உலக அமைதிச் சுட்டெண் என்றால் என்ன? இந்தியாவின் அமைதிச் சுட்டெண் எவ்வளவு?

செப்டம்பர் - 21 உலக அமைதி நாள்!
World Peace Day...
World Peace ...Image credit - pixabay
Published on

லக அமைதிச் சுட்டெண் (Global Peace Index) என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும். Think Tank என்ற அமைப்பு இந்த அளவீட்டைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 ஆம் ஆண்டில் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதுவே உலக நாடுகளை அமைதி தொடர்பில் தரவரிசைக்குட்படுத்திய முதலாவது அறிக்கை என அறியப்படுகின்றது. இது ஆஸ்திரேலியத் தொழில் முனைவரான ஸ்டீவ் கில்லேலியாவின் சிந்தனையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் கோபி அன்னான், தலாய் லாமா மற்றும் பலரின் ஆதரவைப் பெற்று உருவானதாகும். உட்காரணிகளாக உள்நாட்டு வன்முறை, குற்றங்களின் அளவும், வெளிக்காரணிகளாக போர், இராணுவ செயற்பாடு களுக்கான செலவுகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டெண் பட்டியலில், உலகிலுள்ள நாடுகளில், 163 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் மிக அதிகத் தாக்கம் (Very High Impact), அதிகத் தாக்கம் (High Impact), நடுத்தரத் தாக்கம் (Medium Impact), குறைந்த தாக்கம் (Low Impact), மிகக் குறைந்த தாக்கம் (Very Low Impact) என்று 163 நாடுகளும் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மிக அதிகத் தாக்கம் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து, சிங்கப்பௌஉர், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், டென்மார்க், சுலோவேனியா, மலேசியா மற்றும் கனடா என்று மொத்தம் 11 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலத்த் தொடர்ந்து, அதிகத் தாக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில், செக் குடியரசு, பின்லாந்து, ஹங்கேரி, குரோசியா, பெல்ஜியம், ஜப்பான் என்று மொத்தம் 42 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு அடுத்ததாக, நடுத்தரத் தாக்கம் பட்டியலில், செர்பியா, கானா, கொசாவா, ஜாம்பியா, சீனா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட 64 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. குறைந்த தாக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில், காபூன், ஜிம்பாப்வே, உகாண்டா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. மிகக் குறைந்த தாக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, மியான்மர், ரசியா, உக்ரைன் உள்ளிட்ட 17 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
நம் வாழ்வில் தவறான நபர்களிடமிருந்து தள்ளியிருப்பதே சிறந்தது!
World Peace Day...

இப்பட்டியலில் ஐஸ்லாந்து 1.112 குறியீடுகளுடன் முதலிடத்தில் மிக அதிகத் தாக்கம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் கடைசியாக, ஏமன் 3.397 குறியீடுகளுடன் மிகக் குறைந்த தாக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் இந்தியா 116 ஆம் இடத்தில் நடுத்தரத் தாக்கம் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியல் ஆண்டுதோறும் மாறுதலுக்குட்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com