த நோக்கமானது நிறைவடைந்தவுடன் தனது 32 வயதில் இமயமலையின் உயரத்தில் உள்ள கேதார்நாத் சென்று கயிலாயம் அடைந்தார்.
அங்கு இவர் முக்தி பெற்ற இடத்தில் ஸ்ரீ சங்கராச்சாரிய 'கைவல்ய தாமா ' என்ற ஆலயம் உள்ளது.
அவரது ஜெயந்தி நாளில் போற்றி வணங்குவோம் !