சரும நிற மாற்றம் - நோயறிதலை விரைவுபடுத்தவும், சிகிச்சை முறைகளை உருவாக்கவும் உதவும் AI

ஜூன் 25: World Vitiligo Day
World Vitiligo Day)
World Vitiligo Day
Published on

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் நாளன்று, உலகத் சரும நிறமி இழத்தல் நாள் அல்லது உலக வெண்புள்ளி நாள் (World Vitiligo Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெண்புள்ளிச் சுகாதாரம் மற்றும் கல்விக்கான முயற்சியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மைக்கேல் ஜாக்சனின் மரணத்தை நினைவுகூரும் வகையில், விட்டிலிகோ விழிப்புணர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளைக் கொண்டாடும் நோக்கில், சரும நிறமி இழத்தல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Vitiligo Research Foundation) நிர்வாக அதிகாரி யான் வாலே ஜூன் 25 ஆம் நாளைத் தேர்வு செய்தார்.

இந்த அடையாளம் காணப்படாத நோய் மற்றும் சரும நிறமி இழத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அதன் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீர்மானத்துடன், உலகெங்கிலும் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் சவால்களை முன்னிலைப்படுத்துவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாளின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

சரும நிறமிகள் இழந்து, சருமத்தின் நிறம் வெள்ளையாக மாறும் பாதிப்பினை ‘சரும நிறமி இழத்தல்’ (Vitiligo) என்கின்றனர். சருமத்தின் நிறமிச் செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. மனித உடலில் உள்ள சருமம் மற்றும் முடியின் நிறத்தை மெலனின் என்ற வேதியியல் நிறமி பொதுவாக தீர்மானிக்கிறது.

உலகளவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்களை வெண்புள்ளி பாதித்திருக்கிறது. அதாவது, உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 1% அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம் எனப்படுகிறது. ஒரு சில குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் மட்டும் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீத மக்கள் தொகையில் பாதிப்பு ஏற்படுகிறது.

இது அனைத்து பாலினத்தவர்களுக்கும், அனைத்து இனக் குழுக்களுக்கும் ஏற்படலாம்.

இப்பாதிப்பானது, பொதுவாக 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களையே அதிகமாகப் பாதிக்கிறது.

அடிசனின் நோய், ஹாஷிமோட்டோ தைராய்டியம் மற்றும் வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் பெரும்பாலும் சரும நிறமி இழத்தல் பாதிப்படைந்தவர்களைத் தாக்குகிறது.

உடலின் எந்தப் பகுதியிலும் நிறமி இழப்பு ஏற்படுவதே இந்நோயின் முக்கிய அறிகுறியாகும். சருமத்தின் நிறமாற்றம் பொதுவாகச் சூரிய ஒளியில் வெளிப்படும் பகுதிகளில் தொடங்குகிறது. இந்த உடல் பாகங்களில் கைகள், கைகள் மற்றும் முகம் ஆகியவை அடங்கும். சிலருக்கு, சரும நிறமி இழப்பானது உடலின் ஒரு சில பகுதிகளை மட்டுமே பாதிக்கிறது.

மற்றவர்களுக்கு, நிறமி இழப்பு உடலின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படுகிறது. சிலருக்கு உடல் முழுவதும் நிறமி இழப்பு பரவலாக ஏற்படலாம். இதேப் போன்று, தலை, கண் இமைகள், புருவங்கள் அல்லது தாடியில் முடி முன்கூட்டியே வெண்மையாதல், பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு, சளி சவ்வுகளின் நிறமாற்றம், கண் விழித்திரையின் உட்புறப் புறணியின் இழப்பு அல்லது நிறமாற்றம் போன்ற அறிகுறிகளும் இருக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறந்த 10 வகை சாலட்கள்!
World Vitiligo Day)

உடலில் நோயை ஏற்படுத்தாது, துன்பத்தைத் தராது எனினும் பாதிப்படைந்தவர்கள் மன வேதனையுடன் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். ஆட்டோ இம்யூன் கோளாறுகள் உள்ளவர்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் சரும நோய் மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளாலும் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இதற்கு எந்தச் சிகிச்சையும் இல்லை என்றாலும், குறிப்பிட்ட சிகிச்சைகள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் உலக வெண்புள்ளி நாளிற்கான கருப்பொருள் உருவாக்கப்பட்டு, அதனை மையமாகக் கொண்டு, பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் அந்நோய் குறித்த விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக, “ஒவ்வொரு சருமத்திற்கும் புதுமை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது" (Innovation for Every Skin, Powered by AI) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே உண்மையான மற்றும் பயனுள்ள வெண்புள்ளி தகவல்களை அணுகுவதை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்துவதில் இந்த கருப்பொருள் கவனம் செலுத்தும். மேலும் வெண்புள்ளி சமூகக் குழுவிற்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதையும், அவர்களின் தனிப்பட்ட சுயாட்சியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கொகுடிக் கோயில் என்றால் என்ன தெரியுமா?
World Vitiligo Day)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com