
பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றன. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல விஷயங்கள் மூளையின் செயற்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு மூளையை குழப்பும் செயற்பாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சில மனித பழக்கவழக்கங்கள் மூளையின் ஆற்றலைக் குறைக்கின்றன. அது உங்களிடம் இருந்தால், அந்தப் பழக்கங்களை உடனடியாக மாற்றி கொள்ளுங்கள்.
மூளையை பாதிக்கும் பழக்கங்கள்
காலை உணவை தவிர்ப்பது: காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகும், மேலும் இது நாள் முழுவதும் செயல்பட உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. அன்றைய தின செயல்பாடுகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஒருவரை தயார் படுத்துவது நம் உண்ணும் காலை உணவு தான். அதனை தவிர்ப்பதால் அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் மற்றும் தலைவலி, சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும். ஒரு குறிபிட்ட நேரம் தொடர்ந்து உணவை தவிர்ப்பது நம் உடலில் ஹார்மோன் செயல்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். இந்தியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிசன் ஆய்வாளர்கள்.
அதிக காபி எடுத்துக் கொள்வது: அளவுடன் காபி சாப்பிடுவது தவறல்ல . ஆனால் காலையில் அதிகமாக காபி குடிப்பதால் அமைதியின்மை, எரிச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையும் ஏற்படுகின்றது. காபீன் அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து மூளையின் செல்பாட்டில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
அதிக செல் போன் பயன்பாடு: காலையில் எழுந்தவுடன் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எழுந்தவுடன் உடனடியாக உங்கள் மொபைலைப் பார்ப்பது மன அழுத்தத்தை அதிகரித்து உங்களை சோர்வடையச் செய்யும். இது உங்கள் பார்வை மற்றும் மூளையின் செயல்பாட்டை வலுவாக பாதிக்கின்றது.நீங்கள் ஒவ்வொரு முறையும் செல்போனை பயன்படுத்தும் போது உங்களிடம் பற்றிக் கொள்ளும் பதட்டமும் ஆர்வமும் உடலில் மன இறுக்கத்தை ஏற்படுத்தும் 'கார்டிசால்' எனும் ஹார்மோனை அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது அதன் விளைவாக மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் 'டோபோமைன்' குறைக்கிறது என்கிறார்கள் அமெரிக்க கனெக்டிகட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
தூக்கம் தவிர்த்தல்: மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தூக்கமின்மை நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை ஊசலாட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே, மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க, குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம்.உங்களுக்கு தினமும் எவ்வளவு ஓய்வு தேவை என்பதை உங்கள் மூளையே தீர்மானிக்கிறது.
அலாரம்பயன்படுத்துவது , மூளையை கட்டாயப்படுத்தி எழுப்புவதற்கு சமம்.இயல்பாக குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுங்கள். பகல் நேரத்தில் 20 நிமிடங்கள் தூங்குவது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜங்புட் பழக்கம்: அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வகையான உணவுகள் மூளையின் செயல்திறனை கடுமையாக பாதிக்கிறது என்கிறார்கள்.நியூசிலாந்து ஒட்டாகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பாஸ்ட் புட் அதிகமாக சாப்பிடும் குழந்தைகளின் மூளைத்திறன் குறைந்து அவர்களால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற சிரமப்படுவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மூளையின் ஆரோக்கியத்தை காக்க இவ்வாறான விசயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
மூளை மூடுபனி என்பது சரியாக சிந்திக்கும் திறனைப் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான நிலையாகும். இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக இது ஏற்படுகிறது. மூளை மூடுபனிக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய மூளை மூடுபனியை நிர்வகிக்கலாம். மூளை மூடுபனியைக் குறைத்து மன தெளிவை மீண்டும் பெற சில உணவுகள் உதவும். அவைகளை பற்றி பார்ப்போம்.
கீரைகள், வால்நட், நல்ல நிறமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது மூளையின் செயல் திறனுக்கு நல்லது என்பதை இஸ்ரேல் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அன்றாட உணவில் ப்ளூபெர்ரிகளைப் பல்வேறு வழிகளில் சேர்ப்பதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பிளாக் சாக்லேட், மீன், பாதாம், பிஸ்தா மற்றும் உலர் பருப்புகள் ,பயிறு மற்றும் பருப்பு வகைகளை வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிடுகின்றவர்களுக்கு நினைவுத் திறன் அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதோடு புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.