'சல்லி காசு'க்கும் 'ஜல்லிக்கட்டு'க்கும் என்ன தொடர்பு?

'Jallikattu'
'Jallikattu'
Published on

தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு - சிறப்பு கண்ணோட்டம்!

ஜல்லிக்கட்டு, தமிழர்களின் மரபுவழி விளையாட்டு வகைகளில் ஒன்றாகும். இதன் வரலாறு சங்க காலம் முதல் தொடர்கிறது. ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு என்பது, காளை மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. இன்றளவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லி காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிகட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது.

இதையும் படியுங்கள்:
ஜல்லிக்கட்டு தெரியும்; சேவல் கட்டு தெரியுமா?
'Jallikattu'

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் மாடு பிடிக்கும் வீர விளையாட்டு ஆகும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பின் காரணமாக உலக அளவில் பிரபலமாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

ஜல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு விதமாக நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
வரலாற்றில் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு!
'Jallikattu'

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளன.  
குறிப்பாக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அலங்காநல்லூர், பாலேமடு, அனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ்பெற்றவை மட்டுமல்ல பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றவை. இந்த போட்டியில் பங்கேற்பதையே காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவார்கள். உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை, இந்த போட்டியை காண மதுரையில் திரள்வார்கள்.

முதல் பரிசு பெறும் காளை, மாடுபிடி வீரர்களுக்கு கார், இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படும். பங்கேற்கும் ஒவ்வொரு காளைக்கும் தங்க காசு, மாடுகளை அடக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தங்க காசு மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். அதனாலேயே, இந்த போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் எதிர்பார்பை கூட்டி வருகின்றன.

இந்த 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து உடல் தகுதி அடிப்படையி்ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரரோ, காளைகளோ மற்ற 2 போட்டியில் கலந்துகொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com