முதுமையில் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ இக்கணம் தேவை சிக்கனம்!

அக்டோபர் 30, உலக சிக்கன தினம்
World Thrift Day
World Thrift Day
Published on

றைவன் கொடுத்த வாழ்க்கை. இதை வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். அதுதான் மிகவும் சிறப்பு. அந்த வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்தே நாம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஏராளமாக உள்ளன. அதில் சில நோ்மறை, எதிா்மறை விஷயங்களும் இருந்து வருவது இயல்பான ஒன்றுதான். பல விஷயங்களை நமது வீட்டில் உள்ள பொியவர்கள் அதற்கு மேல் நமக்குத் தோன்றுவது என கற்றுக்கொண்டு கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம்.

நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பல வகைப்படும். அவற்றை கடைபிடிப்பதால்தான் ஓரளவுக்கு கெளரவமாக வாழ முடிகிறது. ஆனால், அவை அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல சிக்கனத்தைக் கடைபிடித்தல் என்பது எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிக்கனம் எனும் ஐந்தெழுத்துதான் பல சமயங்களில் நம் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலகை உள்ளங்கையில் அடக்கிய இணையம்: உங்களுக்குத் தெரியாத ரகசியங்கள்!
World Thrift Day

நாம் நமது வாழ்வில் ஊதாாித்தனத்தை எப்போதும் கைவிடுவதில்லை. அதேசமயம், நல்ல விஷயமான சிக்கனத்தையும் கடைபிடிப்பதில்லை. அதனால் பலவித இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழல் வந்துவிடுவதும் இயல்பான ஒன்றுதான். சிக்கனம் இருந்தால்தான் வாழ்க்கையில் எதையும் சாதிக்க இயலும்.

பொதுவாக, சிக்கனம் விஷயத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் சோபிக்கிறாா்கள். ஒரு பெண் நினைத்தால் சேமிக்கவும் முடியும், சேமிப்பை தொலைக்கவும் முடியும். திரைப்படத்தில் கூட ஒரு பாடல் வரும், ‘சோ்த்த பணத்தை சிக்கனமாய் செலவு செய்ய பக்குவமாய் அம்மா கையில கொடுத்துப்போடு, அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க’ என வரும். அதுபோல், சிக்கனம் என்பது நமது எதிா்காலத்திற்கான ஆதாரமாக விளங்குகிறது. அந்தக் காலங்களில் பொியவர்கள் பல வகைகளில், பல இடங்களில் பணத்தையோ, நகைகளையோ மறைத்து மற்றும் புதைத்து வைத்து சேமித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
பேஸ் புக் தோன்றிய சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
World Thrift Day

சரி, விஷயத்திற்கு வருவோம். முதல் உலகப் போருக்குப் பிறகு வங்கிகள் மீது பொது மக்களுக்கு நம்பகத்தன்மை போனது. அதுசமயம் மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அதன் பயனை மக்கள் புாிந்துகொள்ளும் வகையில், 1924ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டில் அக்டோபர் 31ம் நாள் உலக சேமிப்பு (World Savings Day) தினமாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய இத்தாலி பேராசிாியர் பிலிப் போரவிகா என்பரால் இது அறிவிக்கப்பட்டது. அதேநேரம் 1984ம் ஆண்டு அக்டோபர் 31ல் நமது முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் என்பதால் இந்தியாவில் மட்டும் சிக்கன தினம் அக்டோபர் 30ம் நாள் கொண்டாடப்படுகிறது.

சிக்கனம் என்றால் பணம் சேமிப்பு என்று மட்டும் அர்த்தமல்ல. இருந்தபோதிலும் கால நேரம் சேமிப்பு, மின்சாரம், இயற்கை வளம், குடிநீா் இவற்றிலும் நாம் எப்போதும் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஆக, மனிதன் பிறந்தான், வளா்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்ற நிலைபாடு மட்டுமல்லாது, நாம் நமது வாழ்க்கையில் பல விதங்களில் சிக்கனத்தைக் கடைபிடித்து பணத்தை சோ்த்து வைக்க வேண்டும். சேமிப்பு இருந்தால்தான் சீனியர் சிட்டிசன் வாழ்க்கையை ஜூனியர் வாழ்க்கை போல வாழ முடியும். எனவே, இந்த நாளில் சிக்கனமாக சேமிப்போம், சீரான வாழ்க்கையை யாா் கையையும் எதிா்பாராமல் வாழ்ந்து காட்டுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com