உலக பால் தினம்: இதய நோயாளிகளுக்கு எந்த பால் சிறந்தது?

உலக பால் தினம்: பாலின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வகைகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? இந்தியா முதலிடம் பிடித்ததன் பின்னணி குறித்து முழுமையாக அறியுங்கள்.
Milk nutrition and benefits
Milk nutrition and benefitsAI Image
Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 1 அன்று உலக பால் தினம் கொண்டாடப் படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2001-ல் இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் சிறப்பு அம்சங்கள் மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பாலின் முக்கியத்துவம் மற்றும் பால் பண்ணை தொழில் பங்களிப்பை அங்கீகரிக்கவும் கொண்டாடப்படுகிறது.

பாலின் வகைகள்

தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு பால் என பாலை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

  • தாய்ப்பாலில் கேசின் எனப்படும் புரதச்சத்து குறைவு.

  • அதுவே பசும்பாலில் அதிகம் உள்ளது.

  • எருமைப்பாலில் கொழுப்பு சத்து அதிகம்.

  • ஸ்கிம்டு மில்க்கில் புரதச்சத்து அதிகம், கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது.

அதனால் ஸ்கிம்டு மில்க் தான் அனைவருக்கும் நல்லது.

கொழுப்பு நீக்கிய பால் தான் அனைவருக்கும் நல்லது. இதய நோய் உள்ளவர்களும் பால் குடிக்கலாம்.

கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவே இருந்தாலும் அதைக் காய்ச்சி முதலில் அறைவெப்ப நிலைக்கு ஆற வைத்து மேலே படரும் ஆடையை நீக்கிவிட்டுத்தான் உபயோகிக்க வேண்டும்.

அந்த பால் ஏட்டை தனியே சேகரித்து வெண்ணையாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நெய் காய்ச்சலாம்.

பாலில் உள்ள வைட்டமின்கள்

பாலில் உடலுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் விட்டமின் பி, பி2, இயற்கையாகவும் செறிவூட்டப்பட்டும் நிறைந்துள்ளன.

வைட்டமின்களும், நன்மைகளும்

  • வைட்டமின் ஏ - கண்பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

  • வைட்டமின் டி - எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க தேவையான கால்சியம் சத்தை உடல் உறிஞ்சி கொள்ள உதவுகிறது.

  • வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்) - உணவை ஆற்றலாக மாற்றவும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

  • வைட்டமின் பி12 - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது. மத்திய நரம்பு மண்டலத்திற்கும் துணை புரிகிறது.

  • கால்சியம் - எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

  • புரதம் - உடல் திசுக்களை நன்கு பராமரித்து சரி செய்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகள், உறுப்புகள், தசைகள், நகங்கள், முடிக்குத் தேவையான அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பால் பாக்கெட் நிறங்களின் ரகசியம்: நீங்கள் வாங்கும் பால் உங்களுக்கு ஏற்றதுதானா?
Milk nutrition and benefits
  • நியாசின் (பி3) - பாலில் உள்ள நொடிகளை உடைத்து அவற்றை ஆற்றல் ஆக பயன்படுத்த உதவுகிறது.

  • துத்தநாகம் - நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும் இயல்பான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் ஆரோக்கியமான சருமத்திற்கும் இது உதவுகிறது.

  • அயோடின் - கர்ப்பகாலத்திலும் குழந்தை பருவத்திலும் எழுந்து மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும் குழந்தை பருவத்தில் அறிவாற்றல் செயல்பாட்டுக்கு இது உதவுகிறது.

  • பொட்டாசியம் - இதய ஆரோக்கியத்திற்கும், இயல்பான தசை செயல்பாட்டிற்கும் துணை புரிகிறது. மேலும் ரத்த அழுத்தம் மற்றும் உடலின் திரவச் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

  • பாலில் உள்ள பெரும்பாலான புரதங்கள் கேசினில் உள்ளது. இது உண்மையில் புரதங்களின் குழு ஆல்பா கேசின் மிக அதிகமாக உள்ளது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உறிஞ்சிப்படுவதை அதிகரிக்கும் கேசின் திறன் உங்கள் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மாநிலம் முதல் இடத்திலும் ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளன.

பால் உற்பத்தி மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதில் 75% பெண்கள் பயனடைகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com