
ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கருப்பு வெள்ளை புகைப்படங்கள் முதல் இன்று நாம் விரும்பும் விதத்தில் மாற்றிக்கொள்ளும் வரை தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கு கேமரா இரவலாக வாங்கிய காலம் நிமிடத்திற்கு எத்தனை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற காலம் வரையில், புகைப்படங்கள் நம்மை செல்போனிலும் இப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கின்றன.
வரலாறு:
லூயிஸ் டகுரே என்பவர் புகைப்பட கலையை கண்டுபிடித்ததை நினைவு கூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. புகைப்பட வரலாற்றில் மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் புகைப்படக் கலை மற்றும் அறிவியலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
1837-ம் ஆண்டு முதல் புகைப்பட செயல் முறையான டகுரியோ வகை, ஃபிரெஞ்ச் மென் லூயிஸ் டகுரே ஜோசப் நைஸ்ஃபோரே நைப்ஸ் ஆகியோர் ஒட்டி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிரஞ்சு அகாடமி சயின்ஸ் இந்த முறையை அறிவித்தது. அதே ஆண்டு பிரெஞ்சு அரசு இந்த கண்டுபிடிப்புக்காக காப்புரிமை பெற்று உலகுக்கு இலவச பரிசாக வழங்கியது.
எனினும் வண்ண புகைப்படங்கள் 1861 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் எடுக்கப்பட்டன. முதல் டிஜிட்டல் கேமரா கண்டுபிடிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1957ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் புகைப்படம் எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இதன் முக்கியத்துவம்:
உலக புகைப்பட தினம் புகைப்படம் எடுப்பதை கலை என்றும் புகைப்பட கலைஞர்கள் பல்வேறு தொழில்நுட்பங்கள், ஸ்டைல் மற்றும் கம்போசிசன் ஆகியவற்றை பயன்படுத்தி பல அழகான காட்சிகளை படம்பிடிக்க வலியுறுத்துகிறது. அழகான கதைகள் சொல்வதிலும் உணர்வுகளை படம்பிடிப்பதையும் நினைவுகளை பாதுகாத்து வைத்துக் கொள்வதிலும் புகைப்பட கலையின் சக்தியை காண்பிக்க ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கியத்துவம்.
புதிய தொழில்நுட்பங்கள் குறித்த வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்து கொள்வது, புகைப்படக் கலைஞர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள், கதை, படங்கள் குறித்து பேசுவது, அவர்களின் கிரியேட்டிவ், செயல் துறை குறித்து பேசுவது இந்த நாளில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கொண்டாட்டம்:
உலகம் முழுவதிலும் உள்ள புகைப்பட கலைஞர்கள், மற்றும் புகைப்பட ரசிகர்கள் அதன் புகைப்பட விரும்பிகள் வித்தியாசமான புகைப்படங்கள் எடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். அதை சமூக வலைதளங்களில் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தும் புகைப்பட நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தியும் மகிழ்கின்றனர்.
புகைப்பட கண்காட்சிகள், பைலரகங்கள், போட்டிகளும் உலக புகைப்பட நாளில் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் மூலம் புகைப்படக் கலைஞர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்கிறார்கள். புகைப்படங்கள் வரலாறு, கலாச்சாரம் தனி நபரின் அனுபவங்கள் ஆகிய அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகிறது.
இந்த நாளில் அனைவரும் சிறந்த புகைப்படங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குறித்தும் பேசுகிறார்கள். புகைப்படக்கலைஞர்களை கொண்டாடியும் பரிசுகள் கொடுத்தும் அங்கீகரிக்கும் நாளாக இந்த நாள் அமைகிறது.
சான்றுகள்:
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், மக்கள் போன்ற அனைத்து தரப்பையும் மக்கள் உணர்த்த வேண்டும். அதைக் கேள்விகள் எழுப்பும் கதை சொல்லும் புகைப்படமாக இருக்க வேண்டும்.
அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சமூக கருவியே புகைப்படம். ஓவியங்களின் அடுத்த கட்ட மேம்பாடாகவே பெயிண்டிங் வித் லைட்ஸ் என புகைப்படம் திகழ்கிறது.
2015 ஆம் ஆண்டில் துருக்கி கடற்கரையில் சிரியாவை சேர்ந்த சிறுவன் கரை ஒதுங்கிய புகைப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
இது போன்ற பல விழிப்புணர்வுகளை உலகில் அரங்கேறியதற்கு புகைப்படம் ஒரு சான்றாக இருக்கிறது. ஒரு நல்ல புகைப்படம் என்பது கலைஞன் பார்த்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இப்படி ஃபிரேமின் மூலம் பல்லாயிரம் கதை சொல்லும் புகைப்படக் கலைஞர்களுக்குப் புகைப்பட தின வாழ்த்துக்கள்!