
நம் உடலில் எந்த நோய் வந்தாலும் அதற்கு முன்னாடியே நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரியும். கல்லீரல் பாதிப்பு ஏற்படப்போவதென்றால் முன்கூட்டியே சில அறிகுறிகளை வைத்து நாம் ஜாக்கிரதையாக செயல்படலாம். அந்த அறிகுறிகள் என்னென்ன வென்பதை பார்ப்போம். அதிலும் நீரிழிவு உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதை உணர்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
1. அதீத சோர்வு:
ஒரு நாளின் முடிவில் நமக்கு சோர்வாக இருக்கும். ஆனால், உடல்சோர்வு நாள் முழுவதும் இருந்தால் அது ஆபத்தானது. இது கல்லீரல் பாதிப்பை அடையாளம் காட்டும். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பாலும் சோர்வு அதிகமாகவே காணப்படும். நல்ல ஓய்வு இருப்பினும் சோர்வாகவே இருந்தால், கல்லீரல் செயல்பாட்டில் கோளாறு என்று அர்த்தம்.
2. சருமம் மற்றும் கண் மஞ்சளாகுதல்:
மஞ்சள் காமாலை கல்லீரலின் பாதிப்பால் ஏற்படுவதாகும். இரத்த சிவப்பு அணுக்கள் உடையும் போது 'பிலிரூபின்' என்ற பொருள் சுரக்கிறது. கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படும் போது இந்த பிலிரூபின் நீக்கப்படுகிறது. நன்கு செயல்படாத போது தீக்கப்படாததால் கண் மற்றும் சருமம் மஞ்சளாகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
3. வயிற்று வலி, வயிறு வீங்குவது:
வயிற்றின் வலது பக்கத்தில் வலி ஏற்படும். இது உங்கள் கல்லீரலில் எரிச்சல் உள்ளைதை குறிக்கிறது. மேலும் வயிற்றில் நீர்சத்து சேர்ந்து வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். இந்த மாதிரி ஏற்படுவதை Ascites என்று கூறுவார்கள். இது கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.
4. பசியின்மை மற்றும் எடைக் குறைவு:
கல்லீரலின் பாதிப்பு செரிமானத்தையும், பசியின்மையையும் ஏற்படுத்தும். அதிலும் நீரிழிவு உள்ளவர்களுக்கு இப்படி ஏற்பட்டால் எடைக்குறைவு மற்றும் வலிமையுள்ள தசை பாதிப்பு ஏற்படும். இதனால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படாமல் போகும். இதனால் எடை குறைந்து சோர்வாக காணப்படுவீர்கள்.
நீரிழிவை சரியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிசில் கொண்டு விடும். நரம்புகள் பாதிக்கப்படும். ஆகவே, நீரிழிவை கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)