
அநேகமாக எல்லா வீடுகளிலும் சமையலுக்கு ஒரு காயும் இல்லையென்றால்தான் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பப்பாளியைப் பறித்து பயன்படுத்துவார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் பப்பாளி அழகிற்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் சிறந்ததென்று? இதோ நிறைய சத்துக்கள் கொண்ட பப்பாளியின் மருத்துவ குணங்கள்.
1. அல்சர் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
2. பப்பாளிப் பழத்தை கூழாக்கி, வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், சொர சொரப்புத்தன்மை மாறி முகம் பளபளப்பாக மாறிவிடும்.
3. பப்பாளிப் பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்த அளவில் உள்ளன.
4. பப்பாளியில் உள்ள 'பேராக்ஸ்நேஸ்' என்ற தாதுப்பொருள் உடலில் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க பயன்படுகிறது.
5. பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ, குடல் பகுதியில் கேன்சர் வராமல் பாதுகாக்கிறது
6. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பப்பாளிப்பழம் நல்ல ஒரு மருந்துபோல் செயல்படும்.
7. கிட்னியில் கல் இருப்பவர்கள், பப்பாளிப்பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
8. பப்பாளி இலைச்சாற்றை, உடலில் படர்தாமரை உள்ள இடத்தில் காலை, மாலை வேளைகளில் தொடர்ந்து ஒரு வாரம் தடவிவர படர்தாமரை மறைந்து விடும்.
9. பழுத்த பப்பாளிப் பழத்துண்டில் ஒன்றை எடுத்து முகம், கழுத்து, பாதப் பகுதிகளில் தேய்த்து கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வறண்ட தோலும் மினுமினுக்கும்.
10. சிலருக்கு அதிக புரோடீன் நிறைந்த உணவு சாப்பிட்டால், செரிக்காமல் வயிறுகோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.
11. தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
12 . மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களை விட பப்பாளிப்பழம் அருமையான ஒரு மருந்து போல் செயல்படும். இந்தப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அறவே நீங்கி விடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)