
புத்திசாலித்தனம் சில சமயங்களில் பணத்தை விட அதிக மதிப்பளிப்பதாக இருக்கிறது. IQ என்று பிரபலமாக குறிப்பிடப்படும் புத்தி கூர்மையின் அளவு சாதாரண மக்களை கூட ஈர்க்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.
அந்த வகையில் தி கிகா சொசைட்டியின் ஆய்வின்படி, உலகின் அதிக IQ உள்ள டாப் 10 மக்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. யங்ஹூன் கிம்
யுனைடெட் சிக்மா இன்டெலிஜென்ஸ் அசோசியேஷனின் தலைவரான தென் கொரியாவை சேர்ந்த யங்ஹூன் கிம் உலகின் மிக உயர்ந்த IQ மதிப்பெண் 276 உள்ள மனிதர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மொழியியல் மற்றும் உளவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதோடு, பல சர்வதேச உளவுத்துறை அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
2. டெரன்ஸ் தாவோ
IQ மதிப்பெண் 230 கொண்ட ஆஸ்திரேலியா-அமெரிக்க கணிதவியலாளரான டெரன்ஸ் தாவோ 24 வயதில் UCLA-வில் முழு நேர பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றதோடு, ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றார். உலகின் 2வது உயர்ந்த IQ கொண்ட தாவோ கணிதத் துறைகளில், ஹார்மோனிக் பகுப்பாய்வு எண் கோட்பாட்டில் புரட்சிகரமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
3. மர்லின் வோஸ் சாவந்த்
IQ மதிப்பெண் 228 பெற்று 3வது இடத்தில் உள்ள ஒரே பெண் என்ற பெருமை பெற்ற மர்லின் வோஸ் சாவந்த் பரேட் பத்திரிகையில் 'Ask Marilyn' என்ற பிரிவில் புதிர்களைத் தீர்த்து லாஜிக்கான கேள்விகளுக்கு பதிலளித்ததால் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
4. கிறிஸ்டோபர் ஹிராட்டா
கிறிஸ்டோபர் ஹிராட்டா 13 வயதிலேயே, சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதோடு, 22 வயதில் முனைவர் பட்டத்தைப் பெற்ற ஜப்பானிய-அமெரிக்க வானியற்பியலாளரான, இவர் 225 IQ மதிப்பெண்ணைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
5. ஷோ யானோ
200 IQ மதிப்பெண்ணைக் கொண்டு, 9 வயதில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டு 21 வயதில் MD பட்டம் பெற்ற ஷோ யானோ அமெரிக்க குழந்தை மேதை ஆவார். மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைகளில் ஆராய்ச்சி செய்து மிகச்சிறிய வயதிலேயே மருத்துவ மற்றும் அறிவியல் துறையில் பெரிய பங்களிப்புகளை செய்துள்ளார்.
6. எவாஞ்சலோஸ் கட்சியோலிஸ்
மருத்துவம் ஆராய்ச்சி தத்துவத் துறையில் பட்டங்களை பெற்று 198 IQ மதிப்பெண்களை பெற்ற கிரேக்க மனநல மருத்துவரான எவாஞ்சலோஸ் கட்சியோலிஸ் ,உயர் IQ சமூகத்தின் தலைவராக உள்ளதோடு, கல்வித் துறையில் தனது சாதனைகளுக்காகப் பிரபலமானவராக உள்ளார்.
7. கிறிஸ்டோபர் ஹார்டிங்
உலகின் புத்திசாலி மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கிறிஸ்டோபர் ஹார்டிங் IQ மதிப்பெண் 197 பெற்று உயர் IQ குழுக்களில் முக்கிய நபராக உள்ளதோடு International Society for Philosophical Enquiry (ISPE) அமைப்பின் ஆஸ்திரேலிய நிறுவனராக இருக்கிறார் .
8. கிறிஸ்டோபர் லங்கன்
IQ மதிப்பெண் 195 பெற்றுள்ள கிறிஸ்டோபர் லங்கன் தனது அறிவியல், தத்துவம் மற்றும் இறையியல் ஆகியவற்றை இணைக்க முயற்சிக்கும் கோட்பாடான Cognitive Theoretic Model of the Universe (CTMU) மூலம் பிரபலமானவர்.
9. ரிக் ரோஸ்னர்
192 IQ மதிப்பெண்ணுடன் 9வது இடத்தில் உள்ள ரிக் ரோஸ்னர் தொலைக்காட்சி எழுத்தாளர் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகளில் விளையாடுவது வரை தனது வாழ்நாள் முழுவதும் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கையை வாழ்ந்தார்.
10. கேரி காஸ்பரோவ்
ரஷ்யா செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சாம்பியனான 190 IQ மதிப்பெண் பெற்றுள்ள கேரி காஸ்பரோவ் கம்ப்யூட்டருக்கு எதிராக சதுரங்கப் போட்டிகளை விளையாடுவதன் மூலம் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் எழுச்சியை ஆதரித்துள்ள எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலரும் ஆவார். மேற்கூறிய 10 நபர்களும் சந்தேகம் இல்லாமல் IQ மதிப்பெண் அடிப்படையில் புத்தி கூர்மை உள்ளவர்கள் தான் என்பதில் ஐயமே இல்லை.