

மனிதனின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின்களைப் பற்றிய கவனத்தை எல்லோருக்கும் முதன் முதலாக ஏற்படுத்தியவர் சர்.பிரிடெரிக் கெளலண்ட் ஹாப்கின்ஸ் ( Sir Frederick Gowland Hopkins) (1861 - 2947) என்ற பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானி. இவர் முதல் முறையாக 6 மாதமாக இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்தார். அதில் போர் அடிக்கவே, ஒரு ரசாயன ஆய்வகத்தில் உதவியாளராக சேர்ந்து ரசாயனங்களைப் பற்றி தெரிந்து கொண்டார். பின்னர் மெடிக்கல் காலேஜ் ஒன்றில் சேர்ந்து 27 வயதில் டாக்டரானார்.
பட்டம்பூச்சியின் இறக்கைகள் ஏன் கலர் கலராக இருக்கின்றன? என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளைக் கொண்டு ஆய்வு செய்து, அதற்குக் காரணம் ‘யூரிக் அமிலம்’தான் என்பதைக் கண்டறிந்தார்.
இதுபோன்று வித்தியாசமாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 1895ம் ஆண்டு இரண்டு எலிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். ஹாப்கின்ஸ் அதில் ஒரு எலிக்கு சாதாரண உணவுகளையும் மற்றொரு எலிக்கு சாதாரண உணவுகளை பாலுடன் சேர்த்து உண்ணச் செய்தார். அதில் மற்ற உணவுகளுடன் பாலையும் சேர்த்து உண்ட எலி ஆரோக்கியமாகவும், வேகமாகவும் வளர்ந்தது.
இந்த ஆய்விலிருந்து மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் சாதாரண உணவுகளுடன் உணவின் துணைக் காரணிகள் என்று சில சத்துப் பொருட்கள் தேவை என்பதைக் கண்டறிந்தார். அதிலிருந்து இவர் 1901ல் 20 அமினோ அமிலங்களைக் கண்டறிந்து, ‘பயோ-கெமிஸ்ட்ரி’ துறைக்கு அடித்தளமிட்டார். ஆனால், ஹாப்கின்ஸ் கண்டுபிடித்த உணவின் துணைக் காரணிகளுக்கு 'வைட்டமின்கள்' என்று பெயர் சூட்டியவர், டச்சு மருத்துவ நிபுணர் கிறிஸ்டியன் எய்ஜிகிமன் (1858 - 1930) இவர் வைட்டமின் 'பி'யை கண்டுபிடித்தவர்.
இதற்காக பிரிடெரிக் கெளலண்ட் ஹாப்கின்ஸ் மற்றும் கிறிஸ்டியன் எய்ஜிகிமன் (Christian Eijkman) இருவருக்கும் 1929ம் ஆண்டு மருத்துவத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. எய்ஜிகிமன் மலேரியா நோய்க்குக் காரணமான கிருமிகளை கண்டுபிடித்ததற்காகவும், வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் நோய்களைப் பற்றி ஆய்வு செய்ததற்காகவும் அறியப்படுகிறார்.
வைட்டமின் Aஐ கண்டறிந்தவர் எல்மர் மெக்கலம் ஆவார். இவர் ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர், இவர் 1913ல் வைட்டமின் ஏயைக் கண்டறிந்தார். மேலும், வைட்டமின் Bஐயும் கண்டுபிடிக்க உதவினார். 1913ல், மெக்கலம் மற்றும் மார்கெரைட் டேவிஸ் ஆகியோர் இணைந்து வைட்டமின் Aஐ கண்டுபிடித்தனர். மீண்டும் மெக்கல்லம் 1922ல் வைட்டமின் ‘டி'யை கண்டுபிடித்தார்.
வைட்டமின் சியை (அஸ்கார்பிக் அமிலம்) கண்டுபிடித்தவர் ஹங்கேரிய உயிர் வேதியியலாளர் ஆல்பர்ட் சென்ட் கியோர்கி ஆவார். அவர் வைட்டமின் சி கண்டுபிடிப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளுக்காக 1937ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். வைட்டமின் ஈயை ஹெர்பர்ட் எம்.எவன்ஸ் மற்றும் கேத்தரின் ஜே.எஸ். பிஷப் ஆகியோர் 1922ல் கண்டுபிடித்தனர். வைட்டமின் ஈக்கு மலட்டுத்தன்மையை குணப்படுத்தும் திறன் இருப்பதால், ஆரம்பத்தில் ‘மலட்டுத்தன்மைக்கு எதிரான வைட்டமின்’ என்றும் இது அறியப்பட்டது.