

பொதுவாகவே, நிறங்களான கருப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஊதா, மேலும் சில துணை நிறங்கள் பல்வேறு சிறப்புகளை நமக்கு உணர்த்துகின்றன. அவற்றில் குறிப்பிடும்படியாக கருப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்ளும் அனைத்து அம்சங்களோடும் ஒத்துப்போகின்றன.
இதனில் கருப்பு என்பது தீமை, வெள்ளை என்பது அமைதியைக் குறிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே நன்மை, தீமை, நோ்மறை - எதிா்மறை சக்திகள் அமைவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதன்படியே, பள்ளிகளில் மழலையர்களுக்கும், ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கும் நிறங்களின் தன்மை பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கற்றுத்தர ஏதுவாக குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக நவம்பர் 28ம் நாள் கருப்பு - வெள்ளை தினமாக (Black and White Day) கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மாணவர்கள் கருப்பு வெள்ளை நிற உடையணிந்து வருகிறாா்கள். இது மாணவர்களுக்குக் கருப்பு, வெள்ளை நிறங்களின் தன்மையை அறிந்துகொள்ளும் விதமாகவும் கற்றல், கேட்டல், வரைதல், கருப்பு மை, கருப்பு பேனா, வெள்ளை காகிதம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பள்ளிகளில் வகுப்பறைகளில் பிளாக் போா்டுதான் பயன்படுத்தப் படுகின்றன.
கருப்பு போா்டில் வெள்ளை கலர் சாக்பீஸ் கொண்டு எழுதப்படுகிறது. அதே போல, கருப்பு வெள்ளை கொண்ட கண்களால் மட்டுமே அனைத்தையும் பாா்த்து அறிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் விளையாடும் கேரம்போா்டு, சதுரங்க விளையாட்டு போன்ற பல்வேறு விளையாட்டுகளும் கற்றுத் தரப்படுகிறது.
எதிலும் உள்ள நன்மை, தீமைகளையும் கருப்பு வெள்ளை போல கற்றுக்கொள்ள வழிவகை செய்வதோடு பிரதிபலிக்கவும் வைக்கிறது. முதன் முதலில் சினிமா கூட கருப்பு வெள்ளையில்தான் வந்தது. அதேபோல, காலப்போக்கில் விஞ்ஞானம் வளர வளர கலரில் திரைப் படங்கள் வருவது அதிகமானது.
இந்தக் கொண்டாட்ட தினமானது, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன. ஆக, நாமும் இந்த கருப்பு வெள்ளை தினத்தில் நன்மையும் தீமையும் கலந்ததே மனித வாழ்க்கை என்பதை உணர்ந்து செயல்படலாமே!