

சினிமா என்பது ஒரு கேளிக்கையான விஷயம். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம். கலை என்ற போதிலும் பல நல்ல தகவல்களை பாடல்கள் மூலம், கதைகளின் மூலம், பல வரலாறுகளை கண்முன்னே கொண்டுவரும் அபூா்வ காரணியாகும். முதலில் ஊமைப்படம், அதன் பிறகு பாடல் மற்றும் நாட்டியம் மூலம் பல்வேறு விஷயங்களை திரைப்படங்கள் வாயிலாக புராண, சரித்திர, இலக்கியப் படங்கள் வெளிவந்தன. அதனூடே சமுக சீா்திருத்த விஷயங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
படிப்படியாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பலவித யுக்திகளைப் புகுத்தி 3டி தொழில் நுட்ப அளவில் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டதே நிதர்சனம். அதன் வகையில், அனிமேஷன் படங்களும் வலம் வரத் தொடங்கி, அபரிமிதமான இடத்தைப் பிடித்து, விளம்பரம், திரைப்பட காா்ட்டூன்கள், வீடியோ கேம்கள் போன்றவை இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன.
அனிமேஷன் என்பது இயங்கும் படங்கள் எனப் பொருள்படும். அதன் வளா்ச்சியை விவரிக்கும் விதமாக சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (ASIFA) வாயிலாக தொடங்கப்பட்டது. 1892ம் ஆண்டு அக்டோபர் 28ல் பாாிஸ் நகரில் எமுலி கெல் என்பவரால் திட்டமிடப்பட்ட நகரும் படங்களின் பொது நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக மேற்படி தினம் சர்வதேச அனிமேஷன் தினமாகக் (INTERNATIONAL ANIMATION DAY) கொண்டாடப்பட்டு வருகிறது.
அனிமேஷன் என்பது ஒரு வித ஈர்ப்புத் தன்மையை உள்ளடக்கியதாகும். அதே நேரம் கலாசார இணைப்புகளுக்கு வழிவகையும் இது செய்கிறது எனவும் சொல்லலாம். ஏறக்குறைய ஐம்பதிற்கும் மேலான நாடுகள் அனிமேஷன் தினம் கொண்டாடுகின்றன என ஒரு தகவல் சொல்கிறது.
கலை மற்றும் கலாசாரத்தை வலியுறுத்தும் அனிமேஷன் படங்கள், பல நிலையான படங்கள், சித்திரங்கள், வரையப்பட்ட ஓவியங்களை ஒன்றன் பின் ஒன்றாக காண்பிக்கப்படும் நிலையில் ஒரு மாயத்தோற்றம் நிகழ்த்துவதே அனிமேஷன் கலையாகும். இந்த அனிமேஷன் தினக் கொண்டாட்டம் 2002 முதல் நடைமுறையில் உள்ளது.
ஓவியங்களுக்கு உயிா் கொடுக்கும் தன்மைகளை உள்ளடக்கியதாகும். சாதாரண படங்களை வேகமாக கம்ப்யூட்டர் துணையுடன் 2D, 3D தொழில் நுட்பங்களுடன் பல வகையான வடிவங்களில், செயல்பாடுகளை உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது.
பாரம்பரியமாக வரையப்பட்ட படங்களை ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகமாக காட்சிப்படுத்தப்படுத்துகிறது. ஆக, விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு நாம் மன மகிழ்ச்சி அடைவதோடு, நாமும் இதனுடன் இணைவோம். அனிமேஷன் திரைப்படங்களைப் பாா்த்து மகிழ்வோம்!