2024ல் இதுவரை 12 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு அரை டஜன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
சௌரப் திவாரி 2024-ல் ஓய்வு பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். சவுத்பா ஜார்கண்டிற்காக 17 ஆண்டுகள் முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடினார். மேலும், 2021 வரை ஐபிஎல்லில் இடம்பெற்றார்.
ஜார்கண்டின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனும் ரஞ்சி டிராபிக்குப் பிறகு ஓய்வு பெற்றார். 2011 - 2015-ல் இந்தியாவுக்காக 9 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினேஷ் கார்த்திக் 2004-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவில் 2022 ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் போது இந்தியாவுக்காக அவர் கடைசியாக விளையாடினார். 2004 - 2022 வரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 17 அரை சதங்களுடன் 3463 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் 2024க்குப் பிறகு, கார்த்திக் சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
39 வயதான கேதார் ஜாதவ் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஜூனில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்காக 73 ODI மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி டி20, உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் ஆட்டமிழந்த பிறகு, கோலி தனது ஓய்வை அறிவித்தார். 2010ல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான கோலி 125 போட்டிகளில் விளையாடினார்.
ஐசிசி டி 20, உலகக் கோப்பை 2024 கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். ரோஹித் 159 டி20 போட்டிகளில் விளையாடி 140.89 ஸ்டிரைக் ரேட்டில் ஐந்து சதங்கள், 32 அரை சதங்கள் மற்றும் 205 சிக்சர்களுடன் 4231 ரன்களை எடுத்துள்ளார் (அதிகமாக டி20யில்).
மூத்த இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 2024 ஐசிசி, டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு தனது டி20ஐ ஓய்வை அறிவித்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார். 7.13 என்ற எகானமி விகிதத்தில் 54 விக்கெட்டுகள், 515 ரன்கள் எடுத்துள்ளார் .
ஷிகர் தவான் 2022-ல் இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டத்தை விளையாடினார். ஐபிஎல் உட்பட அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் தவான் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். 2010 - 2022க்கு இடையில் இந்தியாவுக்காக 34 டெஸ்ட், 167 ODI மற்றும் 68 T20I போட்டிகளில் பங்கேற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 சதங்கள் மற்றும் 55 அரை சதங்களுடன் ஒட்டுமொத்தமாக 10867 ரன்கள் எடுத்துள்ளார்.
பஞ்சாபின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் 31 வயதில் ஓய்வை அறிவித்தார். 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2024-25 ரஞ்சி டிராபி சீசனின் முடிவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் பெரும்பாலும் எம்எஸ் தோனி மற்றும் ரிஷப் பந்த் நிழலின் கீழ் இருந்தார்.
34 வயதான இந்திய பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் நவம்பர் 28, 2024-ல் ஓய்வை அறிவித்தார். ஆனாலும், இந்தியாவிற்கு வெளியே உள்ள மற்ற லீக்குகளிலும், டி20 லீக்குகளிலும் விளையாடுவார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010-ல் அறிமுகமான அஸ்வின் 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 537, 156 மற்றும் 72 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்தையா முரளிதரனுடன் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 தொடர் நாயகன் விருதுகளை வென்றவர் என்ற சாதனையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.