விளாடிமிர் லெனின்: உலக வரலாற்றைத் திருப்பிப் போட்ட முக்கிய தருணங்கள்!

ஜனவரி 21 - விளாடிமிர் லெனின் நினைவு தினம்!
Vladimir Lenin
Vladimir Lenin
Published on

இந்திய அரசியல் சிந்தனையில் விளாடிமிர் லெனின் (Vladimir Lenin) ஏற்படுத்திய தாக்கம் மிகவும் ஆழமானது. லெனின் கூறிய 'புரட்சி + கட்சி ஒழுக்கம்' (Vanguard Party) கருத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை அமைப்பாக அமைந்தது.

1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உருவாக்கத்திற்கு இது போன்ற லெனினிய சிந்தனைகளே காரணம்.

தொழிலாளர்–விவசாயி கூட்டணி (Worker–Peasant Alliance) என்பதை வலியுறுத்திய லெனின் தந்த தாக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய விவசாய சங்கம் (AIKS) தொழிற்சங்க இயக்கங்கள் வலுவடைந்தது.

மேலும் காலனிய எதிர்ப்பு (Anti-Imperialism), சாதிய வேறுபாடு, சிந்தனை அரசியல் (Ideological Politics) மூலம் அரசியல் நிலைகளை இப்படி லெனின், இந்திய அரசியலுக்கு 'புரட்சி' சிந்தனைகளை மட்டுமல்ல அரசியலை பொருளாதார–வர்க்க கோணத்தில் பார்க்கும் பார்வையைத் தந்த தலைவராகிறார் லெனின்.

இந்தியாவில் மட்டுமின்றி உலக அரங்கில் கம்யூனிஸ்ட் சிந்தனைகளை விதைத்து உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான புரட்சியாளர்களில் ஒருவராக உலகத்தலைவராக நிலைத்த புகழைப் பெறுகிறார் விளாடிமிர் இலிச்ச் லெனின் (Vladimir Ilyich Lenin).

இவரின் நினைவு தினமான இன்று இவரைப்பற்றி சில சுவாரஸ்யமான சிறப்புகள்:

விளாடிமிர் இளிச்ச் லெனின் (Vladimir Ilyich Lenin) 22 ஏப்ரல் 1870 அன்று ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் நகரில் பிறந்தார். அவரது தந்தை அரசு அலுவலராக கல்வித் துறையில் பணியாற்றியவர் என்பதால் லெனின் கட்டுபாடுகளுடனே வளர்ந்தவர். எனினும் விரும்பத்தகாத ஒரு நிகழ்வு அவரை இளமையிலேயே சமூக அநீதி, அடக்குமுறை போன்றவற்றால் பாதிக்கப்பட காரணமாக அமைந்தது.

லெனினுக்கு 6 உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரான அலெக்சாண்டர் 1887-ல் ரஷ்ய மன்னர் மீது சதி செய்த குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். இந்த நிகழ்வு லெனினின் மனதில் பல கேள்விகளை எழுப்பி அவரை புரட்சிப் பாதையில் உறுதியாக இட்டுச் சென்றது. அதுமட்டுமின்றி சட்டம் பயின்ற லெனின், கார்ல் மார்க்ஸ் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிய சிந்தனையை ரஷ்யாவில் பரப்பத் தொடங்கினார்.

1903-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி பிளவடைந்தபோது, போல்ஷெவிக் பிரிவின் தலைவராக லெனின் உருவெடுத்தார். 1917-ம் ஆண்டு அக்டோபர் புரட்சி மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்தி, உலகின் முதல் சமூகநல (கம்யூனிஸ்ட்) அரசை நிறுவினார். குறிப்பாக நிலம் விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கும் லெனின் தலைமையில் வழங்கப்பட்டது மக்களால் வரவேற்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு விரல்! ரஷ்யப் புரட்சியை மாற்றிய லெனின் மந்திரம்!
Vladimir Lenin

இலவச கல்வி, இலவச மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை போன்ற சமூக மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது, அரசியல் சிந்தனை மட்டுமல்ல, நடைமுறை புரட்சியையும் வெற்றிகரமாக நடத்தி உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்ட், இடதுசாரி இயக்கங்களுக்கு ஊக்கமாக இருந்தது, பதவியில் இருந்தாலும் எளிய வாழ்க்கை, தியாக மனப்பான்மை ஆகியவற்றை பின்பற்றியது என லெனின் பெற்ற சிறப்புகள் ஏராளம்.

உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசு உருவாக்கம், மார்க்சிய சிந்தனையின் நடைமுறை வடிவம் (Marxism–Leninism), உழைப்பாளர் – விவசாயி ஆட்சிக் கொள்கை, கட்சி அமைப்பு – முன்னணி கட்சி (Vanguard Party), பேரரசுவாதம் குறித்த பகுப்பாய்வு, காலனிய எதிர்ப்பு சிந்தனை, கல்வி, சுகாதாரம், சமத்துவம் போன்ற பல சமூக மாற்றங்களின் தந்தையாக இருந்தவர் என்றால் மிகையாகாது.

லெனினின் புரட்சி சிந்தனைகள் மக்களால் வரவேற்கப்பட்டாலும் எதிர்ப்பு விமர்சனங்களுக்கும் ஆளானார் அவர்.

இதையும் படியுங்கள்:
சோவியத் யூனியன்: லெனின் எழுதிய கடிதம்... காணாமல் போய் கிடைத்த மர்மம்!
Vladimir Lenin

குறிப்பாக ஜனநாயகத்தை ஒடுக்கினார் என்ற குற்றச்சாட்டு, அதிகார மையப்படுத்தல் (Authoritarianism), அரசியல் மாற்றத்தில் வன்முறை புரட்சியை நியாயப்படுத்தியது, கருத்து சுதந்திரக் கட்டுப்பாடு, பொருளாதாரக் கொள்கை குறைபாடுகள் என எதிர்ப்பு விமர்சனங்களையும் லெனினின் சவாலானது குறிப்பிடத்தக்கது.

1922-ல் சோவியத் ஒன்றியம் (USSR) உருவாக்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவால் அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகிய லெனின், 21 ஜனவரி 1924 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்.

புரட்சியின் வெற்றிகரமான தலைவராக ஆனால் ஜனநாயக வரம்புகளை மீறிய ஆட்சியாளரான லெனின், கம்யூனிசம், புரட்சி அரசியல் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் உலக வரலாற்றில் என்றும் இடம்பெறும். முக்கியமான இடம் பெற்ற தலைவராகக் கம்யூனிட்களால் கொண்டாடப்படுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com