
எல்லா இரத்தமும் ஒரே மாதிரியான செயல்களைச் செய்கிறது, ஆனால் எல்லா இரத்தமும் ஒரே மாதிரியானவை அல்ல. இரத்த வகைகள் இரத்தத்தை வகைப்படுத்துகின்றன. பொதுவாக நான்கு ரத்த வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குணாதிசயங்கள் உள்ளது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
பொதுவாக "0+ "இரத்தம் உள்ளவர்களுக்கு மற்ற ரத்த வகைகளைக் காட்டிலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி சற்று அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஆராய்ச்சியின்படி, O+ குழுவில் உள்ளவர்கள், தொற்று நோய்களின் அபாயம் மிகக் குறைவாக இருப்பதால், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
O+ ரத்தக் குழுவைக் கொண்டவர்களுக்கு இதயநோய் போன்ற சில வகையான நோய்களின் ஆபத்து குறைவாக உள்ளது. O+ இரத்தக் குழுவைக் கொண்டவர்களுக்கு இயற்கையாகவே சுத்தமான இரத்தம் உள்ளது மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இரத்தத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. இதன் விளைவாக, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அபாயமும் குறைவாக உள்ளது, இது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
O+ இரத்தக் குழுவைக் கொண்டவர்களின் இரத்தத்தை யாருக்கும் எளிதில் மாற்ற முடியும். இந்த காரணத்திற்காக இந்த இரத்த குழு உலகளாவிய நன்கொடையாளர் என்று அழைக்கப்படுகிறது. 0+ ரத்தக் குழுவைக் கொண்டவர் களுக்கு ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது வயிறு தொடர்பான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்து செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
O பிரிவு ரத்த வகையை சேர்ந்தவர்கள் ரத்த காயங்கள் ஏற்படுவதில் இருந்து கவனமாக இருக்க வேண்டும். காரணம் இந்த வகை ரத்தம் பிரிவினர் மற்ற வகை பிரிவினரைவிட இரு மடங்கு அதிகமாக ஆபத்துக்களை சந்திப்பதாக ஜப்பான் பல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காரணம் இவர்களுக்கு ரத்த காயங்கள் ஏற்படும் போது இரத்தம் சீக்கிரம் உறைவதில்லை என்பது தான்.
'A' ரத்த வகை உள்ளவர்களுக்கு 60 வயதிற்குட்பட்டவர் களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 16% அதிகம். 'O' ரத்த வகை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 12% குறைவு. 'A' ரத்த வகை உள்ளவர்களுக்கு விரைவாக ரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரத்த தட்டுக்கள், ரத்த நாளச் சுவர்களின் அமைப்பு மற்றும் புரதங்களின் செல்வாக்கு காரணமாக ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ரத்தக் கட்டிகளால் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இருப்பினும், 60 வயதிற்குப் பிறகு இந்த ஆபத்து குறைகிறது என்கிறார்கள்.
A மற்றும் B ரத்த பிரிவினருக்குதான் ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் நெதர்லாந்து மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதே நேரத்தில் O பிரிவு ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு மற்ற பிரிவை சேர்ந்தவர்களை விட 9 சதவீதம் வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.
இதுவரை கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, பி ரத்த வகை கொண்டவர்கள் அதிக காலம் இளமையுடன் இருப்பதையும் நீண்ட காலம் வாழ்வதையும் உறுதி செய்கிறது. பி ரத்த வகை உள்ளவர்களின் இரத்த சிவப்பணுக்களில் பி எனும் ஆன்டிஜென் உள்ளது. இது ஏ ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. அது மட்டுமல்லாமல், பி ரத்த வகையில் சிறந்த செல்லுலார் சீரமைப்பு மற்றும் மீளுருவாக்கும் திறமை போன்றவை அதிகப்படியாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து கடந்த 2004ஆம் ஆண்டு டோக்யோவில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வந்த 269 பேரின் வாழ்முறை மற்றும் ரத்த வகையை ஆய்வு செய்தபோது, அதிக நாள்கள் வாழ்பவர்களில் பி ரத்த வகை உடையவர்கள் அதிகம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.