உடலின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இயன்முறை மருத்துவம்!

செப்டம்பர் 8, உலக பிசியோதெரபி மருத்துவ நாள்
Physiotherapy treatment
Physiotherapy
Published on

னி நபர்களின் உடல் செயல்பாடு, இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும், விபத்து அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகான ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் உதவுவதில் பிசியோதெரபிஸ்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

விபத்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகான மறுவாழ்வு: விபத்தின்போது ஏற்படும் எலும்பு முறிவுகள், சுளுக்குகள் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பிறகான   ஆரோக்கியமான வாழ்வை எதிர்நோக்குவதற்கு நோயாளிகளுக்கு வழிகாட்டுவதில் பிசியோதெரபிஸ்ட்கள் மிகவும் அவசியம். நோயாளிகளுக்கு அவர்கள் தரும் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் நோயாளிகளால் தன் உடல் வலிமை, நெகிழ்வுத் தன்மை, இயக்கம் ஆகியவற்றை மீட்டெடுக்க முடிகிறது.

வலி மேலாண்மை: கீல்வாதம், முதுகு வலி மற்றும் தசை நார் அழற்சி போன்ற நாட்பட்ட குறைபாடுகள் அல்லது நோய்களின் தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ள பிசியோதெரபிஸ்ட்கள் தரும் பயிற்சிகள் வெகுவாக உதவுகின்றன. இவை ஓப்பியாய்டுகள் போன்ற மருந்துகளின் தேவைகளை குறைக்கின்றன.

காயங்களை தடுத்தல்: உடலின் இயக்க முறைகளை மதிப்பிடுவதன் மூலம் பிசியோதெரபிஸ்ட்கள் உடல் பலவீனங்களை கண்டறிந்து எதிர்கால காயங்களைத் தடுக்க உதவுகிறார்கள். குறிப்பாக, விளையாட்டு வீரர்கள் அல்லது செயலில் உள்ள நபர்களுக்கு சரியான பயிற்சிகளை வழங்குகிறார்கள். பல வீரர்களுக்கு சுளுக்கு அல்லது வீக்கம் ஏற்படும்போது பிசியோதெரபி மூலம் அதை சரி செய்து கொள்கிறார்கள்.

இயக்கம் மற்றும் சமநிலை மேம்பாடு: நரம்பியல் கோளாறு உள்ள நபர்களுக்கு இயன்முறை மருத்துவம் நன்றாக உதவுகிறது. எடுத்துக்காட்டாக பக்கவாதம் மல்டிபிள் ஸ்களிரோசிஸ் அல்லது பார்க்கின்சன் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசியோதெரபிஸ்டுகள் உடலை சரியான விதத்தில் இயங்கும் வகையில் பயிற்சிகள் தருகிறார்கள். அவர்களது உடலின் சமநிலையை மேம்படுத்துவதற்கும் இயக்கத்திற்கும் இயன்முறை மருத்துவம் வெகுவாக உதவுகிறது.

ஒட்டுமொத்த ஆரோக்கியம்: இதய நோய், நீரிழிவு மற்றும் சுவாசப் பிரச்னைகள் போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மேலும் சிக்கல்கள் இயலாமல் தடுப்பதற்கும் உடற்பயிற்சிகளை சொல்லித் தந்து அவர்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறார்கள்.

பணிச்சூழலியல் ஆலோசனைகள்: உட்கார்ந்து பணி செய்யும் நபர்கள் சரியான தோரணையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். தசைக் கூட்டு வலியால் அவதிப்பட நேரிடும். நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது திரும்பும்போது ஏற்படும் வலியில் இருந்து தடுக்க மேம்பட்ட பணிச்சூழலியல் சார்பான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கான்டாக்ட் லென்ஸை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
Physiotherapy treatment

குழந்தை மருத்துவம், முதியோர் மருத்துவம் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் பிசியோதெரபி நன்மை பயக்கிறது.  பிரசவத்திற்கு பிந்தைய உடல் பராமரிப்பு, மூட்டு வலி, இடுப்பு மற்றும் தோள்பட்டை வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகளையும் சரி செய்கிறது. இடுப்பு தள மறுவாழ்வு சிகிச்சை போன்றவற்றில் பிசியோதெரபிஸ்ட்டுகள் தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கி நோயாளிகளை ஊக்குவிக்கிறார்கள்.

மனநல நன்மைகள்: உடற்பயிற்சி மற்றும் உடல் சிகிச்சை, மன ஆரோக்கியத்தை அதிகரித்து கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது.

பிசியோதெரபிஸ்ட்டுகள் தங்களது பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் நோயாளிகளின் மறுவாழ்வு, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சமூக ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கை அழைக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com