லின் மற்றும் பெக்கர் நடத்திய ஆய்வின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகில் அதிக IQ மக்களை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்..
அதிக IQ உள்ள நாட்டைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும். இது போன்ற ஒப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதில் பல்வேறு காரணிகள் உள்ளடங்கியிருப்பதால் இது கடினம். 'நாடுகளின் நுண்ணறிவு' என்ற தலைப்பில் உளவியலாளர் ரிச்சர்ட் லின் மற்றும் டேவிட் பெக்கர் இந்த ஆய்வை நடத்தினார்கள். 2025 ஆம் ஆண்டில் புத்திசாலித்தனமான நாடுகளின் பட்டியல், உலக மக்கள்தொகை மதிப்பாய்வு வழங்கிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது.
IQ சோதனை என்றால் என்ன?
நுண்ணறிவு எண் அல்லது IQ என்பது நுண்ணறிவின் அளவீடு ஆகும். IQ சோதனை என்பது ஒரு நபரின் அறிவாற்றலின் திறன்களை அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் சிக்கலை தீர்க்கும் திறன்கள், சிந்தனைகள் மற்றும் பொது அறிவு ஆகியவை அடங்கும்.
அதிக IQ கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியல் [2025]:
உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி , அதிக IQ கொண்ட முதல் 10 நாடுகளின் தேர்வானது Lynn/Becker scale ஐ அடிப்படையாகக் கொண்டது.
ஆராய்ச்சி அறிக்கையின்படி, ஜப்பானியர்கள் 106.48 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது அவர்களை பட்டியலில் சிறந்தவர்களாக ஆக்குகிறது. ஜப்பானியர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்கள் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஜப்பான் அதன் மின்னணு சாதனங்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் தரத்திற்கு உலகளவில் பிரபலமானது. இவை மற்றவற்றை விட மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
தைவான் அதன் புத்திசாலித்தனமான மக்கள்தொகை காரணமாக உலகில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது குறைக்கடத்தி (semi conductor) சந்தையில் தைவான் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. மேலும் அந்த நாட்டின் மக்களின் புத்திசாலித்தனம் அதை சாத்தியமாக்கியுள்ளது. 106.47 புள்ளிகள் பெற்று, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வில் சிங்கப்பூர் 105.89 மதிப்பெண்களைப் பெற்று, பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. விமர்சன சிந்தனை மற்றும் பகுத்தறிவு திறன்களில் அதிக கவனம் செலுத்தி வலுவான கல்வி முறையை பின்பற்றுவதன் காரணமாக இந்த நாடு பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
இந்த ஆய்வில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாடான ஹாங்காங். இந்த நாடு 105.37 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. ஹாங்காங் உலகின் சிறந்த கல்வி முறைகளை பின்பற்றும் நாடுகளில் ஒன்றாகும். மேலும் இப்போது தற்செயலாக உயர் கல்வியை கற்பதற்கேற்ற உலகின் சில சிறந்த பல்கலைக்கழகங்கள் அங்கு உள்ளன.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனா, 104.1 மதிப்பெண்களுடன் உலகின் புத்திசாலி நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது அந்த நாட்டின் கல்வி முறையின் பிரதிபலிப்பாகும்.
தென் கொரியர்கள் புத்திசாலிகளாக இருப்பதற்குக் காரணம், நல்ல மதிப்பெண்களைப் பெறுவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே ஆகும்.
தென் கொரியாவை பொறுத்த வரையில் புத்திசாலித்தனத்தை தீர்மானிப்பதில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தென் கொரியா உலகின் ஆறாவது புத்திசாலித்தனமான நாடாகும், லின்/பெக்கர் அளவுகோலில் 102.35 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
பெலாரஸ் ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடு, இங்கிருக்கும் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளார்கள். ஆய்வில் இது 101.6 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதாவது பெலாரஸின் சராசரி IQ 101.6 ஆகும். இது கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், பலனளிக்கும் கல்வி முறை மற்றும் கணிதம், அறிவியல் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் விளைவாகும்
ஃபின்லாந்து 101.2 மதிப்பெண்களுடன் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றியானது, ஃபின்லாந்து மக்களை மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர்களாக மாற்றிய வலுவான கல்வி முறை மற்றும் உயர் தர ஆசிரியர்களின் பயிற்சியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் லீக்டென்ஸ்டீன் 101.07 மதிப்பெண்கள் பெற்று, உலகின் புத்திசாலித்தனமான நாடுகளில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், உயர்தர கல்வி முறை, சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் கலாச்சாரம் மற்றும் அறிவு சார்ந்த கற்றலுக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி வரை, உலகின் சிறந்த ஒட்டுமொத்த கல்வி முறைகளை வழங்கும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும்.
போதுமான மற்றும் உயர்தர ஊட்டச்சத்து மிக்க வாழ்க்கை நிலைமைகளுடன் இணைந்து, உலகின் சிறந்த மருத்துவ வசதிகளில் ஒன்றாகவும் இந்த நாடு திகழ்கிறது. இந்த ஆய்வில் ஜெர்மனி 100.74 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.