நாட்டின் பாதுகாப்பு இவற்றின் கையில் - உலகின் Top 10 உளவு நிறுவனங்கள்!

Intelligence agencies
Intelligence agencies
Published on

ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிற நாடுகளுடனான உறவை பராமரிப்பதில் புலனாய்வு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் முக்கியமான தகவல்களை சேகரித்து ரகசிய நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முன் கூட்டியே கணிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிப்புற சக்திகள் மூலம் சாத்தியமான அபாயங்கள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் திறத்தன்மையை உறுதி செய்வதில் இந்த ஏஜென்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாம் பார்க்கும் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட், ஈத்தன் ஹண்ட், போன்றவர்கள் இது போன்ற ஏஜென்சிகளை சேர்ந்தவர்கள் தான். ஒவ்வொரு நாடும் அவர்களுக்கென ஒரு உளவு நிறுவனத்தை வைத்திருக்கும். இதில் உலகின் சக்தி வாய்ந்த உளவு நிறுவனங்களை கொண்டிருக்கும் 10 நாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. அமெரிக்கா (CIA)

ஹாலிவுட் படங்களால் உலக அளவில் மிகவும் பிரபலமான உளவுத்துறை நிறுவனமாக CIA உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி உளவு தகவல்களை சேகரிப்பதிலும், ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது . இது ஆடம்பரமான தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய செல்வாக்குடன் வலிமை மிக்க நிறுவனமாக திகழ்கிறது.

2. இஸ்ரேல் - Mossad

தன்னுடைய துல்லிய மற்றும் ஆவேசமான செயல் திறனுக்காக புகழ்பெற்ற மொசாட், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் உளவுத்துறை நிறுவனமாகும். அதன் செயல்பாடுகள் குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

3. யுனைடெட் கிங்டம் (M16)

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் புகழ் பெற்ற கதாபாத்திரமான ஈத்தன் ஹண்ட் இந்த நிறுவனத்தை சேர்ந்தவராக தான் இருப்பார். M16 என அழைக்கப்படும் இந்த பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனம், வெளிநாட்டு உளவுத்துறையில் நிபுணத்துவம் பெற்றது. மற்றும் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4. ரஷ்யா (FSB)

FSB ஆனது KGB - யிலிருந்து உருவான நிறுவனமாகும். இது ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு உள்கட்ட அமைப்பின் தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக உள்ளது. உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உட்பட, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ரஷ்யாவை பாதுகாப்பதில் இந்த நிறுவனம் முக்கியமானதாக இருக்கிறது.

5. இந்தியா (RAW)

1968-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் RAW வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கண்காணிக்கிறது. இது உலக அளவில் ஐந்தாவது சக்தி வாய்ந்த உளவு நிறுவனமாக உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் குறிப்பாக தெற்காசியாவில் RAW முக்கிய பங்காற்றுகிறது. அதன் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் போர்களின் போது எடுக்கப்பட்ட உளவுத்துறை மற்றும் எல்லை தாண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

6. பாகிஸ்தான் (ISI)

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதன் ரகசிய நடவடிக்கைகள் மற்றும் உளவுத்துறை ரகசிய சேவைக்கு பெயர் பெற்றது. குறிப்பாக தெற்காசியாவை முழுமையாக கண்காணிக்கிறது. பிராந்திய புவிசார் அரசியலில் அதன் விரிவான ஈடுபாடு மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் பங்கிற்காக இது பாராட்டப்பட்டது. அதே சமயம் பல விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இதையும் படியுங்கள்:
உலகில் குறைந்த லஞ்சம், ஊழல் கொண்ட நாடு எது தெரியுமா?
Intelligence agencies

7. சீனா (MSS)

சீனாவுக்கான உளவுத்துறை மற்றும் எதிர் உளவுத்துறை செயல்பாடுகளை MSS பொறுப்பேற்று நடத்துகிறது. இணைய உழவு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்துவதன் மூலம் உலகளாவிய உளவுத்துறையில் MSS முக்கிய பங்கு வகிக்கிறது.

8. ஜெர்மனி (BND)

இரண்டாம் உலகப்போர் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் ஜெர்மனியின் உளவுத்துறை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. BND வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனமாக செயல்படுகிறது. சர்வதேச அச்சுறுத்தல்கள் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இளைய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு BNDன் செயல் பாடுகள் இன்றியமையாதது.

இதையும் படியுங்கள்:
நாணயங்களை எண்ண பயன்படுத்தப்பட்ட காசு பலகை (Coin Board) அல்லது பண பலகை (Pana Palakai)! உங்க வீட்டில் இருக்கா?
Intelligence agencies

9. பிரான்ஸ் (DGSE)

உளவுத்துறை சேகரிப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் பிரான்சை பாதுகாப்பதில் DGSE மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க ஐரோப்பிய மற்றும் உலகளாவிய உளவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

10. ஆஸ்திரேலியா (ASIS)

ASIS என்பது ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனம். பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய உளவுத்துறை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. ஆசிய - பசிப்பிக் பிராந்தியத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை கண்காணிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com