அஞ்சறைப் பெட்டி
அஞ்சறைப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி தெரியும், ஏழரை பெட்டி தெரியுமா?...

ஜூன்10 உலக மசாலா தினம்!

ணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள் 13 சதவீதம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, 20 சதவீதம் உடலில் சேரும் சர்க்கரை அளவை குறைக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் பென்ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் அசைவ உணவுகளின் பாதிப்பை குறைக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வுணவுகளில் மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன குறிப்பாக மஞ்சளும், பட்டையும். என்கிறார்கள் மைசூர் உணவு தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள்.

பல்வேறு மருத்துவ குணமுள்ள மசாலாப்பொருட்களின் கலவைகளை, இந்த அஞ்சறை பெட்டியில் பராமரித்து வந்திருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள். வாசனைமிக்க அஞ்சறை பெட்டி.. ஆயுளை கூட்டும் மருத்துவபெட்டி இதில் மிளகு, கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு பொதுவாக இருக்கும். பொதுவாக அஞ்சறைப் பெட்டிதான். தெரியும். ஆனால் பல வீடுகளில் ஏழரைப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது. இதில் கூடுதலாக மஞ்சள், ஓமம், பெருங்காயம்,கருஞ்சீரகம் இருக்கும்.

காலம் காலமாக நம்முடைய வீடுகளில் பயன் படுத்தப்படும் அஞ்சறைப்பெட்டியின் மகத்துவம் தெரிந்து தான். அஞ்சறைப்பெட்டிகளை கட்டாயம் சீர்வரிசையில் சேர்த்துள்ளனர் அந்நாளில். பல்வேறு மளிகை பொருட்களை வைக்க அப்போது பெரிய சைஸில், மரத்தினால் செய்யப்பட்ட அஞ்சறைப்பெட்டி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. மரத்தினால் செய்யப்படுவதால், மளிகை பொருட்கள் நீண்ட காலத்துக்கு கெடாமல் இருக்கும்.

அதுமட்டுமல்ல, எந்த பொருளையும் குறைந்துவிடாமல் பார்த்து கொள்வார்களாம். காரணம், எந்த வீட்டில் அஞ்சறைப்பெட்டி நிறைவாக உள்ளதோ, அந்த வீட்டில் மகாலட்சுமியும் நிறைந்து இருப்பாள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்நாளில் முதலுதவி பெட்டியே இதுவாகத்தான் இருந்திருக்கிறது.அஞ்சறை பெட்டியில் இருக்கும் மசாலாப் பொருட்கள் சிலவற்றின் மருத்துவ மகத்துவங்களை பார்ப்போம்.

சீரகத்தில் வைட்டமின்-B, C, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற வை நிறைந்துள்ளன.. சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம் அகத்தை சீர்படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. அதாவது நம் உடலில் வயிற்றில் உள்ள வாயுக்களை களைவதில் முக்கிய பங்கு சீரகத்துக்கு உண்டு.

மிளகு: வைட்டமின்- B, E, பைப்பரின் சத்துக்களை உடையது. வாத, பித்தம், கபம் என்றையும் நம்முடைய உடலில் சமநிலையில் வைக்க உதவுகிறது. உடலிலுள்ள நச்சுக்களையும், சளி, இருமல், காய்ச்சலின் தொற்றுகளையும் நீக்க உதவுகிறது.

 மசாலாக்கள்...
மசாலாக்கள்...

வைட்டமின் C என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பொருள்தான் மஞ்சள் ஆகும். வைட்டமின் B நிறைய உள்ளதால்தான், மஞ்சள் இன்று உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபிக்கப்பட்டுள்ளது.. சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி, புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது...

வெந்தயம் என்பது வெந்த + அயம் என்பதே வெந்தயம் என்று மருவி வந்துள்ளது. அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து வெந்தயத்தில் நிறைந்துள்ளது. ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்க்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியையும், குளிர்ச்சியையும் தருகிறது.

உடலில் உள்ள நச்சுகளை பன்மடங்கு நீக்குகிறது கடுகு.. அழற்சி நோயிலிருந்து பாதுகாக்கிறது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் உள்ளதாம்.. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும்..

மூட்டுகளின் சந்துகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு பெருங்காயத்தைவிட சிறந்த மருந்து வேறில்லை.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியது.. சோம்பு இதில் அதிக அளவில் மெக்னீசிய சத்து இருக்கிறது. சோம்பு நரம்புகளை வலுவாக்குவதோடு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. அதோடு கல்லீரல் புற்றுநோயையும் போக்குகிறது.

இதையும் படியுங்கள்:
செய்வோம்; சாப்பிடுவோம்... சத்துகளையும் தெரிந்து கொள்வோம்!
அஞ்சறைப் பெட்டி

ஹெவியான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் அஜீரணம், உப்பசம் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம். ஓமத்தின் கார்மினேடிவ் பண்புகள் இந்த பிரச்னைகளை சரி செய்ய உதவும் .

வேண்டாத கெமிக்கல்கள் உடல் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் எழும் மூச்சு திணறல், மார்பு வலி மற்றும் சுவாசக் கோளாறுகளை கருஞ்சீரக கொதிநீர் சரி செய்யும். இதற்கு காரணம் கருஞ்சீரகத்தில் உள்ள "தைமோசியோனிக்" என்ற வேதிப்பொருள். இது கெட்ட கொழுப்பு மற்றும் ஒவ்வாமையை நீக்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

எல்லாவிதமான நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அப்படியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான முறையில் கையாள நமக்கு உதவியாக இருப்பதே இந்த அஞ்சறைப்பெட்டிகள்தான். எவ்வளவுதான் நவநாகரீகம் மாறினாலும், இன்றும் பழமை மாறாத இந்த அஞ்சறைப் பெட்டியானது, நம்மை பத்திரப்படுத்திக் கொண்டே, நம்முள் சேர்ந்தே பயணித்து கொண்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com